Tag Archive: தீர்க்கதமஸ்

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-33

இடும்பர்களின் தொல்காட்டில் மூதாதையரின் சொல் நாவிலெழ பூசகராகிய குடாரர் சொன்னார் “குடியினரே அறிக! விந்தியனுக்குத் தெற்கே நம் குலக்கிளைகளிலொன்று வாழ்கிறது. அவர்களை நரகர்கள் என்கிறார்கள் பிறர். தொல்பழங்காலத்தில் அவர்கள் மண்ணுக்குள் இருண்ட ஆழத்தில் இருளுருவென வாழ்ந்தனர். அன்று கைகளும் கால்களும் இல்லாத புழுவுடல் கொண்டிருந்தனர். பின்னர் மானுடராகி எழுந்தபோதும் குழியெடுத்து அதற்குள் தங்கள் இல்லங்களை அமைத்துக்கொண்டனர். மண் அகழும் பன்றியை குலக்குறியெனக் கொண்டவர்கள். அவர்களின் இல்லங்களுக்கு மேல் யானைகள் நடந்து செல்லும். அவர்களுக்கு அடியில் நாகங்கள் ஊர்கின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117476/

மன்மதனின் காமம்

மன்மதன் [சிறுகதை] அன்புள்ள ஆசானுக்கு,   மன்மதன் சிறுகதையை நான்கு நாட்களுக்கு முன்பு படித்தேன் அப்பொழுது அந்த சிறுகதை அதன் விரிவை என்னால் உணரமுடியவில்லை,நேற்று வெய்யோனில் தீர்க்கதமஸ் பற்றி சூதர் படும் பாடல் பற்றி படித்தேன்.அதை பற்றி சிந்திக்கும்போது தீர்க்கதமஸ் மற்றும் மன்மதன் கதையில் வரும் ராஜுக்கும் உள்ள ஒற்றுமை புரிந்தது.   கண் இல்லாதவரின் காமம்;கண் எல்லாத்தையும் மூன்று பரிமாணத்தில் திரையிட்டு காட்டுகிறது ஆனால் பொருள் கொண்ட பிரம்மமோ பரிமாணம் அற்றது பொருளினுள் உறைவது.காமம் அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100990/

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13

மூன்றாம்காடு : துவைதம்  [ 1 ] காலையிளவெயில் எழுவது வரை துவைதவனத்தின் எல்லையில் இருந்த தாபதம் என்னும் சிறிய குகைக்குள் தருமனும் இளையவர்களும் திரௌபதியும் தங்கியிருந்தனர். அவர்களுக்குத் துணையாக வந்த ஏழு சௌனக வேதமாணவர்கள் இரவில் துயிலாமல் காவல்காக்க வழிநடைக் களைப்பால் அவர்கள் ஆழ்ந்து உறங்கினர். அத்துயிலில் தருமன் அம்பு பட்டு அலறும் தனித்த மான் ஒன்றை கனவு கண்டார். பீமன் பிடிகளுடன் முயங்கி நின்றிருக்கும் மதகளிற்றை. அர்ஜுனன் வானில் பறக்கும் வெண்நாரையை. திரௌபதி குகைக்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/89414/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 4 அஸ்தினபுரியின் அவையில் துரியோதனன் துணைவி பானுமதியுடன் கேட்டிருக்க கர்ணன் அமைதியிழந்து அமர்ந்திருக்க சூதன் தன் கதையை தொடர்ந்தான். அவன் அருகே அமர்ந்திருந்த இசைத்துணைவரின் கட்டைத்தாளம் அவன் கால்களை அசையச் செய்தது. உள்ளத்தை அடுக்கியது. சொற்களுக்கு குளம்புகளை அளித்தது. “அரசே, அரக்கர்குலத்தில் திறல்மிக்க வீரனின் கருவை பெண்கள் தேடி அடையும் குலமுறை முன்பே இருந்தது. ஆகவே அந்தணர் சொல் கேட்டு வாலி மகிழ்ந்து தன் மாளிகைக்கு மீண்டதுமே சுதேஷ்ணையையும் பிறரையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82691/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 15

