Tag Archive: தேவப்பிரயாகை

ராமனும் காவியும்

அன்புள்ள ஜெமோ! வெண்முரசு விழாவிற்கு வாழ்த்துக்கள்.தமிழும் நமது இந்திய சமய மரபும் கலக்கும் அனைத்துக்கட்டங்களும் புனிதத்தையும் மீறிய அழகு பெற்றவை,அத்தகைய அழகுப்பெட்டகத்தை செதுக்கி வருகிறீர்கள். ஒரு சிறிய வினா.. தேவப்பிரயாகையில் இராமனுக்குக்கோயில் இருந்ததாகக்குறிப்பிடுகிறீர்கள். முதன்முறையாக இராமன் தெய்வ வடிவம் பெறுவதாக (இந்த நாவற்றொடரில்) இங்கு தான் அறிகிறேன் (பிரயாகை அத் 19). அதிலும் காவி நிறக்கொடியுடன். காவி என்ற நிறமே புத்தமதத்திலிருந்து பெறப்பட்டது என்று எங்கோ படித்த ஞாபகம். முன்பு மழைப்பாடலில் இராமனைப் பகடி செய்து அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65235/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 20

பகுதி நான்கு : அனல்விதை – 4 எரிகுளத்தில் எழுந்து ஆடிக்கொண்டிருந்த செந்தழலைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி தௌம்ரர் சொன்னார் “மகத்தானவை எல்லாம் அழியாத பெருந்தனிமையில் உள்ளன.” மேலே ஒளிவிட்ட துருவனை சுட்டிக்காட்டி “அவனைப்போல” என்றார். உருளைப்பாறைப்பரப்பின் சரிவில் கங்கை பெருகி ஓடும் ஒலி இருளுக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. “ஆயிரம் கைநீட்டி அன்னமிட்டுச்செல்லும் இக்கங்கையும் தன்னில் முற்றிலும் தனித்திருக்கிறாள்.” நெருப்பைச் சுற்றி அவரது மாணவர்கள் சற்று விலகி அமர்ந்திருந்தனர். புலித்தோலிருக்கையில் துருபதன் அமர்ந்திருக்க அருகே சற்று பின்னால் பத்ரர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64983/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 19

பகுதி நான்கு : அனல்விதை – 3 பாகீரதி அளகநந்தையை சந்திக்கும் தேவப்பிரயாகையின் கரையில் அமைந்த குடிலின் முன் எழுந்து நின்ற பாறையின் விளிம்பில் துருபதன் நின்றிருப்பதை பத்ரர் கண்டார். நெஞ்சுநடுங்க ஓடி அருகே வந்து கையெட்டும் தொலைவில் நின்றுகொண்டார். துருபதன் கைகளைக் கட்டி நின்றபடி இருபது வாரை ஆழத்தில் தெரிந்த நதிகளை நோக்கிக்கொண்டிருந்தார். சருகு ஒன்று பாறைமேல் ஒட்டியிருப்பது போலிருந்தார். இளங்காற்றில் கீழே விழுந்துவிடுபவர் போல. பாகீரதியின் பெருக்கு அருவியொன்றை கிடைமட்டமாக பார்ப்பதுபோலிருந்தது. பேரோசையுடன் பாறைக்கரைகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64835/

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’

வெண்முரசின் அடுத்த நாவலை எழுத ஆரம்பித்துவிட்டேன். சற்று காலம் எடுத்துக்கொள்ளலாம். அதுவரைக்கும் நீலமே இன்னொருமுறை படிப்பதற்குப் போதுமானதாக இருக்கும். அக்டோபர் 20 அன்று அடுத்தநாவல் வெளிவரத்தொடங்கும். வழக்கமாக வெண்முரசு பிரசுரமாவதற்கு பல அத்தியாயங்கள் முன்னரே நான் சென்றுகொண்டிருப்பேன். நீலம் மிகுந்த நெருக்கடியாகிவிட்டது. ஒவ்வொருநாளும் மதியம்தான் மறுநாள் பிரசுரமாகும் அத்தியாயத்தை எழுதினேன். ஷண்முகவேல்தான் திணறினார். காரணம் எழுத ஆரம்பிக்க ஏற்பட்ட தடைதான்.இம்முறை ஒரு பத்து அத்தியாயம் கையில் இருக்கையிலேயே ஆரம்பிக்கலாமென திட்டம். ஆகவே இந்த இடைவெளி நாவலின் பெயர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62508/