மூன்றாம்காடு : துவைதம் [ 1 ] காலையிளவெயில் எழுவது வரை துவைதவனத்தின் எல்லையில் இருந்த தாபதம் என்னும் சிறிய குகைக்குள் தருமனும் இளையவர்களும் திரௌபதியும் தங்கியிருந்தனர். அவர்களுக்குத் துணையாக வந்த ஏழு சௌனக வேதமாணவர்கள் இரவில் துயிலாமல் காவல்காக்க வழிநடைக் களைப்பால் அவர்கள் ஆழ்ந்து உறங்கினர். அத்துயிலில் தருமன் அம்பு பட்டு அலறும் தனித்த மான் ஒன்றை கனவு கண்டார். பீமன் பிடிகளுடன் முயங்கி நின்றிருக்கும் மதகளிற்றை. அர்ஜுனன் வானில் பறக்கும் வெண்நாரையை. திரௌபதி குகைக்குள் …
Tag Archive: துவைதம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/89414
துவைதம்
பிரம்மம் பிரபஞ்சம் ஆத்மா ஆகியவை எந்நிலையிலும் இணையாத முற்றிலும் வேறுபட்ட இருப்புகள் என்று சொல்லும் தத்துவ கோட்பாடுதான் துவைதம். பிரம்மமே பிற அனைத்தும் என்ற சங்கரவேதாந்தத்தை துவைதம் முற்றாக மறுக்கிறது . இறுதிநிலையில் அனைத்தும் பிரம்மத்தில் ஒடுங்குகின்றன என்ற விசிஷ்டாத்வைதித கொள்கையையும் அது ஏற்பது இல்லை
Permanent link to this article: https://www.jeyamohan.in/7726