Tag Archive: துச்சளை

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–42

பகுதி ஆறு : பொற்பன்றி – 7 துச்சளை அணிகொண்டு இடைநாழிக்கு வந்தபோது தாரையும் அசலையும் அவளுக்காகக் காத்து நின்றிருந்தனர். தாரை அவளை அணுகி வணங்கி “சற்று முன்னர்தான் தாங்கள் கிளம்பிச்செல்லும் செய்தியை அறிந்தேன், அரசி. பட்டத்தரசிக்கு அறிவித்துவிட்டு ஓடிவந்தேன்” என்றாள். துச்சளை “நான் விதுரருக்கும் அன்னைக்கும் அறிவித்துவிட்டேன். பிறருக்கு முறைப்படி தெரிவிக்கப்படட்டும்” என்றாள். தாரை “சைந்தவர் இங்கிருக்கிறார். உடனிருப்பீர்கள் என்று எண்ணினேன்” என்றாள். “ஆம், அதன்பொருட்டே வந்தேன். இனி என்னால் இங்கிருக்க இயலாது. இருந்து ஆவதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106173

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–41

பகுதி ஆறு : பொற்பன்றி – 6 கலிதேவனின் சிற்றாலயத்தின் முகப்பில் நின்றிருந்த கலிங்கப்பூசகர் ஊர்வர் கைதூக்க அனைத்து இசைக்கலங்களும் ஒலியவிந்தன. அவர் உரத்த குரலில் “இருள்முகத்தோன் வெல்க! எதிரிலான் வெல்க! விழிவலியன் வெல்க!” என்று கூவினார். “வெல்க! வெல்க!” என குரல்கள் இணைந்தொலித்தன. ஊர்வரின் உடல் மழைபட்ட கரும்பாறையென இறுகித்திரண்டிருந்தது. பெரிய குடவயிற்றின்மேல் வெள்ளெலும்பில் செதுக்கிய மணிகளாலான மாலை துவண்டது. எலும்புமணிக் கங்கணம் அணிந்த வலக்கையின் சுட்டுவிரலில் நீலமணியாழி அணிந்திருந்தார். அவருக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் அவரைப்போலவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106157

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–40

பகுதி ஆறு : பொற்பன்றி – 5 கரிய புரவியின் உடலில் செங்குருதியுமிழும் சிறு புண் என தொலைவில் காட்டின் நிழல்அலைகளுக்குள் சிவந்த சிறிய வெளிச்சம் தெரிந்தது. தாரை “அடிகளை அளந்து வைக்கவும். நாம் நடந்துவருவதை பறவைகளும் குரங்குகளும் நோக்கிவிட்டன. அவை நாம் சீராக சென்றுகொண்டிருப்பதுவரை மெல்லிய ஒலியே எழுப்பும். நம்மில் எவரேனும் அடிசறுக்கி மிகையசைவு அளித்தால் அஞ்சி ஓலமிடத் தொடங்கிவிடும்” என்றாள். “உலர்ந்த சுள்ளிகள், சருகுக் குழிகள், பெரிய கூழாங்கற்கள் ஆகியவற்றின்மேல் கால் ஊன்றவேண்டாம்… நான் கால்வைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106119

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–39

பகுதி ஆறு : பொற்பன்றி – 4 காந்தாரியின் அறைமுன்னால் வெளியேவந்து துச்சளையை கைபற்றி அழைத்துச்சென்ற சுதேஷ்ணை “என்னடி களைத்துப்போயிருக்கிறாய்?” என்றாள். துச்சளை “நானா? நன்றாகத்தானே இருக்கிறேன்” என்றாள். “கண்கள் கலங்கியவை போலிருக்கின்றன” என்றாள் சுதேஷ்ணை. “இங்கே நிகழ்வனவற்றை கேட்டால் சிரிப்பா வரும்? வாடி” என்று தேஸ்ரவை அவள் இன்னொரு கையை பற்றினாள். தசார்ணை தாரையிடம் “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றாள். “பேரரசரை பார்க்கச் சென்றோம்” என்றாள் தாரை. எப்படி இருக்கிறார் என அவள் கேட்பாளென தாரை எண்ணினாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106001

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–38

பகுதி ஆறு : பொற்பன்றி – 3  இடைநாழியில் நடந்துகொண்டிருக்கையில் துச்சளை முற்றிலும் தனிமைகொண்டிருந்தாள். அருகே வந்துகொண்டிருந்த தாரை அந்தத் தனிமையை உணர்ந்தவள்போல ஒரு சொல்லும் எடுக்கவில்லை. நின்று நின்று இளைப்பாறி நடுவே ஓர் இடத்தில் சிறுதிண்ணையில் அமர்ந்து ஓய்வெடுத்து அவள் தன் அறையை வந்தடைந்தாள். பீடத்திலமர்ந்து விழிமூடிக்கொண்டாள். அவள் நெற்றிநரம்புகள் புடைத்திருப்பதை தாரை கண்டாள். கிளம்பிவிடலாம் என எண்ணி அவள் உடலில் மெல்லசைவு எழுந்ததுமே துச்சளை விழிதிறந்து “தந்தையின் கைகள்” என்று சொல்லி புன்னகைத்தாள். அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105975

