Tag Archive: தேவதச்சன் கவிதை

தேவதச்சன் கவிதை- ம.நவீன்

நவீன கவிதைகள் நம் வாழ்வோடு துணை வருகின்றன. நமக்கு ஓர் அனுபவம் நிகழும்போது சட்டென அவை தலைகாட்டுகின்றன. இதுவரை இல்லாத புதிய அர்த்தங்களைக் கூட கொடுக்கின்றன. இதுவரை தெரியாத புதிர்களுக்குச் சிலசமயம் பதிலாகியும் போகின்றன. சமகால வாழ்விலிருந்து முளைத்துவரும் தேவதச்சனின் கவிதைகள் உணர்ச்சிமிகு தருணங்கள் தோறும் உடன் வந்து ஒரு சொட்டு ரத்தம், ஒரு சொட்டு கண்ணீர், ஒரு சொட்டு எச்சில், ஒரு சொட்டு விந்தை விட்டுச்செல்வதாகவே தோன்றுகிறது. மலேசிய வானொலியில் நவீன கவிதைகள் குறித்த அறிமுகத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78704

விஷ்ணுபுரம் விருது, தேவதச்சன் கவிதை மீண்டும்…

ஜெ விஷ்ணுபுரம் விருது பெற்றிருக்கும் தேவதச்சனுக்கு வாழ்த்துக்கள். தேவதச்சன் கவிதைகளை நான் பல சந்தர்ப்பங்களில் வாசித்திருக்கிறேன். அவற்றை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. பல கவிஞர்கள் அவரைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். திரும்பத்திரும்ப அவர்களும் புகைமூட்டமான தரிசனம் பேருணர்வு போன்ற சொற்களை மட்டுமே எழுதியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் காற்று ஆடாத மரத்தைக் கண்டதில்லை என்ற கவிதையை மூன்று படிமங்களாகப்பிரித்து எழுதியிருந்தது ஒரு வாசிப்பனுபவத்தை அளித்தது. அந்தக்கவிதைக்குள் நுழைய ஒரு நல்ல வாசல் சட்டென்று திறந்துகொண்டது. அதைப்போன்ற சிறந்த வாசிப்பனுபவமாக ஆகக்கூடிய விவாதங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78185