Tag Archive: தெளிவத்தை ஜோசப்

விஷக்கன்னியின் குழந்தைகள்

[ 1] மலையாள எழுத்தாளர் எஸ்.கெ.பொற்றேக்காட்டின் முதன்மையான நாவல்களில் ஒன்று விஷக்கன்னி. தமிழிலும் வந்துள்ளது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட்டம் கூட்டமாக கேரள மலைப்பகுதிகளுக்கு குடியேறி காடழித்து நாடாக்கிய மக்களின் துயரங்களைச் சொல்லும் நாவல் அது. விஷக்கன்னி என்பது மேற்குமலைக்காடுதான். முதல்பார்வைக்கு பேரழகி. அணுக அணுக விஷம் கொட்டுபவள். அன்னை, ஆனால் கொலைவெறிகொண்டவள். விஷக்கன்னியின் மைந்தர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? இன்று கேரளமலைப்பகுதிகளின் ஆரம்பகால குடியேறிகளில் ஏழைகள் அனேகமாக கிடையாது. நிலத்தின் விலை அவர்களை செல்வந்தர்களாக ஆக்கியிருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41975

வாசிப்பின் நிழலில் – ராஜகோபாலன்

குறைந்த பட்சமாக ஒரு பில்லியன் ஆண்டுகளை கடந்திருக்குமாம் இன்று நம் கையில் கிடைக்கும் வைரம். அப்படித்தான் ஆகிவிட்டது தெளிவத்தையின் படைப்புகளை நான் கண்டடைந்து வாசிப்பதற்கு. வெட்கமாக இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். தெளிவத்தையின் பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும் முயன்று தேடி வாசித்ததில்லை. ஆனால் 2013 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதுக்கு அவர் தேர்வான பின் அவரது படைப்புகளில் ஒன்றையாவது வாசிக்காமல் அவரைச் சந்திப்பது இழுக்கு என்பதால் அவரது படைப்புகளைத் தேட ஆரம்பித்தேன். நண்பர் ‘எழுத்து அலெக்ஸ்’ தெளிவத்தை ஜோசப்பின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42095

குடைநிழல் தந்தமமதை

பெரும்பான்மை பலத்தில், அதிகார வெறியில், எளியோரை வதைக்கும் இனவெறி அரசியலால், எந்த தவறும் செய்யாத நாயகன் நாலாவது மாடியில் தனது விடிவை எதிர் நோக்கி காத்திருப்பதுடன் நாவல் முடிகிறது. அதிகாரத்தினால் ஆடிய தனது தந்தையின் வாழ்க்கையை, குடைநிழல் தந்த மமதையை இங்கு அரசின் பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்துவதில் நாவல் வெற்றி பெற்றுவிடுகிறது தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் நாவல் பற்றி செந்தில்குமார்

Permanent link to this article: https://www.jeyamohan.in/42092

உதிர்ந்த ரத்தத்துளிகளின் கதை

[ 1 ] கா.சிவத்தம்பி ஈழ இலக்கியத்தை மூன்றாகப் பிரிக்கலாம் என்று ஓரிடத்தில் சொல்கிறார். இலங்கையின் பாரம்பரியத் தமிழர்களால் எழுதப்படும் இலக்கியம். இது வடக்குப்பகுதி இலக்கியம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு, இலங்கை முஸ்லீம்களின் இலக்கியம். இவர்கள் வடகிழக்கிலும் தெற்கிலும் வாழ்பவர்கள். மூன்று மலையக இலக்கியம். மலையக இலக்கியம் பிற இரண்டிலிருந்தும் வேறுபட்ட வட்டார- பண்பாட்டு அடையாளம் கொண்டது. எந்த ஓர் இலக்கியவகைமையைப்போலவும் இதுவும் ஒருசில அடையாளங்களை மட்டும்கொண்டு செய்யப்படும் தோராயமான பகுப்புதான். படைப்புகளின் சமூக-அரசியல் பின்னணியைப்புரிந்துகொள்வதற்கு மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41452

’கத்தியின்றி ரத்தமின்றி’- தெளிவத்தை ஜோசப்

அந்த மலைகள் மிகவும் பயங்கரமாக எழுந்து நின்றன. மக்களின் உரிமை உடைமை இத்தியாதிகளை சங்காரம் செய்த தென்னாப்பிரிக்க வெள்ளைக்காரக் கொடுமைகளை விடக் கோரமானதாகத் தலை விரித்துக் கொண்டு நிற்கின்றன. உள்ளே எது நடந்தாலும் அதை வெளியுலகுக்குக் காட்டுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டதுபோல் அவை அந்தத் தேயிலைத் தோட்டத்தை அரண் செய்து நிற்கின்றன. அந்த மலைகளின் ராட்சத உடலில் பட்டி பிடித்தாற்போல் மலைகளைச் சுற்றி வரும் செம்மண் பாதையில் கைப்பிரம்பைச் சுழற்றியபடி நடந்து கொண்டிருக்கிறார் தோட்டத்து டிஸ்பென்ஸர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41394

வாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்

தமிழில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் படைப்புகளே சர்வதேசத்தன்மையானவை. இலங்கைத்தமிழ் இலக்கியச்சூழலில் அவ்வகையான எழுத்தாளர்களில் ஒருவர் தெளிவத்தை ஜோசப். இலங்கை மலைநாட்டு தமிழர் பற்றிய ஆக்க இலக்கியப்படைப்புகளை எழுதும்போது அவர்களின் வட்டார மொழியை ஆடம்பரமற்ற எளிமையான மொழியில் சொல்வதுதான் அவரது வழக்கம். ஆனால் அவரது படைப்பின் அடிநாதமாக இருப்பது எந்த நாட்டு மனிதர்களுக்கும் பொருந்தும் சாதாரண மனிதர்களின் யதார்த்தம். மனிதவாழ்வின் யதார்த்தம் இல்லாத இலக்கியப்படைப்பை என்னைப் பொறுத்தவரையில் மனமொன்றி கிரகிக்க முடியாது போகிறது. இந்த யதார்த்தம் புறவாழ்வுகளின் செயல்பாடுகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42000

‘மழலை’ தெளிவத்தை ஜோசப்

திடீரென்று தான் அது நடந்தது! எத்தனை பேர் இருக்கின்றோம். யாருமே எதிர்பார்க்கவில்லை. மம்மி என்று அன்பொழுக அழைக்கப்படும் அம்மா மிம்மி என்று பாசத்துடன் அழைக்கப்படும் அம்மம்மா. பெரியம்மா@ பெரியப்பா@ குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் சாந்தி… எத்தனை பேர்! அந்த இரண்டு வயதுக் குழந்தையைச் சுற்றி இத்தனை பேர் இருந்தும் இது எப்படி நடந்தது! எப்படி நடந்தது… எப்படி நடந்தது… என்று எத்தனை தடவை கேட்டாலும் பதில் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. எப்படி என்கின்ற விவரணங்களை எல்லாம் மீறி மேவிக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41388

அம்மா – தெளிவத்தை ஜோசப்

இன்னும் இரண்டொரு சூரியன் இருந்தால்தான் கட்டுப்படியாகும் என்று பட்டது அவனுக்கு. எலும்பைக் குடையும் நுவரெலியா குளிருக்கு. இந்த ஒரு சூரியன் போதாதுதான். டார்வினின் நண்பரும் விஞ்ஞானியும் தத்துவஞானியுமான ஏர்னஸ்ட் ஹெகல் என்பார், உளசு;சோர்வோ உடற்சோர்வோ உள்ளவர்களுக்கு இது ஒரு மெக்கா என்று வர்ணித்த அதே நுவரெலியாதான். இவனுக்கு இரண்டு சோர்வுமே சேர்ந்தாற்போல் வந்திருக்கின்றன. நிற்க முடியவில்லை@ வெடவெடக்கிறது. நடக்க முடியவில்லை@ நடுங்குகிறது. உட்கார முடியவில்லை@ ஊசியாய் குத்துகிறது!…… இப்படியும் ஒரு குளிரா! இப்படியும் ஒரு ஊரா! காற்றின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41384

தெளிவத்தை ஜோசப்- சுப்பையா கமலதாசன் (பொகவந்தலாவை)

(07.09.2011 புதன்கிழமை நடைபெறவிருக்கும் கொடகே சாகித்திய விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் கௌரவ விருது பெறும் தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஐம்பது வருட இலக்கியப் பணி – ஒரு பார்வை) இந்தியா தொழிலாளர்களை அடிமைகளாக தென் ஆபிரிக்கா, டான்சானியா, உகண்டா, பர்மா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த காலம். காலனித்துவ ஆட்சிகாலம் இலங்கையிலும் நிலவிய அந்த காலகட்டத்தில் 1824 ஆம் ஆண்டு கண்டிய பிரதேசத்தில் கோப்பி பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் கூலித் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41404

‘பயணம்’ – தெளிவத்தை ஜோசப்

தபாலாபீஸ் மணிக்கூடு ஒரு முறை அடித்து ஓய்ந்தது. மணி ஒன்று உச்சிப் பொழுது. தரையின் சூடு கண்ணுக்குப் பட்டும் படாமலும் மின்னி மேலேறிக் கொண்டிருந்தது. உஷ்ணத்துக்கே உரிதான தூசி மயமான ஒரு ஜிகினாச் சூழ்நிலை அந்தத் தபாலாபீஸ் சந்தியில் நிறைந்திருந்தது. முன்பெல்லாம் பொட்டலாகக் கிடந்த அந்த இடத்தில் இப்போது மூலைக்கொன்றாய் பஸ் ஸ்டாண்டுகள். தகரக் கூரையும் கூரைக்கடியில் பிதுங்கும் கியூவுமாய், ‘கொழும்பு’ பஸ் ஸ்டாண்டிலிருந்து ‘குட்டியாக்கொலை’ ஸ்டாண்ட் வரை அதற்குள் தான் எங்காவது ஒரு மூலையில் இருக்கும். மொத்தத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41390

Older posts «

» Newer posts