Tag Archive: நவீன இலக்கியம்

நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?

  நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் என்ன வேறுபாடு? பழைய ஒரு நகைச்சுவை உண்டு. ஓட்டலில் சாப்பிடச்சென்றவர் கேட்கிறார் ‘தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?’ பரிமாறுபவர் பதில் சொல்கிறார், ‘கெட்டிச்சட்னி இருக்கிறது, துவையல் இருக்கிறது’ கேட்பவருக்கு கொஞ்சம் குழப்பம். ‘இரண்டுக்கும் நடுவே என்ன வேறுபாடு?’ பரிமாறுபவர் யதார்த்தமாகப் பதில் சொல்கிறார் ‘இரண்டு நாள் வேறுபாடு’ ஆம், நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு இரண்டாயிரம் வருடம்தான். நவீன இலக்கியத்தின் தலை இந்த நூற்றாண்டில் உள்ளது. வால் மரபிலக்கியத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8156

இலக்கியமும் நவீன இலக்கியமும்

  தமிழகத்து கோயில்களின் சடங்குகளைப்பற்றிய ஓர் உரையாடலில் குமரிமைந்தன் சொன்னார், ‘நான் நாத்திகன். ஆனால் கோயில் சடங்குகளை மாற்றக்கூடாது என்றே சொல்வேன். ஏனென்றால் அவை மாபெரும் பண்பாட்டு ஆவணங்கள். அவற்றில் நாம் இன்னும் அறிந்திராத தமிழ்ப்பண்பாட்டுத் தகவல்கள் உறைந்துள்ளன’ நான் அதைப்பற்றி மேலும் யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு பொருளை மதச்சடங்குக்கும், கோயில்வழிபாட்டுக்கும் பயன்படுத்துகிறோமா இல்லையா என்பது எவ்வளவு முக்கியமான தகவல்! உதாரணமாக கன்யாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 16 வகையான வாழைப்பழங்கள் பயிராகின்றன. ஆனால் ஒரே ஒரு பழத்தை மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8114

இலக்கியமும் பாலுணர்வும்

வணக்கம் ஜெயமோகன், ஒரு படைப்பாளிக்கு சமூகப் பொறுப்புணர்வு அவசியமா? இல்லை தனது புனைவுலகத்தில் எவ்வித வக்கிரங்களையும், இழிசெயல்களையும் திணித்து எழுதுவது படைப்பாளியின் தனிப்பட்ட உரிமையா? என்கிற கேள்வி எனக்குள் சமீப காலங்களாக எழுகிறது என்றால் சில இளந்தலைமுறை படைப்பாளிகளின் கதையைப் படிக்க நேர்ந்த போதுதான். மனித அறத்தை வலியுறுத்திதான் நமது பண்டைய இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்றைக்கு கட்டுடைத்தல் என்கிற எண்ணமோ தெரியவில்லை படைப்பு என்பது சுய அரிப்பைத் தீர்த்துக்கொள்ளும் களமாக இருப்பதாகவே தோன்றுகிறது. குறிப்பாக பாலியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75788

வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்

வேதாந்தம் மற்றும் அத்துவிதம் குறித்து மனக்கசப்புகளும் முன்தீர்மானங்களும் நிரம்பிய ஒரு சூழலில் நின்றபடி நாம் பேசுகிறோம்  . இந்த மனக்கசப்புகளின் நடைமுறை அரசியல்த்தளங்களுக்கு நான் செல்ல விரும்பவில்லை . அவை நாமனைவரும் அறிந்தவையே. வேதாந்தம் அல்லது அத்துவிதம் என்ற சொல்லே இங்கே நமக்கு கசப்பு அளிப்பதாக ஆனது ஏன் என்பதை மட்டும் முதலில்பார்க்கலாம் தமிழ்ச் சூழலில் சங்கரவேதாந்தம் இன்று ஒரு பழமைவாத அமைப்பின் முக அடையாளமாக உள்ளது. அவ்வமைப்புக்கு எதிராக சுதந்திர சிந்தனையாளர்களின் பல வழியினர் நடத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/474

புரியாதகதைகள் பற்றி….

அண்ணா லூசிஃபரின் கதை எனக்குப் புரியவில்லை, மன்னிக்கவும், அது என்ன வகைக் கதை, எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், ப்ளீஸ் விளக்கிச்சொல்லுங்கள். கார்த்திக் ஓசூர் அன்புள்ள கார்த்திக், நவீன இலக்கியம் பற்றி தமிழில் பேச ஆரம்பித்து நூறாண்டுகளாகின்றன. அன்று முதல் இன்றுவரை ‘புரியாமை’ என்ற விஷயத்தை விளக்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ‘இந்தப்படைப்பு புரியவில்லை’ என்ற வரியை படைப்புமீதான குற்றச்சாட்டாக முன்வைப்பதே தமிழின் பொதுவாசகர்களின் வழக்கம். அதையொட்டிய எரிச்சல்கள், நக்கல்கள், வசைகள் வெளிப்படுகின்றன. வணிக எழுத்தில் ஊறியவர்களின் பொது எதிர்வினையே அதுதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41185

திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2

திராவிட இயக்கத்தின் அறிவுப்புலத்தில் உருவானவர் நீங்கள்…அந்த தாக்கம் உங்கள் எழுத்தில் எந்தவகையில் நீடிக்கிறது? நான் எழுதும் நடை என்பது முதலில் திராவிட இயக்கத்தில் இருந்து ஊக்கம் பெற்றுக்கொண்டதே. அந்த இயக்கத்தின் மொழிநடையின் சிறந்த அம்சங்களை மட்டுமே நான் எடுத்துக்கொண்டேன். திராவிட இயக்க அழகுத் தமிழ் வீச்சும், லா.ச.ராமமிருதம், தி. ஜானகிராமன், புதுமைப்பித்தன் போன்றவர்களது இலக்கிய நடையழகும்சேர்ந்ததொரு தத்துவமயக்க எழுத்து நடை எனது ஆரம்பகாலக் கதைகளில் பாலில் தண்ணீர் கலப்பு போல வந்தமைந்திருந்தது. உதாரணத்திற்கு, ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9385

கடிதங்கள்

வழக்கமாக கடிதங்களை அப்படியே ஆங்கிலத்தில் வெளியிடுவதில்லை. மொழியாக்கம்செய்தே வெளியிடுவென். இப்போது நேரமில்லை. பல கடிதங்கள் மிகவும் பிந்திவிட்டன. ஆகவே அவற்றை வெளியிடுகிறேன் Hi Jeyamohan sir, Nice writing to you. Hope you are doing well. Sorry for not writing in Tamil. I am a regular to you blog. I wanted to write this about your views about gandhi. I have been reading …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8529

நவீன இலக்கியம், கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இந்த கடிதத்தை தனிப்பட்ட முறையில் எழுதுகிறேன். நீங்கள் ஒரு கல்லூரியில் ஆற்றிய உரையைக் வாசிக்க நேர்ந்தது. பெரும் ஏமாற்றம் அடைந்தேன். சுவாரசியமான உரை. ஆனால் ஒரு கல்லூரியில் சுவாரசியமான உரைகளுக்கு என்னவேலை? நீங்கள் இன்றைய சிந்தனைகளை அல்லவா அங்கே முன்வைத்திருக்க வேண்டும்? நீங்கள் அதற்கு தகுதியானவர். நாமிருவரும் கடந்த இரு வருடங்களாக பேசிவருவதில் இருந்து நான் அதை நன்கறிவேன். பின் நவீனத்துவம், நவசரித்திரவாதம், வாசகஎதிர்வினைக்கோட்பாடு உரைமாற்றாடல் விமர்சனம் என இன்று நவீன இலக்கிய சிந்தனைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8230

நவீன இலக்கியம்- கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, தாங்கள் தளத்தில் சமீபத்தில் வெளியான இரண்டு கட்டுரைகளுக்கு எதிர்வினையாகவே இந்தக் கடிதம். முதலில் நவீன இலக்கியம் வாசிக்கும் முறை பற்றி நீங்கள் அழகாக விவரித்திருந்தது கண்களைத் திறப்பதாக இருந்தது. என் குறுகிய வாசிப்பு அனுபவத்தில் கவிதையைப் புரிந்து கொள்வது என்பது வாசித்த உடன் அது தரும் கவிதை அனுபவத்தைச் சார்ந்து இருக்கிறது என்று ஒரு அளவு கோல் வைத்திருந்தேன். கல்யாண்ஜி, தேவ தேவன், தேவ தச்சன், ஞானக்கூத்தன் போனதோர் கவிதைகள் எளிமையாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8186

யாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

முகலாய ஓவியங்களைக் கவனித்திருப்பவர்கள் இதைக் கண்டிருக்கலாம். முகலாய பாதுஷாக்கள் கையில் ஒரு ரோஜா மலரை முகர்ந்தபடித்தான் வரையபட்டிருப்பார்கள். அந்தரப்புரக் காட்சிகளிலும், அரசவைக் காட்சிகளிலும் மட்டுமல்ல.பெரும் போர்க்களக் காட்சிகள், வேட்டைக் காட்சிகளில் கூட. முகலாய -சூஃபி மரபில் ரோஜா என்பது ஒரு மலர் மட்டுமல்ல. எரியும் பாலைவெளியில் அப்படிப்பட்ட ஒரு செடி வளர்ந்து அவ்வழகிய மலரை எப்படி உருவாக்குகிறது? முற்றிலும் கைக்குச் சிக்கக்கூடிய ஜடப்பொருளான மலருக்குள் இருந்து தொடமுடியா அற்புதமான மணம் எப்படி வந்தது? இப்பிரபஞ்சம் இறைமயம் என்பதற்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/213

Older posts «