Tag Archive: தேவதச்சன்

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்  

[ 1 ] அவரைவிதை போல இரண்டுபகுதிகளால் ஆனது பழைய நெல்லை. அல்லது பண்பாட்டு நெல்லை. இப்போது பல மாவட்டங்களாக ஆனாலும்கூட ’நமக்கு திருநவேலிப்பக்கம் சார்” என்றுதான் பழைய நெல்லைக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் நெல்லையை அறிந்த எவரும் எவரேனும் தங்களை நெல்லைப்பகுதியைச் சேர்ந்தவர் என ஒருவர் சொல்லிக்கேட்டால் “எந்தப் பக்கமா?” என்று கேட்பார்கள். ஏனென்றால் நெல்லை இரண்டு உண்டு. தாமிரவருணி நனைத்துச்செல்லும் ஒரு நெல்லை, வானம்பார்த்த இன்னொருநெல்லை. ஈரமான, பசுமையான நெல்லை நாம் நெல்லைக்குரியதென இன்று சொல்லும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116365

நுழைவாயில்

  ஜெ தேவதச்சனை என்னைப்போன்ற கவிதையறியாத பொதுவாசகனிடமும் கொண்டுவந்து சேர்க்க விஷ்ணுபுரம் விருதாலும் அதன் விளைவான நீண்ட கவிதை விவாதங்களாலும் முடிந்திருக்கிறது என்பதே பெரிய வெற்றிதான் ஏன் கவிதையை என்னால் வாசிக்கமுடியவில்லை என்பதை இப்போதுதான் கண்டுபிடித்தேன். கவிதைக்கான context எனக்கு  அப்பால் இருக்கிறது. நான் வாழும் வாழ்க்கையில் அந்தக்கவிதை சொல்வது பொருளாகவில்லை. ஒரு கவிதையில் எவர் எவரிடம் சொல்கிறார்கள் என்பதும் எங்கே நிகழ்கிறது அது என்பதும்தான் முக்கியமானது. அது புரியாததனால்தான் கவிதைகள் அறுபட்டவைபோல நிற்கின்றன அபூர்வமாக சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82066

தப்பிச்செல்லுதல்…

ஜெ தேவதச்சனின் ஒரு குறிப்பிட்ட வகையான கவிதைகளையே அதிகமும் விமர்சகர்கள் எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர் அன்றாட வாழ்க்கையைப் பாடிய கவிஞர். அது சரிதான். ஆனால் அன்றாட வாழ்க்கையைப் பாடுவதற்கான காரணம் என்ன? ஒரு கவிதையில் கவிஞன் என்னவாக தன்னை வைத்துக்கொள்கிறான் அல்லது என்னவாக நடிக்கிறான் என்பது மிகமுக்கியமானது. தேவதச்சன் ஒரு சாமானியனாக தன்னை முன்வைத்துக்கொள்கிறார் சாமானியனுக்கு தத்துவம் இல்லை. பிரபஞ்சம் இல்லை. வாழ்க்கை மட்டும்தான் உள்ளது. சின்ன வாழ்க்கை. சிறிய சொப்பனங்கள். அதெல்லாம் உண்மைதான். கூடவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82063

தேவதச்சன் ஆவணப்படம்

தேவதச்சனைப்பற்றி விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நண்பர் சரவணன் எடுத்த ஆவணப்படத்தின் முன்னோட்டம்  https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_ojE_WJS6ic ஆவணப்படம் யூ டியூபில் பார்க்க

Permanent link to this article: https://www.jeyamohan.in/82210

தப்பி ஓடும் ஆறு

  ஜெ, தேவதச்சனின் கவிதைகளைப்பற்றி பலர் பல கோணங்களில் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த விருது அவரைப்போன்ற அடங்கிய தொனியிலே பேசும் ஒரு பெரிய கவிஞரை நுட்பமாக புரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை ஆனால் பெரும்பாலான புரிதல்களில் அவரது கவிதைகள் அரசியலற்றவை என்று சொல்லப்படுகிறது. சபரிநாதன் அவரது கவிதைகள் வரலாற்று நீக்கம் செய்யப்பட்டவை என்று சொல்கிறார். [அவரது கட்டுரை சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட மிகமுக்கியமான கட்டுரைகளில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை] ஆனால் தேவதச்சனின் கவியுலகிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82061

நீ விரும்புவது….