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–37

பகுதி ஆறு : பொற்பன்றி – 2 நகர்நுழைவின் களைப்பு அகல்வதற்குள்ளாகவே துச்சளை திருதராஷ்டிரரை சந்திக்கவேண்டும் என்றாள். அரண்மனையை அடைவதற்குள்ளாகவே அவள் முற்றிலும் உடல் ஓய்ந்திருந்தாள். தேரிலிருந்து காலெடுத்து படிகளில் வைக்கவே அவளால் இயலவில்லை. தேர் நின்றதும் அரைத்துயிலில் என அமர்ந்திருந்தவளிடம் சாரிகை “அரசி, அரண்மனை” என்றாள். அவள் சூழ்ந்தொலித்த ஓசைகளில் முற்றிலும் மூழ்கி வேறெங்கோ இருந்தாள். வாயை துடைத்துக்கொண்டு எழுந்தபோது தேர் ஓடிக்கொண்டிருப்பதாக எண்ணிய உடல் அலைபாய பின்னால் சரிந்து பீடத்தில் ஓசையுடன் விழுந்தாள். அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105971

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–36

 பகுதி ஆறு : பொற்பன்றி – 1 மாலைவெயில் மஞ்சள் கொள்ளத்தொடங்கியபோது அணிப்படகில் சிந்துநாட்டிலிருந்து துச்சளை அஸ்தினபுரியின் எல்லைக்காவலரணான ஹம்ஸதீர்த்தத்திற்கு வந்தாள். அவளுக்குப் பின்னால் சற்று தொலைவில் ஜயத்ரதனின் அரசப்படகு வந்து ஒருநாழிகைக்குப் பின் கரையணைந்தது. சிந்துநாட்டின் காவல்படையும் ஏழு அகம்படியர் குழுக்களும் அவர்களுடன் வந்தன. அவர்கள் சிந்துவழியாக வடக்கே சென்று அங்கிருந்து தேர்களில் வாரணவதம் வந்து பெரும்படகுகளில் கங்கைப்பெருக்கினூடாக ஹம்சதீர்த்தத்திற்கு வந்தனர். ஹம்சதீர்த்தத்தில் அரசகுடியினருக்கு மட்டும் உரிய படித்துறையில் அவர்களை எதிரேற்க அஸ்தினபுரியின் அமைச்சர் மனோதரர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105899

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76

பகுதி ஒன்பது – மயனீர் மாளிகை –  13 இரு தாமிரக்கதவுகள் உள்ளங்கைக்குடுமிக்குழிகளில் உருளைகள் வழுக்கிச்சுழன்று ஓசையின்றி விரியத்திறக்க பேரமைச்சர் சௌனகரும் மறுபக்கம் அமைச்சர் சித்ரகரும் நின்று அனைவரையும் உண்டாட்டு அறைக்கு வரவேற்றனர். “வருக! பருவடிவ உணவு அனல்வடிவம் கொள்ளட்டும்! உண்பதை அமுதாக்கும் அழிவற்ற தேவர்கள் வந்து அவை நிறைக்கட்டும்!” என்று தருமன் கைகூப்பி சொன்னான். ஒவ்வொருவரையும் வரவேற்று தலைவணங்கி புன்னகைத்து ஓரிரு சொல் முகமன் சொல்லி வருகைப்படுத்தினான். “உண்டாட்டறையிலும் மஞ்சத்தறையிலும் பகைமைகள் இல்லை” என்றார் தமகோஷர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85193

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 39

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 16 திருதராஷ்டிரரின் அறையைவிட்டு வெளியே செல்லும்போது கர்ணன் விப்ரரின் கண்களை நோக்கினான். அவற்றிலிருந்த விழியின்மை அவன் நெஞ்சை அதிரச்செய்தது. விப்ரர் மெல்ல நடந்துசென்று திருதராஷ்டிரரின் கைகளை பற்றிக்கொண்டார். இருவரும் கட்டெறும்பு பிறிதொன்றின்மேல் தொற்றிச் செல்வதுபோல மெல்ல சென்றனர். கர்ணன் அதை நோக்கியபின் “முன்பெலாம் விப்ரரின் தோள்கள் ஆற்றல் கொண்டிருந்தன. அவர் அரசரை தாங்கிச்செல்ல முடிந்தது. இப்போது அவராலேயே நடக்க முடியவில்லை” என்றான். துரியோதனன் “ஆம். ஆனால் பிறிதொருவரை அமர்த்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83473

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 38

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 15 இசைக்கூட வாயிலிலேயே விப்ரர் ஓசையற்ற நிழலசைவென தோன்றியதும் அவரை முதலில் அறிந்த திருதராஷ்டிரர் திரும்பி “சொல்லும்” என்றார். முகமன் ஏதுமின்றி அவர் “சிந்துநாட்டு அரசியும் அஸ்தினபுரியின் அரசரும்” என்றார். வரச்சொல்லும்படி கைகாட்டிவிட்டு கர்ணனிடம் “இவ்வரசமுறைமைகளைக் கண்டு சலிப்புற்றுவிட்டேன் மூத்தவனே” என்றார். விப்ரர் மீண்டும் ஆடிப்பாவை ஆழத்திற்குள் செல்வதென வாயிலுக்கு அப்பால் மறைந்தார். கர்ணன் குருதிக்குமிழிக்கண்கள் துடிக்க நின்றிருந்த முனிவரை சில கணங்கள் நோக்கிவிட்டு திருதராஷ்டிரரிடம் “மைந்தர் இங்கிருக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83459

Older posts «