Tag Archive: தேவதேவன்

கொந்தளிப்பும் அமைதியும்

  அன்புள்ள ஜெ,   கல்பற்றாவுடன் உரையாடியபோது இப்படிக் கேட்டேன். ஈழத்துக் கவிதைகளிலும், பெண்ணியக் கவிதைகளிலும் என் உணர்வுகளுக்கு அப்பட்டமான “வலி” தெரிகிறது. அவற்றில் கவிதையின் மொழி பயின்று வருகிறதே ஒழிய எழுந்து நிற்பது வலியும் பிணியும் மட்டுமே. அதுவும் அப்பட்டமாக. ஒரு நல்ல கலைப்படைப்பு சமன் அமைந்ததாக இருக்க வேண்டும். கவிதைக்கு அந்த விதி இல்லையா? தேவதேவனின் கவிதைகளிலும், உங்களுடைய கவிதைகளிலும் அப்படி அப்பட்டமாக எதுவும் தென்படவில்லை. இது விதிவிலக்கு மட்டுமேவா? ஒரு நல்ல கவிதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35200

பழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்

I எப்போதும் எதிர்ப்படக் கூடிய சாத்தானை எதிர்பார்த்து சட்டைப்பைக்குள் சிலுவையை சுமந்தலையும் விசுவாசியைப் போல கவிதைத் தொகுதிகளை பையில் வைத்துக் கொண்டு அலைந்த நாட்கள் 2002 லிருந்து 2008 வரையிலான என் சென்னை வாசத்தின் நாட்கள். ஷங்கரின் கவிதைத் தொகுதிகள் இரண்டும் அவற்றில் உண்டு. கல்லூரியில் நான் உலவிக்கொண்டிருந்த கலை இலக்கிய உலகம் அனைத்தையும் விட்டுவிட்டு, கனிணிகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளையும் வென்றடக்க வேண்டிய நிர்ப்பந்தங்களோடு சென்னைக்கு அனுப்பப்பட்டேன். கும்பகோணத்தில் படித்த காலங்களிலிருந்து சிற்றிதழை சேர்ந்தவர்களோடு இருந்த நட்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111195

நிழலில்லாத மனிதன்

  பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவிடம் கேட்டார். குரு சொன்னார். ’காம,குரோத,மோகங்களால் ஆனது வெளியுலகம். அதிலிருந்து நாம் நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்கிறோம். அதற்காகவே இந்த மடாலயத்தில் வாழ்கிறோம்’. சீடன் கேட்டான்.’அந்தத் தனிமை எதற்காக?’ குரு சொன்னார் , ’அந்தத் தனிமைதான் நம்முடைய காவல், நம்முடைய கவசம், நமது ஆயுதம்’.   சீடன் கேட்டான், ’அப்படியானால் எவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16876

தேவதேவனின் கவிமொழி

பலவருடங்களுக்கு முன்பு திரிச்சூரில் நடந்தபடியே பேசிக் கொண்டு சென்றபோது ஆற்றூர் ரவிவர்மா கூறினார். “ஒரு கவிஞனின் பங்களிப்பு என்ன என்று இறுதியாகக் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது மொழிக்கு அதன் சாத்தியங்களை அதிகரித்துக் கொள்ள உதவுவது மட்டுமே என்று படுகிறது” “கவிஞனின் தரிசனம் தானே பெரிதும் பேசப்படுகிறது” என்று நான் கேட்டேன். “கவித்துவ தரிசனங்கள் என்று கூறப்படுபவை அனேகமாக பல நூற்றாண்டுகள் முன்பே வெளிப்பட்டு செவ்விலக்கியங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டவையே. புதிய மொழிச்சூழலில் நின்றபடி அவற்றை விரிவாக்கம் செய்ய முற்படுகிறான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32521

எரிமருள் வேங்கை

திருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு மாளிகை கட்டி நிறைய மக்களுடன் பல்லக்கும் பரிவட்டமுமாக வாழ்ந்தார். ஒருநாள் ஆலயம்தொழவந்த நக்கீரரை அவர் கண்டார். உயிர்த்தெழுந்த பொற்றாமரைக்குளத்தை அடிக்கடி வந்து பார்த்துச்செல்வது அவரது வழக்கம். இருவரும் பிராகாரத்தில் ஒதுங்கி நின்று பேசிக்கொண்டார்கள். தருமி தன்னுள் நீண்டகாலம் இருந்த கேள்வியைக்கேட்டார். ‘திருவிளையாடல் நடந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/53878

