Tag Archive: தோப்பில் முகமது மீரான்

தோப்பில் முகமது மீரான், கருத்துச்சுதந்திரம்

அன்புள்ள ஜெ உங்களைப்போன்றவர்கள் சொல்வது இந்துக்கள் திரும்பி பல படிகள் இறங்கிச்செல்லவேண்டும் என்று. முஸ்லீம்களைப் பாருங்கள் என்றுதான் அத்தனை இந்துத்துவர்களும் நாத்தெறிக்கப் பேசுகிறார்கள். ஏன் பார்க்கவேண்டும் என்றுதான் நான் கேட்கிறேன்.ஒரு முஸ்லீம் மதநிந்தனை என்று கோபம் கொள்வது மேலே ஏறி வரமுடியாத காரணத்தால். அது மன்னிக்கப்படலாம். ஓர் இந்து மதநிந்தனை என்று பேசுவது அவனுக்கு ஆசிரியர்களாக வந்த அத்தனை ஞானிகள் முகத்திலும் எட்டி உதைத்து பல படிகள் கீழிறங்குவதன் மூலம் — உங்களின் இந்த வார்த்தைகளைப் படித்துக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70252

தோப்பில் முகமது மீரானுக்கு ஓர் இணையதளம்

20 வருடம் முன்பு சுந்தர ராமசாமி தோப்பில் முகமது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ யைப் படித்துவிட்டுச் சொன்னார், ‘இவரு மனிதாபிமானி. எளிய மக்களோட சுகதுக்கங்களிலே இயல்பா மனசு போய்ப் படிஞ்சுடுது. அவங்க கஷ்டப்பட்டு மேலே வாறதுக்குமேலே இவருக்கு அலாதியான ஒரு கரிசனம் இருக்கு. இதுதான் இவரோட பலம்” ஆம், பெரும்பாலான சிறந்த யதார்த்தவாத இலக்கியவாதிகளைப்போலவே மீரானும் மனிதாபிமானி. மனிதவாழ்க்கையின் அவலங்களையும் அவற்றின் பாறைக்கனத்தினூடாக வேர் ஊன்றித் தளிர்விட்டு எழும் அன்பின் அழியாத உயிரையும்தான் எப்போதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23243

அஞ்சுவண்ணம் தெரு: தோப்பில் முகமது மீரானின் புதிய நாவல்

மரபான நாவல்களுக்குரிய வடிவமும் கருப்பொருளும் கொண்டது தோப்பில் முகமது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு . ஒரு தெருதான் கதைக்களம். அந்தத்தெருவில் வாழும் பலவகையான மனிதர்களின் வாழ்க்கைபற்றிய  ஒன்றோடொன்று பொருந்தும் உதிரிச்சித்தரிப்புகள்தான் கதை. காலமாற்றத்தில் அந்தத்தெருவுக்கு என்ன ஆகிறது என்பதுதான் கரு. ஆனால் உயிரோட்டமுள்ள ஒரு இலக்கிய ஆக்கமாக இருக்கிறது இப்படைப்பு. உயிரோட்டம் என்னும்போதே நுட்பம், வளர்ந்துகொண்டே இருக்கும் இயல்பு இரண்டும் சுட்டப்பட்டுவிடுகின்றன. நல்ல கலைப்படைப்பின் இயல்பு அது. அஞ்சுவண்ணம் தெரு  அதன் கதாபாத்திரங்களின் உறவுகளுக்குள் விடப்படும் மௌனங்களையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/784

பேருந்தில் தோப்பில் முகமதுமீரான்..

இன்று பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது காலி இருக்கை நோக்கிச் செல்லும்போது தோப்பில் முகமது மீரான் ஐ பார்த்தேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ”தோப்பில் தானே?” என்றேன். ”தம்பி! என்ன வயசாயிப்போயிட்டே?”என்றபடி அணைத்து அமரச்சொன்னார். நெடுநாட்களுக்குப் பின் அண்னாச்சியைப்பார்த்ததில் மகிழ்ச்சி ஏற்பட்டது. அதிலும் பக்கவாதம் அவ்ந்து தளர்ந்துபோன வடிவிலேயே அவரைக் கண்டிருந்தேன். இப்போது நன்றாக உடல்நலம் தேறி புத்துணர்ச்சியுடன் இருக்கிறார் என்பது உள்ளூர ஆழமான பரவசத்தை அளித்தது. அவரைப் பார்க்கவே பிடித்திருந்தது. ”எங்க யாத்திரை?” என்றேன் ”களியிக்காவெளைக்கு,ஏவாரம் சின்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/305