Tag Archive: தேனீ [சிறுகதை]

இணைவு,தேனீ- கடிதங்கள்

தேனீ [சிறுகதை] அன்புள்ள ஜெ தேனீ கதையின் எளிமை என்னை ஆட்கொண்டது. அதிலுள்ள கவித்துவம் இயல்பாக உருவாகி வந்திருக்கிறது. தேனிக்கு தேனில்தான் பிறப்பு சாவு ரெண்டுமே. அதற்கு தேன் சேகரிப்பது தவிர ஒன்றுமே தெரியாது. அதைப்போன்ற ஒரு தேனீவாழ்க்கை கொண்டவர் ஆசாரி. ஏக்கமே தவமாகச் செய்தவர் என்ற வரி என்னை உருகவைத்துவிட்டது டி.விஜயகுமார் *** வணக்கம் ஜெ தேனீ கதையை வாசித்தேன். இசை, தேன், பொன் இது மூன்றும் காற்றில் மண்ணில் எனக் கனிந்து தித்திப்பின் வெவ்வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131850/

ராஜன்,தேனீ- கடிதங்கள்

தேனீ [சிறுகதை] அன்புள்ள ஜெ என் அப்பா திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் ரசிகர். ஏராளமான செய்திகளைச் சொல்லிக்கொண்டிருப்பார். அவருடையது அசுரசாதகம். நாதஸ்வரம் என்பது அசுணப்பட்சியின் பாட்டு என்பார். அசுணப்பட்சி யானையை கையால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு பெரியது. அதன் பாட்டு. அப்படி வாசிக்கவேண்டும் என்றால் உடம்பில் இருந்து ஏழு மூச்சுகளும் நாதஸ்வரத்தில் வரவேண்டும். ‘பிராணன் துடிக்கிற சங்கீதம்’ என்று சொல்வார் இன்றைக்கு யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது. இன்றைக்கு சங்கீதம் மலிந்துவிட்டது. ஏராளமாக கிடைக்கிறது. ஆகவே ஜூனியர் வயதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131848/

தேனீ,நிழல்காகம் – கடிதங்கள்

தேனீ [சிறுகதை] அன்புள்ள ஜெ தேனீ கதை நம்முடைய போன தலைமுறையில் பலருடைய வாழ்க்கையின் பதிவு. அன்றைக்கு உண்மையிலேயே வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. பெரும்பாலானவை கூட்டுக்குடும்பங்கள். வருமானம் ஆண்கள் மட்டுமே கொண்டுவருவது. அதற்கு கடுமையான போராட்டம். பதினேழு பதினெட்டு வயதிலேயே குடும்பப்பொறுப்பு. அதன்பி  பல திருமணங்களை நடத்தி வைத்து ஓயும்போது வயதாகிவிட்டிருக்கும். சொந்தமான வாழ்க்கை என்பதே கிடையாது. எந்த தனிரசனைக்கும் இடம் கிடையாது. அவர் சொல்வதுபோல பின்னால் சாட்டை ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும் செக்குமாட்டு வாழ்க்கை. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131789/

தேனீ, ராஜன்-கடிதங்கள்

ராஜன் [சிறுகதை] அன்புள்ள ஜெ ராஜன் கதை ஒரு ஃபேபிளின் தன்மையுடன் இருக்கிறது. இந்த வகையில் பல வடிவங்களை இந்தக் கதைவரிசையில் முயற்சி செய்திருக்கிறீர்கள். நிழல்காகம் போன்ற கதைகளில் தத்துவ விவாதம் வழியாக ஃபேபிள் சிறுகதைக்குரிய சப்டெக்ஸ்ட் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. இந்தக்கதையில் யதார்த்தவாதக் கதை நகர்ந்து சென்று ஃபேபிள் ஆக மாறுகிறது. ஆனால் இந்தவகையான கதைகளில் எப்போதுமே நுட்பமான குறிப்புகளை கொடுத்துவிடுவீர்கள். கதைக்குள் பேச்சுவழியாக அது வந்துவிடும். இன்னொரு முறை கதையை வாசித்தால் அந்த மென்மையான முள்ளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131844/

தேனீ [சிறுகதை]

சுசீந்திரம் கோயிலுக்குள் காசிவிஸ்வநாதர் ஆலயம் ஒரு தனி உலகம். தெப்பக்குளம், அதற்கு இணையாக ஓடும் சாலையில் கடைகள், மூலம் திருநாள் மகாராஜா கட்டிய முகப்புக்கோபுரம், நந்தி, கொன்றைவனநாதர் சன்னிதி, கொடிமரம், அர்த்தமண்டபம், செண்பகராமன் மண்டபம், அனுமார் சன்னிதி என்று எங்கும் ஒளியும் திரளும் நிறைந்திருக்கும். காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் ஒரே ஒரு குண்டு பல்பு மட்டும் எரியும். வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் இருந்து விலகி யானைமேல் அம்பாரிபோல ஒற்றைப்பாறைமேல் அமைந்திருக்கும் சிறிய கற்கோயிலுக்கு வெட்டுபடிகளில் ஏறிச் செல்லவேண்டும். அது சுசீந்திரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/131744/