Tag Archive: துச்சளை

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 35

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 12 அரண்மனையின் பெரிய உட்கூடத்தின் வாயிலை அடைந்ததும் கர்ணன் “முன்னால் செல் தங்கையே! நீ உன் இல்லம் புகும் நாள்” என்றான். அவள் திரும்பி புன்னகைத்து “ஆம் மூத்தவரே, என் கால்கள் நடுங்குகின்றன” என்றாள். சுநாபன் “விழுந்துவிடாதே. பேரொலி எழும்” என்றான். கையை நீட்டி  “போடா” என்றபின் அவள் கைகூப்பியபடி முன்னால் சென்றாள். அவள் நடை சற்றே தளர, பெரிய இடை ஒசிய அழகிய தளுக்கு உடலில் குடியேறியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83220

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 34

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 11 துச்சளை இருகைகளாலும் கர்ணனின் வலக்கையை பற்றி தன்தோளில் வைத்து அதில் கன்னங்களை அழுத்தியபடி “மூத்தவரே, என் கனவில் எப்படியும் நாலைந்துநாட்களுக்கு ஒருமுறை நீங்கள் வந்துவிடுவீர்கள். ஒவ்வொருமுறையும் நீங்கள் விண்ணிலிருந்து பேசுவது போலவும் நான் அண்ணாந்து உங்கள் குரலை கேட்பது போலவும்தான் இருக்கும். இப்போதுதான் தெரிகிறது. உங்கள் முகம் எனக்கு தலைக்குமேல் நெடுந்தொலைவில் உள்ளது. இப்படி நிமிர்ந்து பார்த்தால் வானத்தின் பகைப்புலத்தில் தெரிகிறீர்கள்” என்றாள். துச்சலன் “ஆகவேதான் அவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83196

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 33

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 10 விதுரர் கர்ணனிடம் “இனிமேல்தான் இளவரசரின் நகர்நுழைவுச் சடங்கு அரசே” என்றார். கர்ணன் புன்னகையுடன் “அந்த வெள்ளையானை வீணாகக் கொட்டிலில் நின்று உண்கிறதே என எண்ணியிருக்கிறேன். அதற்கும் ஒருநாள் வந்தது” என்றான். விதுரர் வாய்க்குள் புன்னகைத்து “காலையில்தான் தோன்றியது, தேவைப்படும் என்று” என்றார். கர்ணன் துச்சலனிடம் “இளைய கௌரவர்களை இறங்கவைக்கலாமே” என்றான். “இல்லை மூத்தவரே, இன்னும் சடங்குகள் உள்ளன” என்றான் துச்சலன். “அவர்கள் இங்கு வந்து என்ன செய்வார்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83178

பெண்களின் நகரம்

வெண்முகில்நகரம் தொடங்கும்போது வழக்கம்போல ஒரு மெல்லிய கதைக்கட்டுமானமே உள்ளத்தில் இருந்தது. இது பிரயாகையின் தொடர்ச்சி போன்ற நாவல். திரௌபதியின் குணச்சித்திரம் முழுமையடைவதை காட்டுவது. பிரயாகையில் திரௌபதி பிறப்பதற்கான முகாந்திரமும் அவள் இளமையும் அவளுடைய திருமணமும் சொல்லப்பட்டிருக்கின்றன. வெண்முகில்நகரம் அவளுடைய ஆளுமை முதிர்ச்சியடைந்து, அவளுடைய மிகப்பெரிய கனவாக இந்திரப்பிரஸ்தம் எழுவதுவரை செல்கிறது. ஆனால் வழக்கம்போல எழுதும்போது நாற்புறமும் விரிந்துசென்று மெல்ல ஒருங்கிணைந்து வடிவம்கொண்டது வெண்முகில்நகரம். இன்று இது பாஞ்சாலியின் கதைமட்டும் அல்ல, கூடவே அஸ்தினபுரிக்கு வந்துசேரும் இளவரசிகளின் கதை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74661

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 90

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 9 திரௌபதி குனிந்து மூன்றுமுறை அஸ்தினபுரியின் மண்ணை வணங்கி அதன் ஒரு துளியை எடுத்து நெற்றி வகிட்டில் அணிந்துகொண்டதும் இசை அடங்கியது. சூதர்களும் அணிப்பரத்தையரும் சேடியரும் மங்கலைகளும் பின்வாங்கி தேர்களை நோக்கி சென்றனர். அப்பால் தேர்கள் அணிவகுப்பதற்கான ஆணை ஒலித்தது. சௌனகர் வணங்கியபடி சென்று திரௌபதியை அணுகி “அஸ்தினபுரி தங்கள் பாதங்களை அன்னை என ஏற்று மகிழ்கிறது இளவரசி. இந்த நாள் இந்நகரின் வரலாற்றில் அழியாநினைவாக நீடிக்கும். பாஞ்சால ஐங்குலங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74509

