Tag Archive: தொல்காப்பியம்

தமிழக வரலாறு தொடங்குமிடம் எது?

ஒரு சமூகம் எப்போது தன்னுடைய வரலாற்றை பதிவுசெய்ய வேண்டும் என்று எண்ணுகிறதோ அப்போதே அந்தச்சமூகத்தின் பண்பாடு முதிர்ந்துவிட்டது என்றுதான் அர்த்தம். தன்னைப்பற்றிய ஒரு தெளிவான சுயஅடையாளத்தை உருவாக்கிக் கொண்டபின்னர்தான் அச்சமூகம் ‘தான்’ என்றே உணர்கிறது. அந்த உணர்வில் இருந்துதான் தன்னுடைய இறந்தகாலத்தை அடியாளம் கண்டு வகுத்துக்கொள்கிறது. அதை தன்னுடைய எதிர்காலநினைவுக்காக கையளிக்கவேண்டும் என்று திட்டமிடுகிறது. அதன்விளைவாகவே அது ஏதேனும் ஒருவடிவில் தன் வரலாற்றை பதிவுசெய்ய முயல்கிறது. வரலாற்றுணர்வு உருவாவதற்கு நெடுங்காலம் முன்னரே அச்சமூகம் இருந்துகொண்டிருக்கும். அதன் வாழ்க்கையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58364

‘XXX’ தொல்காப்பியம்

நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழறிஞரும் வழக்கறிஞருமான நா. விவேகானந்தன் எம்.ஏ.பி.எல்., தொல்காப்பியத்தில் அகப்பொருள் என்ற தலைப்பில் ஒரு உரைநூலை ஆக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே திருக்குறள் காமத்துப் பாலுக்கு உரை எழுதியவர். இரு பாகங்களாக கைவல்ய நவநீதத்துக்கு உரை எழுதியிருக்கிறார். பகவான் இராமகிருஷ்ணர் பரம்பொருளை அடைந்தது எப்படி, இயேசுவின் யோகம், திருக்குறள் அகழ்வாராய்ச்சி போன்ற பலநூலகளை இயற்றியவர். தொல்காப்பியம் முற்றிலும் அகப்பொருளை சொல்லுகிற ஒரு இலக்கண நூல் என்பது இவர் ஆய்ந்து தெளிந்த முடிவாகும். இவர் இதற்கென தொல்காப்பியப் பாக்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/315

வள்ளுவரும் சாதியும்- ஓர் உரையாடல்

சௌம்யநாராயணன் [பிரவாஹன்]  திருக்குறள், பொருட்பால், ஒழிபியலில், பெருமை எனும் அதிகாரத்தில் வருகின்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (972) என்ற குறளுக்கு தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், பொருளதிகாரம், களவியல், நூற்பா எண். 90 – “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின்  ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோனாயினுங் கடிவரை இன்றே” என்ற நூற்பாவில் வருகின்ற ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்பதற்கு, ஒப்பு பத்துவகைப் படும் என்று கூறுகிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20607