Tag Archive: தேவதேவனின் கவிமொழி

தேவதேவனின் கவிமொழி

பலவருடங்களுக்கு முன்பு திரிச்சூரில் நடந்தபடியே பேசிக் கொண்டு சென்றபோது ஆற்றூர் ரவிவர்மா கூறினார். “ஒரு கவிஞனின் பங்களிப்பு என்ன என்று இறுதியாகக் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது மொழிக்கு அதன் சாத்தியங்களை அதிகரித்துக் கொள்ள உதவுவது மட்டுமே என்று படுகிறது” “கவிஞனின் தரிசனம் தானே பெரிதும் பேசப்படுகிறது” என்று நான் கேட்டேன். “கவித்துவ தரிசனங்கள் என்று கூறப்படுபவை அனேகமாக பல நூற்றாண்டுகள் முன்பே வெளிப்பட்டு செவ்விலக்கியங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டவையே. புதிய மொழிச்சூழலில் நின்றபடி அவற்றை விரிவாக்கம் செய்ய முற்படுகிறான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32521

தேவதேவனின் கவிமொழி -கடிதங்கள்

மனித அகம் ஒரு பொருளில் மோதித் திகைத்து அதை அடையாளப்படுத்துதல் என்னும் தத்துவத்திலிருந்து, அந்த அடையாளப்படுத்தும் சொல்லின் புறவய-நிலைத்த தன்மை மற்றும் அனைவருள்ளும் ஏற்கனவே இருக்கும் அந்தரங்கமான மொழி என்ற நுண்மையான இருநிலைகளை மொழியியல் வழியாக விளக்கி, இந்தப் பொதுமொழி படிமங்களை உருவாக்கி கையாளுவதன் மூலமாக எப்படி கவிமொழி ஆகிறது என்பதைச் சொல்லி, மறுபடியும் கவிமொழி எப்படி மானுடப் பொதுத்தன்மை பெறுகிறது என்பதை -‘மானுட உடல் சார்ந்து அறியப்படும் பிரபஞ்சம், எனவே அவ்வுடலே மொழியையும் மானுடப்பொதுமையாக ஆக்குகிறது’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33024