Tag Archive: நமீபியா

கருநிலம் – 7 [நமீபியப் பயணம்]

நமீபியா ஒரு பெரிய நாடு. அதைப் பொதுவாக மூன்று பெரும் நிலப்பகுதிகளாகப் பிரிக்கலாம். மேற்கே கடற்கரையை ஒட்டியபகுதி பாலைவனம். தெற்கே கொஞ்சம் வளமான ஆற்றுப்படுகைகள் உண்டு. அங்கே மக்காச்சோளம் பயிரிடுகிறார்கள். கிழக்கே உள்ள கலகாரி பாலைவனம் உண்மையில் பாலைவனம் அல்ல, மேய்ச்சல்நிலம்தான் நாங்கள் ஒரேஒருவாரம்தான் திட்டமிட்டிருந்தோம். அதில் இருநாட்கள் சினிமா சம்பந்தமான விசாரணைகளுக்காகச் செலவாயின. எஞ்சியநாட்களில் கணிசமான நேரம் காரில் கழிந்தது. ஏனென்றால் பாலைவனத்தில் ஆயிரம் கிலோமீட்டரெல்லாம் ஒரு தூரமே இல்லை. ஆகவே ஒருபானைச்சோற்றுக்கு ஒரு சோறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30708

கருநிலம் – 6 [நமீபியப் பயணம்]

காலையில் எழுந்தபோது முந்தையநாள் ஒருசெக்கச்சிவந்த புன்னகைக்குள் தூங்கி எழுந்ததுபோல உணர்ந்தேன். விளக்கமுடியாத கனவுகள் வழியாகச் சென்ற தூக்கம். கூரைக்கூடாரத்துணி மேல் பொழிந்துகொண்டே இருந்த மணல் கனவுகளுக்குள் புகுந்தது. முன் தினம் மணலில் அலைந்தது முழுக்க இப்போது கனவுகளுடன் கலந்து நிகழ்ந்ததா என்றறிய முடியாதபடி ஆகிவிட்டிருந்தது. காலையில் மீண்டும் புல்வெளியைப்பார்த்தபடி மிதந்து வந்தோம். காலைப்பனியை மேய்ந்து கொண்டிருந்த மான்கள் எம்பி காற்றில் மிதந்திறங்கின. சில நெருப்புக்கோழிகள் ஆச்சரியமே இல்லாமல் திரும்பிப்பார்த்தன. நெருப்புக்கோழியின் தகவமைவு ஆச்சரியப்படுத்துவது. அது பாலைவனத்தின் உயரமில்லாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30698

கருநிலம் – 5 [நமீபியப் பயணம்]

செம்மணல்மலைகள் ஒவ்வொன்றுக்கும் எண்ணிடப்பட்டுள்ளது என்றார் டேவிட். நாற்பத்தைந்தாவது மணல்மலை உயரமானது, சாலையருகே இருப்பது. அதை வரும்போது பார்ப்போம். இப்போது சௌஸஸ்வெலி போவோம் என்றார். மணல்மலைகளின் ஊடாகச் சென்று ஒரு மையத்தை அடைந்தோம். அங்கேதான் நாம் சென்ற வாகனங்களை நிறுத்திவிட்டுப் பாலைவன வண்டிகளில் ஏறவேண்டும். அகலமான சக்கரங்களும் நான்குசக்கரங்களிலும் இயந்திர இணைப்பும் கொண்ட பெரிய வண்டிகள் அவை. நிஸான் வண்டிகளே அதிகமும் நமீபியாவில் தென்பட்டன. வண்டிநிறுத்துமிடமும் சூழலும் எல்லாமே நம்பமுடியாத அளவுக்குச் சுத்தமானவை. இந்தியாவில் எந்த ஒரு சுற்றுலாமையத்திலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30686

கருநிலம் – 3 [நமீபியப் பயணம்]

அதிகாலையில் காருடன் வருவேன் என்று டேவிட் சொல்லியிருந்தார். உண்மையிலேயே அதிகாலையில் வந்துவிட்டார். பகலில் வெயில் இருந்தாலும் எல்லாப் பாலைநிலங்களையும்போல நமீபியாவின் இரவுகள் குளிரானவை. நேரக்கணக்கு குழம்பிவிட்டிருந்தமையால் இரவில் தூக்கம்பிடிக்காமல் பேசிக்கொண்டே இருந்தோம். ஆகவே காலையில் அலாரம் எழுப்பியபோது உடம்பு முறுக்கிக்கொண்டு வலித்தது. ஒருவழியாக எழுந்து குளித்து கீழே வருவதற்குள் டேவிட்டை அரைமணிநேரம் காத்து நிற்கச்செய்துவிட்டோம். அவர் வரவேற்புப்பெண்ணிடம் சரசமாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘என் பழைய தோழி’ என்றார். ‘இப்போது?’ ‘இப்போது நான் திருமணம்செய்துகொள்ளப் போகிறேனே?’ கார் கிளம்பியதும் மனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30653

கருநிலம் – 2 [நமீபியப் பயணம்]

