Tag Archive: துர்முகன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-28

துச்சகனும் துர்முகனும் வீழ்ந்ததை தொலைவிலிருந்தே சுபாகு கண்டான். “தேரை திருப்புக… மூத்தவரிடம் செல்க!” என்று ஆணையிட்டான். அவனுடைய தேர் அணுகிவருந்தோறும் அங்கே நிகழ்ந்திருந்த அழிவு மேலும் துலங்கியபடி வந்தது. பீமனும் மைந்தரும் விசைகொண்டு கௌரவப் படையை தாக்கிக்கொண்டிருந்தார்கள். கௌரவப் படை உளமழிந்து பல துண்டுகளாக சிதறி அவர்களின் அம்புகள் முன் எளிய விலங்குகள் என விழுந்து உயிர்துறந்தது. மேலிருந்து கட்டிய கயிறு அறுந்து ஓவியத்திரைச்சீலை விழுந்து சுருள்வதுபோல ஒரு படைப்பிரிவே அவர்களின் அம்புகளால் விழிமுன் இருந்து மறைவதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121517

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27

பீமன் மீண்டும் தேரில் ஏறிக்கொள்ள சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் தங்கள் தேர்களில் அவனை தொடர்ந்தனர். படைமுகப்பை நோக்கி அவர்கள் செல்கையிலேயே மிகத் தொலைவில் அர்ஜுனன் மீண்டும் கர்ணனை எதிர்கொண்ட செய்தியை அறிவித்தன முரசுகள். திருஷ்டத்யும்னனின் ஆணை காற்றில் அலைமோதியது. “ஒருங்கிணையுங்கள்! ஒருங்கிணையுங்கள்! ஒவ்வொருவரும் பிறருடன் ஒருங்கிணைந்துகொள்ளுங்கள். வேல்முனைச்சூழ்கை திரள்க! நூற்றுவரும் ஆயிரத்தோரும் வேல்முனையின் கூர் ஆகுக! முதன்மை வீரர் பின் பிறர் திரள்க!” ஆனால் கௌரவப் படையினர் முதலை வடிவை அகற்றி பிறைவடிவை மேற்கொண்டனர். பிறையின் வலது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121514

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-64

சஞ்சயன் சொன்னான்: அரசே, எவருடைய கண்களால் நான் பார்க்கிறேன் என்று தெரியவில்லை. நான் எங்கோ இக்கதையை ஓர் அரக்கர் கூட்டத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன். மறு சொற்றொடரை நாகர்களுக்கு சொல்கிறேன். ஆழ்ந்த கனவென அக்காட்சி திரும்புகையில் அரண்மனையில் காந்தாரப் பேரரசியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இப்போது இதை சொல்லும்போது நான் எங்கோ ஒரு வழிச்சாவடியில் வணிகர் நடுவே விழியிலாத சூதனாக அமர்ந்து இக்கதையை பாடுவதாக உணர்கிறேன். படைகளுக்கு மேல் இரும்புக்கவசம் இருளில் விண்மீன் ஒளியில் மின்னும் சுனைநீர்போல அலைகொள்ள பால்ஹிகர் சென்றுகொண்டிருப்பதை துரியோதனன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118391

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 65

[ 4 ] எதிர்ப்படும் அனைத்தின் மீதும் கடும் சினத்துடன் கர்ணன் தன் அரண்மனைக்கு சென்றான். அவனால் அமரமுடியவில்லை. நிலையழிந்து சுற்றிக்கொண்டிருந்தான். ஏவலனை அனுப்பி திரிகர்த்த நாட்டு கடும் மதுவை வரவழைத்து அருந்தினான். மது உள்ளே சென்று அங்கிருந்த எண்ணங்களின் மீது நெய்யாக விழுந்து மேலும் பற்றிக்கொண்டது. உடல் தளர்ந்து கால்கள் தள்ளாடியபோதும் உள்ளம் எரிந்துகொண்டிருந்தது. ஏவலனை அனுப்பி இளைய அரசியின் அரண்மனையில் அரசர் இருக்கிறாரா என்று பார்க்கச் சொன்னான். அவன் திரும்பி வந்து அங்கு அரசர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88060

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 36

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 13 புஷ்பகோஷ்டத்தின் பெருமுற்றத்தில் தேர் நிற்க படிகளில் கால் வைக்காமலேயே இறங்கி சகடங்கள் ஓடி மெழுகெனத் தேய்ந்திருந்த தரையில் குறடுகள் சீர்தாளமென ஒலிக்க நடந்து மாளிகைப்படிகளில் ஏறி கூடத்தை அடைந்த கர்ணனை நோக்கி வந்த பிரமோதர் தலைவணங்கி “அமைச்சர் தங்களை மும்முறை தேடினார்” என்றார். கர்ணன் தலையசைத்தான். “சென்று அழைத்து வரவா என்று வினவினேன். வேண்டாமென்றார்.” தலையசைத்து “அரசர் எங்கிருக்கிறார்?” என்றான் கர்ணன். “உள்ளவைக்கூடத்தில் இளையோருடன் இருக்கிறார்” என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83358

