Tag Archive: துரியோதனன்

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 48
பானுமதியின் மஞ்சத்தறையில் முன்னரே துரியோதனன் வந்து காத்திருந்தான். அவள் வாயிலை அடைந்தபோது அங்கு நின்றிருந்த ஆணிலி தலைவணங்கி அரசர் உள்ளிருப்பதை ஓசையின்றி குறிப்பிட்டாள். அவளிடம் செல்லும்படி கைகாட்டிவிட்டு ஒருகணம் நின்றாள். தன் ஆடையையும் குழலையும் சீரமைக்க விழைந்தாள். அங்கு ஓர் ஆடி இருந்தால் நன்று என்று தோன்றியது. கதவை மெல்ல தொட்டு மீண்டும் ஒருகணம் தயங்கி திறந்து உள்ளே சென்றாள். துரியோதனன் மஞ்சத்தில் கைகளை மார்பில் கட்டியபடி நிகர்கொண்ட தோள்களுடன் விழிதாழ்த்தி அசைவிழந்து அமர்ந்திருந்தான். அவள் கதவில் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/111202

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 44
பானுமதி தாழ்வான சாய்ந்த பீடத்தில் தலைசரித்து கால்நீட்டி அமர்ந்து மார்பில் கைகளைக் கட்டியபடி விழிமூடி கேட்டுக்கொண்டிருக்க அவளுக்கு இருபுறமும் அமர்ந்த கற்றுச்சொல்லிப் பெண்டிர் ஓலைகளை படித்துக்காட்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கற்றுச்சொல்லிக்கும் இரு எடுத்தளிப்புச் சேடியர் வலமும் இடமுமென அமர்ந்து ஒருத்தி சுவடியை கொடுக்க பிறிதொரு சேடி வாங்கி மீண்டும் பேழையில் அடுக்கிக்கொண்டிருந்தாள். ஒரு கற்றுச்சொல்லி ஓர் ஓலையை படித்து முடித்ததுமே பானுமதி ஒற்றைச் சொல்லால் ஆமென்றோ அல்லவென்றோ ஆணையிட்டாள். அரிதாக தன் எண்ணத்தை உரைத்து ஆவன செய்யவேண்டியவற்றை கூறியதுமே …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/111052

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 41
துரியோதனன் “அஸ்தினபுரியிலிருந்து நீ விரும்பியதை கொண்டுசெல்லலாம், இளையோனே” என்றான். “இங்கு நீ கௌரவரில் ஒருவன். கருவூலத்தில் நூற்றொன்றில் ஒன்று உன்னுடையது. அஸ்தினபுரியின் படைகளிலும் நூற்றொன்றில் ஒன்று உனக்குரியது.” யுயுத்ஸு “இங்கிருந்து நான் எதையும் எடுத்துச் செல்லலாகாதென்று உறுதிகொண்டிருக்கிறேன். ஆகவே இந்நகரின் எல்லையில் இவ்வாடைகளையும் களைந்து மரவுரி அணிந்தபடி இளைய யாதவரை நோக்கி செல்லவிருக்கிறேன்” என்றான். “நன்று! அது உன் விருப்பம். இங்கிருந்து நினைவுகளையும் உணர்வுகளையும்கூட எடுத்துச் செல்லவேண்டியதில்லை, இளையோனே” என்றான் துரியோதனன். குண்டாசி “அதாவது அஸ்தினபுரியின் படைசூழ்கைகளை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/110948

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 40
குடிக்கக் குடிக்க பெருகும் விடாய் கொண்டிருந்தான் குண்டாசி. இரு கைகளாலும் கோப்பையைப்பற்றி உடலை கவிழ்த்து ஒரே மூச்சில் உள்ளிழுத்து விழுங்கினான். “மேலும்! மேலும்!” என்று கூவியபடி அமர்ந்திருந்த பீடத்தை ஓங்கி தட்டினான். தீர்க்கன் “போதும், இளவரசே. தங்கள் அளவுக்குக்கூட இதுவரை அருந்தியது மிகுதி. இதற்குமேல் தாளமாட்டீர்கள். ஏற்கெனவே இருமுறை தங்களுக்கு வலிப்பு வந்துள்ளது. மூன்று கோப்பைக்கு மேல் அருந்துவது தங்கள் உயிருக்கே இடர் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றான். “உயிர் இன்னும் நெடுநாட்கள் தங்க வேண்டியதில்லை. கொண்டுவரச் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/110932

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 37
லட்சுமணனும் உபகௌரவர்களும் சென்று வஞ்சினம் உரைத்து மறுபக்கம் செல்லும்போதுதான் குண்டாசி விகர்ணனை பார்த்தான். அவன் இறுகிய முகத்துடன் அசையாமல் நின்றிருந்தான். துரியோதனன் விகர்ணனை பார்த்தான். அவன் விழிகள் ஒருகணம் சுருங்கி பின் மீண்டன. துச்சாதனன் ஏதோ சொல்ல உடலெழப்போனபோது மெல்லிய உறுமலால் அதை துரியோதனன் நிறுத்தினான். அனைத்து விழிகளும் விகர்ணனில் பதிந்திருந்தன. விகர்ணன் திரும்பிவிடுவான் என்று குண்டாசி ஒருகணம் எண்ணினான். ஆனால் அவன் ஏன் வந்தான் என்ற எண்ணம் மீண்டும் எழுந்தது. அரண்மனை முற்றத்திலிருந்து கிளம்பும்போது விகர்ணனை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/110877

