Tag Archive: தெளிவத்தை ஜோசப்

தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் – மதிப்புரை

  2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதை பெற்ற தெளிவத்தை ஜோசப் எழுதிய குடைநிழல் என்னும் நாவலைப்பற்றி மண்குதிரை எழுதிய மதிப்புரை. தி ஹிந்து நாளிதழில்   தெளிவத்தை பற்றி ஒரு குறிப்பு

Permanent link to this article: https://www.jeyamohan.in/88840/

விஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை

அன்புள்ள நண்பர்களுக்கு, மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு நம் நண்பர்களால் உருவாக்கப்பட்ட விருது ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ . எல்லாவகையிலும் அடுத்த தலைமுறையினரால் அளிக்கப்படுவதாக இருக்கவேண்டும் இது என்பதை ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டோம். இதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இம்முறை மூத்த கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் ஒரு லட்சமும் நினைவுப்பரிசும் அடங்கியது இது.வழக்கமாக பரிசுபெறுபவர் பற்றி ஒரு நூல் வெளியிடப்படும். இம்முறை நண்பர் கெ.பி.வினோத் ஞானக்கூத்தனைப்பற்றி தயாரிக்கும் ஆவணப்படம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67272/

ஒரு கடலோர மரம்

நண்பர் செல்வம் கனடாவில் இருக்கிறார். காலம் என்னும் புலம்பெயர்ந்த இதழின் ஆசிரியர். கனடாவில் தமிழிலக்கியச் செயல்பாடுகளின் மையம் போன்றவர் அவர். எண்பதுகளில் தமிழகத்திலிருந்து வெளிவந்த பாலம் என்னும் சிற்றிதழுடன் தொடர்புகொண்டிருந்தவர். 2000-த்தில் நான் அவரது இல்லத்தில் தங்கியிருந்தேன். அப்போது அவரது தாயாரும் அவருடன் இருந்தார். முதிர்ந்த வயது. ஆங்கிலம் தெரியாது. யாழ்ப்பாணத்தின் கடலோரத்தைச் சேர்ந்தவர். நான்கு நாட்களுக்குப் பின்னர்தான் தயக்கம் விலகி என்னிடம் பேசினார். பேசத் தொடங்கியதும் தன் அலைக்கழிப்புகளையும் துயரங்களையும் சொல்லிக்கொண்டே இருந்தார். அவரது பிரச்சினை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/46352/

விழாவில் ஓர் உரை

இந்தியாசவிலிருந்து பஞ்சம் பிழைக்க வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்களின் கதைகளில் எனக்கு, ‘பால் மரக்காட்டினிலே’ என்ற கதையும் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’யும், ‘காக்காய் விரட்டப் போனவன்’, என்ற கதையும் நினைவிலிருக்கிறது. ஆனால் அவை ஒரு நாவல் அளிக்கக்கூடிய முழுமையான வாழ்வின் அனுபவத்தை எனக்கு வழங்கவில்லை. நான் அறிந்திராத இலங்கை மலையகத் தமிழ் வாழ்க்கை, தெஜோ. அவர்களின் எழுத்தின் மூலம் மலையகத்தின் குளிர், மழையில் நனைந்த அந்த மண் மணம், தேயிலை வாசம், தொழிலாளர்களின் வியர்வைக் குருதி மணம் ஆகியவை முகத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44242/

விழா 2013

மீண்டும் ஒரு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா. இன்றுகாலை நாகர்கோயில் ரயிலில் திரும்ப வந்திறங்கியபோது ஆழ்ந்த மனநிறைவும் சோர்வும் எஞ்சியிருந்தது. எல்லா விழாக்களும் இனிய சோர்வைத்தான் மிச்சம் வைக்கின்றன. வாழ்க்கை விழாவாகவே இருந்துவிடமுடியாது என்ற யதார்த்தம் அளிக்கும் சோர்வு அது. மிட்டாயையே மூன்றுவேளையும் உணவாகச் சாப்பிடமுடியாது என்று உணரும் குழந்தையின் நிலை. இருபத்தொன்றாம்தேதி நானும் அஜிதனும் காலையில் தங்குமிடமாக ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்திற்குச் சென்றபோது அங்கே முப்பது நண்பர்களுக்குமேல் ஏற்கனவே வந்திருந்தனர். குளித்துக்கொண்டும், உடைமாற்றிக்கொண்டும், பேசிக்கொண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43537/