ஜொகன்னஸ்பர்க் காந்தியின் வரலாற்றுடன் இணைந்து அடிக்கடி காதில் விழுந்த பெயர். அங்கே காலையில் சென்றிறங்கும்போது காந்தி நினைவுகளாகவே வந்துகொண்டிருந்தன. காந்தி ஒரு இளம் வழக்கறிஞராகத் தயக்கத்துடன் வந்து இறங்கும் காட்சியை நினைத்துக்கொண்டே இருந்தேன். மகத்தான பிடிவாதமும் எதையும் அப்பட்டமாக எடுத்துக்கொள்ளும் தன்மையும் ஒருவரில் இணையும் என்றால் அவர் எந்தத் தளத்திலும் ஒரு மாமனிதராகவே ஆவார் என்று நினைத்துக்கொண்டேன். எளிமையும் நேரடித்தன்மையும் இருந்தால் உண்மை பிடிபட்டுவிடுகிறது, பிடிவாதம் அதில் அவரை நிலைக்கச் செய்கிறது. சிந்தனைத்திறன் ஒருவனை உண்மையில் இருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30640

கருநிலம் – 1 [நமீபியப் பயணம்]

சென்ற 4ஆம் தேதி காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மும்பைக்குக் கிளம்பினோம். கிளம்பிய அரைமணி நேரத்திலேயே ஒன்று தெரிந்தது, மாதவன்குட்டி ஒரு நிர்வாகி என்று. அவரது முதல் வெளிநாட்டுப்பயணம். ஆனாலும் பதற்றமே இல்லாமல் அவரே எல்லாவற்றையும் விசாரித்தார். சரிபார்த்தார். ஆகவே நான் எல்லாவற்றையும் அவரது பொறுப்புக்கே விட்டுவிட்டு நிம்மதியாக அமர்ந்துவிட்டேன். திருவனந்தபுரத்தில் நல்ல மழை. மதுபாலைக்கூப்பிட்டு ஒழிமுறியைப் பற்றிக் கடைசியாகப் பேசிவிட்டு செல்பேசியை அணைத்துவிட்டு மேகங்களில் மூழ்கி மறையும் நகரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். திருவனந்தபுரத்தை சற்று உயரத்திலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30618

நமீபியா , நிஜமாகவே

சென்ற தேதி நம்பீபியாசெல்வதற்காக நானும் இயக்குநர் மாதவன்குட்டியும் திருவனந்தபுரம் ரயில்நிலையத்தில் இருந்து கிளம்பி மும்பை சென்றோம். மும்பையில் கோகுலம் மூவிஸின் ஓய்வுவிடுதியில் தங்கிவிட்டு நள்ளிரவில் கிளம்பி விமானநிலையம் சென்றோம். பெட்டியை பாலிதீன் தாளால் உறையிட்டு, பாதுகாப்புச் சோதனை முடிந்து ஏர் ஆப்ரிக்காவின் வரவேற்பாளர் முன் நின்றபோது அவர் எங்கள் சீட்டுகளைப் பரிசோதித்துவிட்டு ‘டிரான்ஸிட் விசா எங்கே?’ என்றார். ’அது என்னது? ’ என்று கேட்டோம். தென்னாப்ரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க்கில் இறங்கி நமீபியாவின் விந்தோக் போகவேண்டுமென்றால் அது தேவை என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30170

நமீபியா பயணம்

இன்று நமீபியா கிளம்புகிறேன்.ஆப்ரிக்காமீது எனக்குள்ள மோகம் அ.முத்துலிங்கத்தால் உருவானது. அவரது எழுத்துக்களில்வரும் ஆப்ரிக்கா ஒரு மெல்லிய வேடிக்கை கலந்த ஓர் உலகம். ஆப்ரிக்காவுக்கு இவ்வளவு சீக்கிரமாக ஒரு பயணம் சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை. நானும் இயக்குநர் மாதவன்குட்டியும் செல்கிறோம். சென்று வந்தபின் அந்த அனுபவத்தைக்கொண்டு மலையாளத்தில் ஒரு படத்துக்கான கதையை எழுதவேண்டும். குஞ்சாக்கோ கோபன் நடிக்க மாதவன்குட்டி இயக்குகிறார். கதாசிரியர்கள் நட்சத்திரங்களாக உணரவேண்டுமென்றால் தெலுங்கில் எழுதவேண்டும் என்பார்கள். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக உணரலாம். மதியம் பன்னிரண்டு மணிக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29631

நமீபியா

ஒரு மலையாளப்படத்துக்காக நமீபியா செல்லவிருக்கிறேன். இயக்குநருடன். அங்குள்ள மணல்மேடுகள் புல்வெளிகளைப்பார்க்கவேண்டியிருக்கிறது. அதற்கான பயணமுகவர்கள் எல்லாமே ஹாலிவுட் அளவுக்கான பட்ஜெட் உள்ளவர்களையே மனதில்கொண்டிருக்கிறார்கள். அங்கே வேலைபார்க்கக்கூடிய, தொடர்புகள் இருக்கக்கூடிய நண்பர்கள் இருக்கிறார்களா? அதிக செலவில்லாமல் அங்கே நிலப்பகுதிகளைப்பார்க்க ஏதேனும் ஏற்பாடுகளுக்கு உதவக்கூடியவர்கள்? உதவக்கூடிய நண்பர்கள் தொடர்புகொள்ளலாம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/28533