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 34

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 11 துச்சளை இருகைகளாலும் கர்ணனின் வலக்கையை பற்றி தன்தோளில் வைத்து அதில் கன்னங்களை அழுத்தியபடி “மூத்தவரே, என் கனவில் எப்படியும் நாலைந்துநாட்களுக்கு ஒருமுறை நீங்கள் வந்துவிடுவீர்கள். ஒவ்வொருமுறையும் நீங்கள் விண்ணிலிருந்து பேசுவது போலவும் நான் அண்ணாந்து உங்கள் குரலை கேட்பது போலவும்தான் இருக்கும். இப்போதுதான் தெரிகிறது. உங்கள் முகம் எனக்கு தலைக்குமேல் நெடுந்தொலைவில் உள்ளது. இப்படி நிமிர்ந்து பார்த்தால் வானத்தின் பகைப்புலத்தில் தெரிகிறீர்கள்” என்றாள். துச்சலன் “ஆகவேதான் அவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83196

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 33

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 10 விதுரர் கர்ணனிடம் “இனிமேல்தான் இளவரசரின் நகர்நுழைவுச் சடங்கு அரசே” என்றார். கர்ணன் புன்னகையுடன் “அந்த வெள்ளையானை வீணாகக் கொட்டிலில் நின்று உண்கிறதே என எண்ணியிருக்கிறேன். அதற்கும் ஒருநாள் வந்தது” என்றான். விதுரர் வாய்க்குள் புன்னகைத்து “காலையில்தான் தோன்றியது, தேவைப்படும் என்று” என்றார். கர்ணன் துச்சலனிடம் “இளைய கௌரவர்களை இறங்கவைக்கலாமே” என்றான். “இல்லை மூத்தவரே, இன்னும் சடங்குகள் உள்ளன” என்றான் துச்சலன். “அவர்கள் இங்கு வந்து என்ன செய்வார்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83178

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 32

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 9 கங்கைச்சாலையில் மரக்கூட்டங்கள் மறைத்த தொலைவில் முரசொலி வலுத்துக்கொண்டே வந்தது. காட்டிற்குள் அவ்வொலி சிதறிப்பரந்து மரங்களால் எதிரொலிக்கப்பட்டு அனைத்து திசைகளிலிருந்தும் வந்து சூழ்ந்தது. பின்பக்கம் கோட்டைமேல் மோதிய காற்று செம்புழுதி சுழல மீண்டு வந்து அவர்கள்மேல் படிந்து அடங்கியது. தொலைவொலிகள் அஸ்தினபுரியின் கோட்டையில் மோதி மீண்டுவந்தன. காத்துநின்ற புரவிகள் சற்றே பொறுமையிழந்து கால்களை தூக்கிவைத்து பிடரிகுலைத்த மணியோசை எழுந்தது. யானைகள் காதுகளை ஆட்டியபடி முன்னும்பின்னும் உடலாட்டும் அசைவு இருண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83162

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 31

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 8 முதன்மைக்கூடத்திற்கு வெளியே முற்றத்தில் படைநிரையின் கொம்புகளும் முழவுகளும் ஒலிக்கத்தொடங்கின. துச்சலன் “நன்கு ஒளிவந்துவிட்டது. இனிமேலும் நாம் பிந்தலாகாது மூத்தவரே” என்று வெளியே சென்றான். “ஆம், கிளம்புவோம்” என்று நூற்றுக்கணக்கான தொண்டைகள் கூச்சலிட்டன. “பெரீந்தையே, என் ஆடையை காணவில்லை” என்று ஒரு குரல் கேட்டது. “பெரீந்தையே, இவன் என் வாளை எடுத்துக்கொண்டான்.” “பெரீந்தையே, யானை எப்போது வரும்?” கர்ணன் “நாம் இப்போது கோட்டைமுகப்புக்கு செல்கிறோம்” என்றான். அத்தனை பேரும் ஒரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83152

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 30

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 7 முதற்பறவைக் குரல் எழுவதற்கு முன்னரே எழுந்து நீராடி, ஆலய வழிபாட்டுக்குரிய வெண்பருத்தி ஆடை சுற்றி ஒற்றை முத்துமாலையும் கங்கணங்களும் அணிந்து, கதிர்க்குறி நெற்றியிலிட்டு கர்ணன் சித்தமாகிக் கொண்டிருந்தபோது கீழே குழந்தைகளின் ஒலி கேட்டது. முதலில் அவன் அதை கலைந்த பறவைத்திரளின் ஒலி என்று எண்ணினான். மறுகணமே குழந்தைகளின் குரல் என்று தெரிந்ததும் முகம் மலர அறையைத் திறந்து இடைநாழிக்கு வந்தான். மறுஎல்லையில் படிகளில் இளைய கௌரவர்கள் காடுநிறைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83108