விழா எதிர்வினைகள்

இவ்வாண்டு விருது விழா மிகச் சிறப்பாக நடந்தது. சனிக்கிழமை இரவு ஒன்பதரைக்கு அங்கு சென்றிறங்கியது முதல் தனா என்னை ஞாயிறு இரவு இரவு பத்தரைக்கு பஸ் ஏற்றி விடும் வரை எவருடனோ பேசிக்கொண்டோ அல்லது எவர் பேசுவதை கவனித்துகொண்டோ தான் இருந்தேன். தெளிவத்தை, இ.பா, ஜெ, நாஞ்சில், தேவதேவன், யுவன், சுரேஷ்குமார் இந்திரஜித், சு.வேணுகோபால், சூத்ரதாரி கோபாலகிருஷ்ணன், மோகனரங்கன், ரமேஷ் என படைப்பாளுமைகளுடன் சரி நிகராக அமர்ந்து அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பது ஒரு அலாதியான அனுபவம். படைப்பிலக்கியலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43552/

தெளிவத்தையின் மீன்கள் பற்றி…

‘மீன்கள்’ என்ற தலைப்பு அபாரம். மிகப் பொருத்தமான படிமம். அதே நீர்நிலைக்குள் உறையும் மீன்தான். அதன் எல்லையும் அதுதான். ஆனாலும் தன்னிலும் சிறிய மீனை விழுங்கவே செய்கிறது. ‘எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!’ என்பது அபாரமான சொல்லாட்சி. தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் சிறுகதை பற்றி கோபி ராமமூர்த்தி

Permanent link to this article: https://www.jeyamohan.in/41936/

தெளிவத்தை ஜோசப்- இளவயதுப்படங்கள்

தெளிவத்தை ஜோசப் மாணவராக காதலித்து மணந்துகொண்ட மனைவியுடன் தெளிவத்தை ஜோசப் மகளின் பிறந்தநாள் விழாவில் தெளிவத்தை ஜோசப் தெளிவத்தை நண்பர்களுடன் இரண்டு இரவுகள் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு அந்த தியேட்டருக்குள்ளேயே இருந்தோம். இந்த சம்பவத்தை வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது’ என்று தான் உயிர் மீண்ட கதையை சொல்லி முடித்தார் ஜோசப். மணி ஸ்ரீகாந்தன் – தமிழகத்தில் ‘விஷ்ணுபுரம்’ விருது பெறும் தெளிவத்தையுடன் சில நிமிடங்கள்…..

Permanent link to this article: https://www.jeyamohan.in/43480/

தெளிவத்தை ஜோசப்பின் ‘மனிதர்கள் நல்லவர்கள்’ -முருகபூபதி

இந்த ஆண்டு தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதைப்பெற்றுக்கொள்ளும் தெளிவத்தை ஜோசப் இலங்கை மலையகத்தின் மூத்த எழுத்தாளர். இவரை உங்களில் பலர் 2009 ஆம் ஆண்டு நாம் அவுஸ்திரேலியாவில் நடத்திய ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் சந்தித்திருப்பீர்கள். வெகு சுவாரஸ்யமாகப்பேசுவார். அவரது எழுத்துக்களும் சுவாரஸ்யமானவை. மனிதர்கள் நல்லவர்கள் என்ற சிறுகதையை அவர் மல்லிகையில் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கிறார். காலத்தை முந்திய கதையென்றாலும் மனித உணர்வுகள் இன்றும் அப்படியே வெவ்வேறு வடிவங்களில்தான் இருக்கின்றன. அதனால் காலத்தை வென்றும் வாழும் கதையாக என்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43330/

மனம்வெளுக்க காத்திருத்தல் – சுனீல் கிருஷ்ணன்

மலையகத் தமிழ் எழுத்தின் முன்னோடி தெளிவத்தை ஜோசப் அவர்களின் படைப்புலக வாசல் எனக்கு திறந்து கொண்டது என்னவோ அண்மைய விஷ்ணுபுர விருது அறிவிப்பிற்கு பின்னர் தான். எனக்கு வாசிக்கக் கிடைத்த ஏழு சிறுகதைகள், மூன்று குறுநாவல்கள், சுப்பையா கமலதாசன் அவருடைய இலக்கிய வாழ்வைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை, மற்றும் ஒரு நாவல் ஆகியவை அளித்த சித்திரத்தை தொகுக்கும் முயற்சியே இக்கட்டுரை. சுனில் கிருஷ்ணன் என்வரையில் அவருடைய படைப்புகள் இரு களங்களில் இயங்குகின்றன. ஒன்று மலையக தோட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42879/

Older posts «