Tag Archive: தீ அறியும்

தீ அறியும் 5

தங்கம்மை அனந்தனை மெல்ல உலுக்கி ”அப்பீ…அப்பீ ”என்று கூப்பிட்டபோது அவன் சிவந்து தடித்த கண்களை திறந்து அவளைப்பார்த்தான். ”அப்பி எளிக்கணும்…நேரம் எட்டாச்சுல்லா…” அனந்தனுக்கு அவன் எங்கிருக்கிறான் என்ற எண்ணம் மெல்ல மெல்ல உள்ளே எழுந்தது. விருட்டென்று எழுந்து அமர்ந்து தலையை சொறிந்தான். தங்கம்மை அவனை தூக்கி கைத்தாங்கலாக அழைத்துச்சென்றாள். அவனுக்கு கண்கள் மிகவும் கூசி தலைக்குள் பல இடங்களில் வலி தெறித்தது. குமட்டல் எடுத்து உடல் உலுக்கியது, வாயில் கசப்பும் புளிப்புமான திரவம் எழுந்து வந்தது. தங்கம்மை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8298

தீ அறியும் 4

அனந்தன் மீண்டும் தூக்கத்தில் அழுந்தினான். புதைந்து போகும்போது அந்த கிருகிரு ஒலி வலுத்து பேச்சொலி மெலிதாகிக் கேட்டது. அவ்வொலி அனந்தனின் தட்டுபடியின் கால்களில் கேட்டது. சிதல்கள். வெள்ளை உடல்கள் இருட்டில் நன்றாகவே தெரிந்தன. மிக அவசரமாக அவை அரித்து அரித்து மரக்கால்களையும் தூண்களையும் தின்று முன்னேறின. அவை போகும் இடமெங்கும் ஒவ்வொன்றும் இல்லாமலாயின. அனந்தனின் தட்டுபடி தாழ்ந்து தாழ்ந்து சென்றது. அவன் வீட்டையே அவை தின்கின்றன. அஸ்திவாரம் முழுக்க இல்லமலாகிவிட்டது…நீரில் மூழ்குவதுபோல எல்லாமே மூழ்கி… ”எனக்க நாயி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8296

தீ அறியும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ.. ஆங்காங்கே ‘பாகவதத்தின் ‘ துணுக்குகள் உக்கிரமாக பட்டுத் தெறிக்கின்றன. வட இந்திய பிரம்மா, வயதானவராக வெண் தடியுடன் மிளிர்வார். (திரைப் படம் மற்றும் t.v. தொடர்களில்). தென் இந்திய பிரம்மா, நடுத்தர வயதினராய், நம் வீட்டில் இருக்கும், ஒரு சித்தப்பா போன்றோ அல்லது மாமா போன்றோ இருப்பர். அந்தந்த சமூகத்தின் நினைவுகளின் பிரதிபலிப்போ என தோன்றும்.. மற்றோர் விஷயம். இராமாயணத்தின் கடைசியில், இராமரும் சீதையும் ஏற்கனவே எழுதப் பட்ட க(வி)தையை நடித்து காட்டுவது போல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8386

தீ அறியும் 3

அப்பா கையில் ஒரு கம்புடன் மூச்சிரைக்க ஓடிவந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டதும் அனந்தன் உரக்க கத்தியபடி போத்தியின் பிடிவிட்டு இறங்க முயன்றான். அவர் கைகள் இரும்பாலானவை போல இருந்தன. நிறைய முடியுள்ள மார்பில் அவனுடைய கன்னம் உரசி புல்லில் முகம்பட்டதுபோல கூசி அரித்தது. அப்பா வந்த வாக்கிலேயே கம்பை ஓங்கியபடி ”சீ வாய பொத்துடா எரப்பாளிக் கூதற..”என்று கூவினார். ”தங்கப்பா சொல்லுவதை கேளுடே…வேண்டாம்…”என்று போத்தி சொன்னார். ”நீ மிண்டாம வாடே ..அவன் இப்பம் செரியாயிருவான்…” ”நல்ல அடிக்க குறவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8294

தீ அறியும் 2

”பிரம்மா படைச்ச ஏழு லோகங்களிலயும் ஆகெ புண்யமானது பூமி. பூமியிலேயே புண்யம் உள்ளது இந்த பாரதவர்ஷம். புண்யபூமே பாரத வர்ஷேன்னுட்டாக்கும் சாஸ்திர விதி. பாரத வர்ஷம்பூமி கன்யகைக்க முகம்லா . அந்த முகத்தில இருக்க நெத்தியாக்கும் நம்ம திருவிதாங்கூர் தேசம். அனந்த பத்மநாப சாமி கிடந்துட்டு ஆட்சிசெய்த நாடு பாத்துக்க. இப்பம் செங்கோலும் கிரீடமும் இல்லேண்னாலும் நம்ம தம்புரான் சாட்சாத் சித்திரைத் திருநாள் பொன்னுதிருமேனியாக்கும். அதை மாத்த நேசமணியும் காமராஜும் நேருவும் வேற எந்த மயிரான் வந்தாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8292

தீ அறியும்

[இந்த தளத்தில் ஏற்கனவே வெளியான கிளி சொன்ன கதை (கிளி சொன்ன கதை – குறுநாவல் தொகுப்பு) குறுநாவலின் நீட்சி இக்கதை. அதே சமயம் தனியான குறுநாவலும்கூட. ஒரு பெரிய நாவலின் இரண்டாம் அத்தியாயம் என்றும் கொள்ளலாம்] சிருஷ்டிதேவனாகிய பிரம்மதேவர் வெகுதூரம் காட்டிலும் மேட்டிலும் அலைந்து அலைந்து களைத்து கால்கடுக்க ஒரு சிறிய பாறையில் அமர்ந்தார். வலது கட்டைவிரல் மிகவும் வலிக்கவே அதை பிடித்து இழுத்துவிட்டபடி இன்னும் போகவேண்டிய தூரத்தை எண்ணி ”என் கண்ணல்ல…. என் செல்லம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8288