Tag Archive: நந்தகோபன்

நந்தகோபன்

இதுவரை யசோதையை உணர்ந்தது போல் நந்தகோபனை உணர்ந்ததும் இல்லை தந்தையின் உணர்வுகளை அனுபவித்ததும் இல்லை.. தாயுமான உணர்வுகளின் உன்னதத்தை கூறிய அத்தனை எழுத்துக்களும் தந்தையுமான உணர்வுகளை அதிகம் பேசியதும் இல்லை. வாசிக்க வாசிக்க உலகோரின் அத்தனை குழந்தைகள் மீதும் அன்பு மிகுகிறது. கண்ணே மணியே முத்தே எனை அன்னையாய் தந்தையாய் பேரன்பு கொள்ள பெருத்த ஆவல் மீறுகிறது. ஓஷோ சொல்வது போல் கண்ணனின் பிறப்பு தனித்த ஒரு மனிதனின் பிறப்பல்ல. ஆயிரமாயிரம் மாந்தர்களின் பிறப்பையும் வாழ்வையும் உள்ளடக்கியது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61565

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 19

பகுதி ஆறு: 3. வான்சூழ் சிறுமலர் ஆயரே, தோழர்களே, கன்று அறியும் நிலமெல்லாம் நன்று அறிந்துளேன். காளை அறியா வாழ்வேதும் இன்றும் அறிந்திலேன். எளியோன், ஆயர்குடிபிறந்தோன். பாலும் நறுநெய்யும் கன்றோட்டும் கோலும் வனக்குடிலும் என வாழ்வமைந்தோன். கலம்நிறைந்த புதுப்பால்போல் குலமகளை மணம் கொண்டேன். சிறுகுடியில் நலம் சூழ்ந்து ஒருமகவை பெற்றேன். நன்று சூழ்க! என் மடியமைந்த சிறுமைந்தன் என்னை மன்னவர் கோல்துணைக்கும் மணிமுடியை சூடவைத்தான். அரியணையில் அமர்ந்த அரசனென்றே உணரச் செய்தான். ஏழ்கடலும் அலையடிக்கும் இருநிலத்தை ஆளவைத்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61236

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18

பகுதி ஆறு: 2. நெருப்பரவம் அணைதல் ஆயர்குல மங்கையரே, கேளுங்கள். அன்றொருநாள் அனலெழுந்த கோடையில் கருக்கொண்ட காராம்பசுவொன்றை கருநாகமொன்று தீண்டியது. அன்று நான் உங்களைப்போல் கன்னியிளநங்கை. நாகத்தின் நஞ்சேற்று நீலம் படர்ந்து சினை வயிறெழுந்து செங்குருதி வழிந்து கிடந்த பசுவையும் நஞ்சுப்பாலருந்தி நெற்றியில் விழிசெருகி நாக்கு நெளியக் கிடந்த கன்றையும் கண்டு ஆயர்க்குலமே சூழ்ந்து நின்று கூவி அழுதது. கன்றையும் பசுவையும் குழியமர்த்தி நீரூற்றி நெறிசொல்லும் முறையாவும் செய்தபின் எந்தை சொன்னார் “ஆயர்களே, இனியொருகணமும் இங்கிருக்கலாகாது. கருநாகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61127