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 3 “குளிர் காற்றின் வழியாக திசை அறிந்து, கரையோரப் பறவைகளின் ஒலி வழியாக சூழலை உணர்ந்து ஏழு நாட்கள் அந்த நதியில் அவர் சென்று கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்தையும் அவர் நன்கறிந்தார். “மானுடரே, என்னை கரையேற்றுங்கள். நான் வாழவேண்டும். நான் உணவுண்ணவேண்டும். காமம் கொண்டாடவேண்டும். இங்கு இருந்தாகவேண்டும்…” என நெஞ்சிலறைந்து கூவினார். மானுடரில்லாத காடுகளுக்குள் நுழைந்ததும் “நான் வாழ்வேன். தெய்வங்களே, எது நாணல்களை வளைய வைக்கிறதோ எது ஆலமரங்களை விரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82640/

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 14

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 2 தன் குடிலில் தனித்து விடப்பட்ட மமதை ஒவ்வொரு நாளும் அக்கருவை எண்ணி கண்ணீர் விட்டாள். நூல் அறிந்த மறையோர் அனைவரையும் அணுகி அவர்கள் காலடியில் அமர்ந்து நான்மறையும் செவிபருகி அம்மகவுக்கு அளித்தாள். தனித்த இரவுகளில் விண்மீன் பழுத்த வானைநோக்கி அமர்ந்து “வளர்க என் மைந்தா! பேருடல் கொண்டு எழுக! விண்ணகமென உளம் பெருகி எழுக! நான் இழைத்தவை எல்லாம் உன் வருகையால் நிகர்த்தப்படுக!” என்று வேண்டினாள். குகைக்குள் உறைந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82613/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 13

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 1 இளவேனிற்காலத்தின் தொடக்கம் பறவையொலிகளால் நிறைந்திருந்தது. ஒவ்வொரு பறவையும் அதற்கென்றே உயிரெடுத்ததுபோல் ஓர் ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தது. அஸ்தினபுரியின் சிற்றவையில் துரியோதனன் நீள்மஞ்சத்தில் கால்நீட்டி அமர்ந்திருக்க அவன் முன் போடப்பட்ட வெண்பட்டு விரிக்கப்பட்ட சிறிய இசைக்கட்டிலில் அமர்ந்து வங்கத்து சூதன் விருச்சிகன் பாடிக்கொண்டிருந்தான். துரியோதனனின் வலப்பக்கம் சாளரத்தருகே போடப்பட்ட பீடத்தில் சாய்ந்து வெளியே காற்றில் குலுங்கிய மரக்கிளைகளை நோக்கிக்கொண்டிருந்தான் கர்ணன். இடதுபக்கம் பானுமதி தன் இருக்கையில் அமர்ந்திருந்தாள். இளைய கௌரவர்கள் நால்வர் மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82570/

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31

பகுதி ஆறு : தீச்சாரல் [ 5 ] நீலநிறமான மரவுரியாடையும் பனைத்தாலங்களால் செய்த நகைகளும் அணிந்த சியாமநாகினியை அரண்மனை வைத்தியர்தான் கூட்டிவந்தார். அவள் தன் முன் வந்து தலைவணங்காமல் நின்றதைக் கண்டு சத்யவதி சற்று எரிச்சல் கொண்டாலும் அதை அடக்கி “அமைச்சர் அனைத்தையும் கூறியிருப்பாரென்று நினைக்கிறேன்” என்றாள். சியாமநாகினி “ஆம்” என்றாள். “நான் விரும்புவதுபோல அனைத்தும் நடந்தால் நீ கேட்பதைவிட இருமடங்கு பரிசுகள் கொடுக்கிறேன்” என்றாள் சத்யவதி . “நான் நினைப்பதில் ஒரு பகுதியை மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44674/