Tag Archive: நவீன்

மனசிலாயோ?

‘ திருவனந்தபுரம் உலகப்பட விழாவில் வைத்து நவீனின் இந்தக்குறிப்புக்களை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு கலைப்படத்திற்குண்டான களமும் கருவும் என்று பட்டது. மணமுறிவு பெற்ற கதைத்தலைவன். அவனுக்கு கழுத்துவலி. அது உள்ளத்தின் வலியாகவும் இருக்கலாம். அவன் எழுத்தாளனும்கூட. ஒரு அன்னியநாட்டில் அறியா நிலத்தில் சிகிழ்ச்சைக்காக வருகிறான். அங்கே விடுதியில் தங்கியிருக்கிறான். பலரை சந்திக்கிறான். பயணம் செய்கிறான். உடலும் உள்ளமும் மெல்ல மீள்கின்றன. அது ஒருவகை தன்மீட்பாகவும் அமைகிறது. திருவனந்தபுரம் ஆயுர்வேத சிகிழ்ச்சைக்குச் செல்வதற்கு முன் நவீன் என்னைப்பார்க்க வந்திருந்தார். புதிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116111

சிற்றிதழ் என்பது…

வழக்கமாக தமிழகத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கங்களே பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையங்களாக இருக்கும். அவை மாலையுணவு, அரட்டை, சினிமா, சில்லறை கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆகியவற்றையே பண்பாட்டுச் செயல்பாடுகளாகக் கொண்டிருக்கும். இலக்கியம் என்றால் அவர்களைப் பொறுத்தவரை பரவலாக உள்ள அரசியல் செயல்பாடுகளின் பகுதியாக ஒலிக்கும் கூக்குரல் உற்பத்தி மட்டுமே. அவற்றுக்கு அப்பால் உள்ள இலக்கியம் சிந்தனை ஏதும் அவர்களுக்கு தெரிந்ததாகவே இருக்காது. விதிவிலக்காக, மலேசியாவில் நவீனத் தமிழிலக்கியத்தின் ஒரு தொடக்கம் நிகழ்கிறது என்பதை பலவகையாகப் பதிவு செய்திருக்கிறேன். நவீன், யுவராஜ்,பாலமுருகன் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79870

பெண்ணெழுத்து -நவீன்

இங்கு வழக்கமாக எழும் கேள்வி , “எங்க படைப்புகளைத் தரம் பிரிக்க நீ யாருலா?” என்பதுதான். நான் ஒரு வாசகன் . கொடுக்கப்படும் நூல்களை பொருட்படுத்தி வாசிக்கிறேன். அதன் மூலம் சமகால இலக்கியம் குறித்த எனது அபிப்பிராயத்தோடு ஒப்பிடுகிறேன். அதன் வழி ஒரு படைப்பு எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றால் அதை சொல்கிறேன். என் அபிப்பிராயத்தை யாரும் நிராகரிக்கலாம். ஏன், நாளை மறுவாசிப்புக்குப் பின் நானே கூட நிராகரிக்கலாம். ஆனால், இன்றுவரை உள்ள வாசிப்பு அனுபவத்தில் மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57731

நவீன் – ஒரு கடிதம்

அன்புமிக்க ஜெயமோகன் சார் அவர்களுக்கு, நான் உங்களுக்குக் கடிதம் எழுதுவது இதுவே முதல் முறை. தாங்கள் சுட்டியிருந்த ம.நவீனின் கட்டுரையை வாசித்து வியப்படைந்தேன். அதற்குக் காரணம் இந்த வரி. /நான் நாவலை வாசித்திருக்க வேண்டும் என்பதற்காக வாசித்திருக்கிறேன். அதை அகங்காரம் என்று சொல்லலாம். ‘வாசித்துமுடித்துவிட்டேன்; இதுதான் கதை’ எனச் சொல்ல மட்டுமே அந்த அகங்காரம் எனக்கு உதவியது. ஒரு நாவலை தட்டையாகப் புரிந்துகொள்ள முயலும் வாசிப்பு அது./ இந்த வரி என்னைத் திகைப்படைய வைத்தது. நான் இதுகாறும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26589