நாலைந்தாண்டுகளுக்கு முன்னமே தேவதச்சனின் கடைசி டினோசர் மற்றும் ஹேம்ஸ் என்னும் காற்று தொகுப்பை வெறும் சொல்லலங்காரத்துக்காகவே வாங்கி ரோபோ ரஜினி போல் படித்து முடித்து அவ்வணிகள் யாவும் எனக்கானவை அல்ல என கடந்து வந்து விட்டதை இப்போது நினைத்தால் மிகுந்த குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறேன். ஜெவின் அத்துவானவெளியின் கவிதை பகுதிகளை சற்று தாமதமாகத்தான் வாசித்தேன். அதிலும் கடைசி இரண்டு பகுதிகளையும் காய்ச்சலுற்று நேற்று மருத்துவரைப் பார்க்க காத்திருந்த நேரத்தில். வாசித்ததும் அத்துவானவெளியால் சூழப்பட்ட சிற்றிருப்பாகிப் போனேன். வீடு வந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82059

சின்ன மலைகள் பெரிய கூழாங்கற்கள்

  ஜெ கொஞ்சநாளைக்கு முன்னால் ஒருமுறை நான் செஞ்சி வழியாக வந்துகொண்டிருந்தபோது மலைக்குமேல் இருந்த மிகப்பெரிய பாறையைப்பார்த்தேன். உள்ளங்கையில் ஒரு சின்னக்கல்லை தூக்கி வைத்திருப்பதுபோலத் தோன்றியது. அப்போது தோன்றியது கூழாங்கற்கள் எல்லாமே குட்டி மலைகள் அல்லவா என்று. சிறிய பூச்சிகளுக்கு அவை மலைகள்தான். அப்போது ஒரு கவிதை எழுதினேன் கோடிக்கணக்கான மலைகளால் ஆனது இந்தப்பூமி பெரியமலைகள் மேலும் பெரியமலைகள் மலைகளுக்கு மேல் மலைகளுக்கு நடுவே மலைகளுக்கு அடியில் வாழ்கிறோம். மலைகள் அறிவதில்லை நம்மை அல்லது அவை அவ்வாறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81986

நிலா எங்கே போகிறது?

  ஜெ, அதோ பார் வானம் என்ற பின் மேலே பார்க்கும் குழந்தையின் மனது போல, தேவதச்சனின் கவிதை கட்டுரைகள் கவிதைகள் பெரும்பாலும் தின வாழ்வில் வரும் நிகழ்வுகளின் ஒரு உறைந்து கொண்ட காட்சிகளின் பார்வையுடன் தொடங்குகிறது. ( சிறுமி சைக்கிள் கவிதை / குளியலறையில் பல பொருட்கள் …) பின் அவரது கவிதை கோணம் சரியான வார்த்தைகளில் வந்து திரையை விலக்கி புதிதான கண் திறப்பு போல ஒன்றை காட்டி செல்கிறது – ஆழமான தத்துவ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81984

சமவெளியில் நடத்தல்

  அன்புள்ள ஜெ தேவதச்சனின் கவிதைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவரது கவிதைகளை வாசிப்பதற்கான பயிற்சி என்று நீங்கள் பிரசுரித்த அத்தனை கட்டுரைகளையும் சொல்லலாம். சுனில் கிருஷ்ணன், வேணுதயாநிதி, கார்த்திக் எழுதிய கட்டுரைகள் அவற்றை ரசிப்பதற்கான அடிப்படைகளை அளித்தன. சபரிநாதன் மண்குதிரை மற்றும் நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஆழமான பின்னணிப்புரிதலை கொடுத்தன தேவதச்சனின் கவிதைகள் மதியவேளையில் ஒரு சமவெளியில் நடப்பது போன்ற உணர்வுகளை அளிக்கின்றன என்று சபரிநாதன் சொல்லும் வரியும் சரிகை ஆடையை அவிழ்த்துவீசிவிட்டு குதிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81914

ஜெல்லி மீனே… ஜெல்லி மீனே…

  ஜெ தேவதச்சனைப்பற்றிய கட்டுரைத்தொடர்கள் கவிதைபற்றி சமீபத்தில் நிகழ்ந்த ஒரு தொடர்விவாதம். சென்றமுறை ஞானக்கூத்தனுக்கு விருது அளிக்கப்பட்டபோது இத்தகைய ஒரு விவாதம் நிகழ்ந்திருக்கலாம் என இதை வாசிக்கும்போது நினைத்துக்கொண்டேன். இந்தவிவாதம் பொதுவாக தமிழில் நமக்குக் கவிதை பற்றி இருக்கும் பலவகையான சிக்கல்களைக் கடந்துசெல்ல உதவும் என நினைக்கிறேன் அத்தனை கட்டுரைகளும் ஏறத்தாழ ஒரே முனையைக்கொண்டவை என்பதை கண்டேன். அவை அன்றாடவாழ்க்கையைக் கவிதையாக்குவது எப்படி என்பதைத்தான் பேசுகின்றன. சாதாரணமான வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளிலிருந்து சாஸ்வதத்தை தொட்டு மீட்டுக்கொள்வதைப்பற்றித்தான் எல்லா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81892

Older posts «