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 83

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 2 கிருஷ்ணன் உள்ளே மஞ்சத்தறையில் பேரரசியுடன் இருப்பதாக சேடி சொன்னாள். பூரிசிரவஸ் அவளிடம் “என்ன செய்கிறார்?” என்றான். “குழலூதுகிறார்” என்றாள். பூரிசிரவஸ் திகைப்புடன் “என்ன செய்கிறார்?” என்று மீண்டும் கேட்டான். “வேய்குழல் ஊதுகிறார்” என்றாள். பூரிசிரவஸ் அப்போதும் புரிந்துகொள்ளாமல் “சூதர் ஊதுகிறாரா?” என்றான். அவள் “இல்லை, கண்ணன் ஊதுகிறார். மகளிர் அனைவரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். “யார்?” என்றான் பூரிசிரவஸ். “கண்ணன்” என்ற சேடி “பொறுத்தருளவேண்டும் இளவரசே. அனைவரும் அப்படித்தான் சொல்கிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74319

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 75

பகுதி 15 : யானை அடி – 6 நோயில் படுத்திருந்தபோது இருந்த உளநிலைகளும் எழுந்தமரும்போது உருவாகும் உளநிலைகளும் முற்றிலும் வேறானவை என்று துரியோதனன் அறிந்துகொண்ட நாட்கள் அவை. படுக்கையில் எழுந்து அமர்ந்திருக்கத் தொடங்கியபின் அயலவர் எவரையும் சந்திக்க அவன் விழையவில்லை. ஆனால் படுத்திருக்கையில் ஒவ்வொருநாளும் அவனைப்பார்க்க எவரெல்லாம் வருவார்கள் என்பதையே எண்ணிக்கொண்டிருந்தான். படுத்திருக்கையில் எழுந்து நிற்கும் உலகிலிருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்டவனாக, உதிர்க்கப்பட்டவனாக உணர்ந்தான். மரங்கள், மனிதர்கள், மலைகள், கட்டடங்கள் என அனைத்துமே எழுந்து நின்றுகொண்டிருந்தன. எழுந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74004

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 70

பகுதி 15 : யானை அடி – 1 துரியோதனன் தன் உள்கூடத்தில் சாய்ந்த பீதர்நாட்டுப்பீடத்தில் அமர்ந்து கைகளை தலைக்குமேல் கட்டிக்கொண்டிருந்தான். அவனெதிரே சிறியபீடத்தில் வரைபடத்தை விரித்துப்போட்டு கர்ணன் கூர்ந்து நோக்க அருகே துச்சாதனன் நின்றிருந்தான். கர்ணன் “நெடுந்தூரம் இளவரசே” என்றான். “ஓரிரவில் கடக்கமுடியலாம். ஆனால் கடந்துவிடலாமென்று உறுதிகொண்டு ஒரு திட்டத்தைப்போடுவது பிழையாக முடியும்.” துச்சாதனன் “முடிந்தவரை நீரில் செல்வோம். நீரில் விரைந்துசெல்லும் பீதர்நாட்டுப் பாய்களை அமைப்போம்” என்றான். “ஆம், ஆனால் அதை முழுமையாக நம்பக்கூடாது என்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73846

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 67

பகுதி 14 : நிழல்வண்ணங்கள் – 2 ஓர் உச்சதருணத்தில் உணர்வுகளை விழிகளில் காட்டாமலிருப்பதற்கு கற்றுக்கொள்வதுவரை எவரும் அரசு சூழ்தலை அறிவதில்லை என்று பூரிசிரவஸ் உணர்ந்த கணம் அது. அவன் விழிகளில் ஒருகணம் முழுமையாகவே அவனுடைய உள்ளம் தெரிந்தது. உடனே அதை வெல்ல அச்சொற்களை புரிந்துகொள்ளாதவன் போல நடித்து “சிசுபாலரா?” என்றான். ஆனால் அந்த நடிப்பு பெரும்பாலானவர்களால் பெரும்பாலான தருணங்களில் செய்யப்படுவதே என அறிந்து “அவரது கோரிக்கையில் பொருள் உள்ளது என்றே படுகிறது” என்றான். அது தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73708

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 64

பகுதி 13 : பகடையின் எண்கள் – 5 படைத்துணைவனாகிய சகன் தொடர்ந்து வர பூரிசிரவஸ் அவைக்குச்சென்றபோது அவைநிகழ்ச்சிகள் முடியும் நிலையில் இருந்தன. அவனுக்காகத்தான் அனைவரும் காத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. ஏவலன் அவனுடைய வருகையை சொன்னதும் சுதீரர் அவனை அவைக்கு அறிவித்தார். வாழ்த்தொலிகள் நடுவே அவைபுகுந்து தலைவணங்கினான். அவைநடுவே சல்லியர் அரியணையில் அமர்ந்திருக்க அருகே இடப்பக்கம் அவரது பட்டத்தரசி விப்ரலதை அமர்ந்திருந்தாள். வலப்பக்கம் நிகரான அரியணையில் த்யுதிமான் இருக்க அவருக்கு மறுபக்கம் அவரது பட்டத்தரசி பிரசேனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73639

Older posts «

» Newer posts