13. எண்கற்களம் “தோல் என்று ஒன்றைப் படைத்த பிரம்மன் மானுடரின் உள்ளுறுப்புகளை பிறர் பார்க்கலாகாதென்று எண்ணினான் என்பது தெளிவு. பாண்டவரே, மொழியென்று ஒன்றை படைத்த கலைமகள் மானுடரின் உள்ளத்தை பிறர் காணலாகாதென்று எண்ணினாள் என்றே கொள்க!” என்றான் முண்டன். உச்சிப்பொழுது எட்டியதும் அவர்கள் கோமதி வளைவுதிரும்பும் முனை ஒன்றை அடைந்து அங்கிருந்த அன்னசாலையில் உணவுண்டபின் அருகிருந்த ஆலமரத்தடியில் படுத்திருந்தனர். மரத்திற்குமேல் பறவைகள் ஓசையிட்டுக்கொண்டிருந்தன. அவ்வப்போது ஓர் எண்ணத்துளி என இலையொன்று சுழன்றிறங்கியது. “முற்றிலும் அறியப்படாமலிருக்கவும் மானுடரால் இயல்வதில்லை. …
Tag Archive: நரர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/95273