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 36
அஸ்தினபுரியின் தென்மேற்கு எல்லையில் குருதிகொள் கொற்றவையின் சிற்றாலயம் அமைந்திருந்தது. படைப்புறப்பாட்டிற்கு பலிபூசனை செய்வதற்கு மட்டுமே உரிய அவ்வாலயம் மாமன்னர் ஹஸ்தியினால் அந்நகரம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே அங்கிருந்தது. புராணகங்கையின் சிற்றோடைகள் பரந்தோடியமையால் பசுமை கொழித்த அந்த அரைச்சதுப்பில் அந்த இடம் மட்டும் வட்டமான வெற்றிடமாக கிடந்தது. அங்கே கன்றோட்ட வந்தவர்கள் அவ்வெற்றிடத்தை விந்தையாக கண்டனர். எங்கும் ஈரம் பரவியிருந்த அப்பகுதியில் உலர்ந்திருந்த அந்நிலம் அமர்வதற்குரியதென்றாலும் அதன் விந்தைத்தன்மையாலேயே அவர்கள் அங்கே அமரவில்லை. அமர முற்பட்ட இளையோரை முதியோர் தடுத்து …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/110862

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 34
குண்டாசி வழுக்கும் பாறைகளினூடாக கால்வைத்து கைகளை ஊன்றி சிலமுறை சறுக்கியும் பாறைகளில் பற்றி நிலைகொண்டும் மெல்ல எழுந்து நடுவே ஓடிய நீரோடைகளை மிதித்து மறுபக்கம் கடந்தும் சென்றுகொண்டிருந்தான். அப்பால் ஒரு மலைப்பாறையில் பெரிய கால்களை அவன் பார்த்தான். அருகே சென்று எழுந்து சற்று மேலே தொங்கிய மேலாடையைப்பற்றி இழுத்து “மூத்தவரே, என்னை தூக்குங்கள்! என்னை தூக்குங்கள்!” என்றான். கால்களை உதைத்து சிணுங்கலாக “என்னை தூக்குங்கள்! என்னை தூக்குங்கள்!” என்று கூறி திமிறினான். இடையாடையைப்பற்றி இழுத்தான். மேலிருந்து பீமனின் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/110718

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 33
துரோணர் பீஷ்மர் கைமேல் தன் கையை வைத்து மெல்ல உலுக்கினார். திடுக்கிட்டவர்போல் அவர் திரும்பிப்பார்க்க தாழ்ந்த குரலில் அவர் ஏதோ சொன்னார். முற்றிலும் புதியவர்களை பார்ப்பதுபோல் பீஷ்மர் தன்னைச் சூழ்ந்து எழுந்து நின்றிருந்த அரசர்களை பார்த்தார். “என்ன? என்ன?” என்று கேட்டார். அவருடைய தலை மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. தாடை இறங்கி வாய் நீள்வட்டமாக திறந்திருந்தது. பீஷ்மர் எதையும் உணரவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டபோது ஒருகணம் அவர் மறுத்துவிடக்கூடும் என்ற ஐயத்தை பூரிசிரவஸ் அடைந்தான். அவர் மறுத்துவிட்டால் ஒவ்வொன்றும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/110691

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 32

tig
அவையில் மீண்டும் ஓசை அடங்கத் தொடங்கியிருந்தது. கதவை திறப்பதற்கு முன் உள்ளே ஓசைகொந்தளிக்கும் அவை இருப்பதாக எண்ணியிருந்தமையால் திறந்ததும் வந்தறைந்த ஓசையின்மை திகைப்பூட்டியது. சூழ நோக்கியபடி பூரிசிரவஸ் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான். அவன் விழிகள் திருதராஷ்டிரரை தேடின. திருதராஷ்டிரரும் சஞ்சயனும் யுயுத்ஸுவும் அங்கு இல்லை என்பதைக் கண்டதும் சற்று சலிப்பும் விந்தையானதோர் துயரும் அவனுக்கு ஏற்பட்டது. பீடத்தில் அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டு அவை மேடையை நோக்கத் தொடங்கினான். துரியோதனன் மணிமுடியையும் செங்கோலையும் தாலங்களில் வைத்துவிட்டு இயல்பாக …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/110670

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31
அரசப்பேரவை போரின்பொருட்டு கூடத்தொடங்கிய பின்னர் ஒருபோதும் திருதராஷ்டிரர் ஒரு சொல்லேனும் அவையில் சொன்னதில்லை என்பதை அவையினர் உணர்ந்திருந்தனர். அவர் அங்கிருப்பதையே பல தருணங்களில் மறந்தும்விட்டிருந்தனர். சஞ்சயனின் அறிவிப்பு அவை முழுக்க திகைப்பையும் பின் முழக்கத்தையும் உருவாக்கியது. கனகர் கைகாட்ட கொம்பின் பிளிறலோசை எழுந்து அடங்க அவை அமைதிகொண்டது. திருதராஷ்டிரர் பீடத்தின் இரு பிடிகளிலும் கைகளை ஊன்றி உடலை உந்தி எழுந்து நின்றார். இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி அவர் வணங்கியபோது அவருடைய பேருடலின் தசைகள் அசைந்தன. அப்போதும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/110625

Older posts «