Tag Archive: தெங்குமராட்டா

கருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை – 1

ஈரோடு செங்குந்தர் பொறியியல்கல்லூரியில் பேசச்சென்றபோது அப்படியே ஒரு கானுலாவுக்கும் செல்லலாம் என ஈரோடு நண்பர் சிவா சொன்னார். கல்லூரிப் பேச்சு நான்கு மணிக்கு முடிந்தது. மாலை ஐந்துமணிக்கே செல்லலாம் என கல்லூரி தாளாளர்களில் ஒருவரான சிவானந்தம் சொன்னார். அவர் கடந்த பதினைந்தாண்டுக்காலமாக தொடர்ச்சியாக கானுலா சென்று வரக்கூடியவர். அதற்காக ஒரு குழுவே அவருடன் இருக்கிறது. நான் அஜிதனும் அதில் பங்கெடுக்கலாமென நினைத்தேன். அஜிதன் இரவு எட்டுமணிக்குத்தான் பெங்களூரில் இருந்து வந்தான். ஒன்பதுமணிக்கு கோத்தகிரிக்கு காரில் கிளம்பினோம். சிவானந்தன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31454

கருக்கியூர் முதல் தெங்குமராட்டா வரை- 2

தொடர்ச்சி மீண்டும் காடு வழியாக நடை. காட்டுக்குள் கரடியும் பன்றியும் மண்ணை பிராண்டிக் குவித்திருந்தன. மரங்களுக்குக் கீழே புலி தன் எல்லைத்தடத்தை பதித்திருந்ததை கண்டோம். இருட்ட ஆரம்பித்தது. இன்னும் இருட்டினால் காட்டுக்குள் சிக்கிவிடுவோம் என பிரபு அச்சுறுத்தினார். இரவு அடங்கும் நேரத்தில் கல்லம்பாளையம் என்ற சிற்றூரை வந்து சேர்ந்தோம். கிட்டத்தட்ட நான்குகால்களில் நடந்தோம் என்று சொல்லவேண்டும். இடுப்பிலும் கால்களிலும் உக்கிரமான வலி. கல்லம்பாளையம் சிறிய மலைக்கிராமம். நூறு வீடுகள் இருக்கலாம். அதன் தெருக்களைச் சுற்றி கம்பிகட்டி அதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31560