Tag Archive: துச்சகன்

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 60

பகுதி எட்டு: நூறிதழ் நகர் 4 நீள்கூடத்தில் அமர்ந்திருந்த கௌரவர்கள் பன்னிருவரும் கைகளைக்கட்டி தலைதாழ்த்தியும், சாளரங்களினூடாக வெளியே நோக்கியும், தரைப்பளிங்கை காலால் வருடியும் ஆழ்ந்த அமைதியில் இருந்தனர். சாளரத்தருகே இழுத்திட்ட பீடத்தில் உடலைச் சரித்து கைகளை கைப்பிடி மேல் வைத்து வெளியே ஆடும் மரங்களின் இலைநிழல்குவைகளை நோக்கியபடி கர்ணன் அமர்ந்திருந்தான். அவற்றின்மேல் அரண்மனை உப்பரிகைகளின் நெய்விளக்குகளின் செவ்வொளி விழுந்து காற்றசைவுகளில் விழிகளுக்குள் தெறித்துக் கொண்டிருந்தது. குறடுகளின் ஒலி கேட்க ஒவ்வொருவரும் திடுக்கிட்டு நிலைமீண்டனர். மூச்சுகளும் உடல் அசையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84154

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58

பகுதி எட்டு :நூறிதழ் நகர் 2 இந்திரப்பிரஸ்தத்தின் மாளிகைத்தொகுதியில் தன் அணியறையில் கர்ணன் சமையர்களிடம் உடலை அளித்துவிட்டு விழி மூடி தளர்ந்திருந்தான். சிவதரின் காலடியோசை கேட்டு “உம்” என்றான். அக்காலடியோசையிலேயே அவரது தயக்கமும் ஐயமும் தெரிவதை உணர்ந்தான். சிவதர் தலைவணங்குவதை அவனால் விழியின்றி காண முடிந்தது. “சொல்லுங்கள்” என்றான். அவர் மெல்ல கனைத்துவிட்டு “நமக்கான தேர்கள் வெளியே வந்து காத்து நிற்கின்றன அரசே” என்றார். கர்ணன் தலையசைத்தான். சிவதர் மேலும் தயங்குவதை அவனால் உணரமுடிந்தது. “சொல்லுங்கள் சிவதரே” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84047

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 41

பகுதி ஐந்து : பன்னிரண்டாவது  பகடை – 1 முன்புலரியிலேயே கர்ணனின் அரண்மனைமுற்றத்தில் தேரிலிருந்து இறங்கி காலடிகள் ஓசையிட விரைந்து காவலரை பதறி எழச்செய்து “எங்கே? மூத்தவர் எங்கே?” என்றான் சுஜாதன். அவர்கள் மறுமொழி சொல்வதற்குள்ளாகவே கூடத்தில் ஓடி, படிகளில் காலடி ஒலிக்க மேலேறி இடைநாழியில் விரைந்தபடி “மூத்தவரே!” என்று கூவினான். கர்ணனின் துயிலறை வாயிலில் நின்ற காவலன் திகைத்தெழுந்து நோக்க “எங்கே மூத்தவர்? சித்தமாகிவிட்டாரா?” என்றான். கதவைத் திறந்த சிவதர் “கூச்சலிடாதீர்கள் அரசே, அரசர் அணிபுனைகிறார்” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83537

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 31

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 8 முதன்மைக்கூடத்திற்கு வெளியே முற்றத்தில் படைநிரையின் கொம்புகளும் முழவுகளும் ஒலிக்கத்தொடங்கின. துச்சலன் “நன்கு ஒளிவந்துவிட்டது. இனிமேலும் நாம் பிந்தலாகாது மூத்தவரே” என்று வெளியே சென்றான். “ஆம், கிளம்புவோம்” என்று நூற்றுக்கணக்கான தொண்டைகள் கூச்சலிட்டன. “பெரீந்தையே, என் ஆடையை காணவில்லை” என்று ஒரு குரல் கேட்டது. “பெரீந்தையே, இவன் என் வாளை எடுத்துக்கொண்டான்.” “பெரீந்தையே, யானை எப்போது வரும்?” கர்ணன் “நாம் இப்போது கோட்டைமுகப்புக்கு செல்கிறோம்” என்றான். அத்தனை பேரும் ஒரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83152

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 66

பகுதி 14 : நிழல் வண்ணங்கள் – 1 அஸ்தினபுரியை அணுகுவது வரை முற்றிலும் சொல்லின்மைக்குள் ஒடுங்கியிருந்தான். அவன் புரவி அதையறிந்தது போல எந்த ஆணையையும் அவன் உடலில் இருந்து எதிர்பார்க்காமல் உள்ளத்திலிருந்தே பெற்றுக்கொண்டு முன்னால் சென்றது. முதலிரண்டுநாட்கள் புரவியின் குஞ்சிமயிர் பறப்பதை அதன் இரு செவிகளுக்கு நடுவே இருந்த சதுரம் வழியாகத்தெரிந்த பாதையை மட்டுமே அவன் பெரும்பாலும் பார்த்தான். சப்தசிந்துவின் பச்சைவெளி வந்தபோது அவனையறியாமலேயே தெளிந்து இருபக்கமும் நோக்கத்தொடங்கினான். சிந்தையற்று அமர்ந்திருந்தமையால் அவன் உடல் புரவியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73682

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 18

பகுதி நான்கு : வெற்றித்திருநகர் [ 3 ] பெருநீர்கங்கையில் பயஸ்வினி, மிதவாஹினி, யாமினி என்னும் மூன்று காட்டாறுகள் கலக்குமிடத்தில் இருந்தது பிரமாணகோடி என்னும் முனம்பு. காட்டாறுகளில் மழைக்கால வெள்ளம் வந்தபோது எழுந்துபடிந்த சேற்றுக்குவைகள் காலப்போக்கில் இறுகி நிலமாகி உருவான அதன் பெரும்பகுதியில் மென்சதுப்புப் பரப்புகள்மேல் நீலப்பச்சைநிறமான கோரையும் வெண்ணிறப்பூக்குச்சங்கள் எழுந்து காற்றிலாடும் நாணலும் நிறைந்திருந்தன. மையத்தில் நீர்மருதுகளும் ஆயாமரங்களும் ஒதியமரங்களும் செறிந்த சோலை அகன்ற இலைகளினாலான ஒளிபுகாத தழைக்கூரையுடன் நின்றது. அரசகுலத்தவரின் வேட்டைப்பயிற்சிக்கும் நீர்விளையாடலுக்குமாக ஒதுக்கப்பட்டிருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56496

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 17

பகுதி நான்கு : வெற்றித்திருநகர் [ 2 ] துச்சாதனன் நன்கறிந்தவை அண்ணனின் பாதங்கள். அவனுக்கு மொழி அறியவந்த இளமையில் அவன் அன்னை அவற்றைச்சுட்டிக்காட்டிச் சொன்னாள் “தமையன்”. அவன் தான் என்ற சொல்லுக்கு முன்னரே அதைக் கற்றுக்கொண்டான். தந்தையை அடையாளம் காண்பதற்கு முன்னரே தமையனை அறிந்துகொண்டான். தமையனின் பாதங்களைப் பின்தொடர்ந்து சென்று அவன் நடைபழகினான். துரியோதனனின் பேச்சும் பாவனைகளும் அவனில் நிழலுரு என பிரதிபலித்தன. துரியோதனனின் இரண்டு கனத்த புயங்களையும் துச்சாதனன் விரும்பினான். மலைப்பாம்புகள் என பேராற்றலுக்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56484

» Newer posts