தேவதேவன் -தக்காளி

வணக்கம். நமது வீட்டில் தானாக முளைத்து எழுந்த செடியில் இன்று பறித்த தக்காளி அம்மா கையில் இருக்கிறது. அம்மா ஆஸ்பத்திரி போய் வந்தாள் இன்று. பார்க்கணும் என்று தங்கையிடம் படமெடுத்து அனுப்பக் கேட்டேன். அவள் இந்த படத்தை அனுப்பி “அம்மா கைல என்னன்னு சொல்லு பாப்போம்” என்றாள். நான் “நம்மூட்டு தக்காளி” என்றேன். அவள், “தேவதேவன் தக்காளி” என்று சொன்னாள். ‘கவிதைவெளி’ ஞாபகம் வந்ததுவிட்டது. எல்லாரிடமும் அதைப் பகிர்ந்துகொண்டேன். ஜெ. ‘எல்லாம் எவ்வளவு அருமை’ இல்லையா? அம்மாவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/96232

தேவதேவன் – கடிதம்

  இனிய ஜெயம், கவிதை. நீர்நடுவே தன்னை அழித்துக்கொண்டு; சுட்டும்விரல்போல் நிற்கும் ஒரு பட்டமரம். புரிந்துணர்வின் பொன்முத்தமாய் அதில் வந்து அமர்ந்திருக்கும் ஒரு புள். தேவதேவன். ஒரு கவிஞன் தன்னைக் குறித்தும் தன்னில் வந்தமரும் கவிதை கணத்தை குறித்தும் சொன்ன கவிதை. கவிதை ஒரு கவிஞனால் எழுதப்படுவது என்ற தேவதேவனின் சொல்லை இக் கவிதையுடன் இணைக்கையில் இக்கவிதை கொள்ளும் ஆழம், அது உணர்த்தும் தவிப்பு தாள இயலா நிலைக்கு தள்ளுகிறது. கவிஞன் அவன் தோப்பில் ஒரு மரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/95623

தேவதேவன் கவிதை -கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன், “ வாசகர்களே இல்லாத ஒருவெளியில் நின்றுகொண்டு தனக்கே என இவற்றை அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்” இது ஒரு வரம் என்று தான் புரிந்துகொள்ள வேண்டும். எதிலும் மற்றவரின் அங்கீகாரம் வேண்டும் என்று தேடும் பொழுது தனக்கு பிடித்ததை தொடர்ந்து எழுதுவது வரம்தான்.கற்பனையும் ரசனையும் இல்லாத ஒரு உலகம் சொரணையற்றதாக மட்டுமே இருக்கும் அதில் நாம் என்பது மற்றவர் கைகளில் ஒப்படைக்கப்பட்ட ஒரு பொருள், அங்கு ஒரு இருத்தலே இல்லை. பழுத்தும் விழாது ஒட்டிக்கொண்டிருக்கும். இலைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/95523

கவிதையின் அரசியல்– தேவதேவன்

    எங்களூரில் தினம் ஒரு இடத்தில் ‘தகடு எடுப்பு’ நடக்கும். மாலையானால் பேருந்தில் பூசாரி வந்திறங்குவார். பெரிய துணிப்பை, நீண்ட கூந்தல் பெரிய மீசை ஜிப்பா. அவரிடம் ”அண்ணாச்சி தகடு ஆரு வீட்டுக்கு?”என்று கேட்டபடி வேடிக்கைபார்க்கும் கும்பல் பின்னால் போகும். அந்தி கறுத்ததும் வீட்டுக்கு தென்மேற்கு மூலையில் நுனிவாழை இலை விரித்து, பச்சைமட்டைக்கீற்றில் தேங்காயெண்ணை ஊற்றி சுருட்டிய துணித்திரியில் பந்தம் கொளுத்தி, நான்குபக்கமும் நட்டு, நடுவே கல்லில் சாமி ஆவாகனம் பண்ணி நிறுத்தி ,மஞ்சள்பொடிகலந்த அரிசிப்பொரியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/240

தேவதேவன் விபத்துக்குப்பின் குணமடைந்தார்

  கவிஞர் தேவதேவன் சென்ற ஏப்ரல் 27 அன்று காலை சில கட்டுமானப்பொருட்கள் வாங்குவதற்காகச் சென்று சாலையைக் கடந்தபோது சிறிய விபத்துக்குள்ளானார். அவரது மனைவி அப்போதே கூப்பிட்டு தகவல் தெரிவித்தார். நான் எர்ணாகுளத்தில் இருந்தேன். சற்று நேரத்திலேயே அஞ்சுவதற்கொன்றும் இல்லை என்று தெரிந்தது கவிஞர் தேவேந்திரபூபதி உட்பட அவரது நண்பர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர். அவர் இப்போது மீண்டு வீடு திரும்பிவிட்டார். நண்பர் செல்வேந்திரன் எழுதிய குறிப்பு   தேவதேவன் வீட்டில் நேற்று தேவதேவன் தலையில் ரத்தக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87449

Older posts «