Tag Archive: தி. ஜானகிராமன்

இலக்கியமும் புறவுலகும்

அன்புள்ள ஜெ, ஒரு புனைவு எழுத்தாளன் சித்தரிக்கும் உலகம் என்பது அவனது தேடல் அலைக்கழிப்புச் சார்ந்தது; தன் பார்வையினூடாகக் கற்பனையைப் பெருக்கி விரித்து எழுதுகிறான். நிச்சயம் அவனது கோணல்கள் தடுமாற்றங்கள் அப்படைப்பில் வெளிப்படும். அதனால் பொது மனநிலையில் இருக்கும் சித்திரத்தை விட்டு விலகியே அவனது நோக்கு அமைந்திருக்கும். “இங்கே ஒரு படைப்பை நிராகரிக்க முன்வைக்கப்படும் விவாதங்களின் போது “அசலாக அந்தப் பிரதேசத்தின் மண்ணையோ மக்களின் பேச்சு வழக்கையோ சரியாக உள்வாங்கவில்லை. மேலோட்டமாக உள்ளது” அல்லது “இது யதார்த்தம் இல்லை, இப்படியான ஆண்களையோ பெண்களையோ எங்கள் நிலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118283

அம்மா வந்தாள் – கடிதங்கள்

வேட்கைகொண்ட பெண் ஜெ அவர்களுக்கு வணக்கம். நலம் தானே. குழந்தைகளின் விடுப்பு என்பதால் வாசிப்பும் சற்றே விடுபட்டுவிட்டது. சென்ற வாரம் தற்செயலாய் புத்தகக்கடையில், அட்டை ஈர்த்தது என்று அம்மா வந்தாள் வாங்கினேன். கேள்விப்பட்டதுண்டு. வாசிக்க வேண்டிய புத்தக வரிசையில் இருந்தது. ஒரே மூச்சில் படித்து முடித்தேன். முன்னுரையில் சுகுமாரன் அவர்கள் குறிப்பிட்டது ஆச்சரியமாய் இருந்தது., இக்கதையை எழுதியதால், தி.ஜ அவர்கள் ஊர் விலக்கம் செய்யப்பட்டார் என்பது. இருவேறு உணர்வுகள் எழுந்தன. ஒரு கதையை எழுதியதாலா ஊர் விலக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109499

வேட்கை கொண்டபெண் -கடிதங்கள்

  வேட்கைகொண்ட பெண்   ஜெ   வேட்கை கொண்ட பெண்ணில்…   ‘அதன்பின்னர் அது பக்தியாக, உருவகமாக ஆகி இலக்கியத்தில் பேசப்பட்டது- ஆண்டாள், ஜெயதேவர் போல.’   என வாசித்து முடிக்கும்போது கவிதா முரளிதரன் மொழிபெயர்த்த அக்க மகாதேவியின் இந்த கவிதை ஏனோ நினைவு வந்தது. நீங்களும் வாசித்திருக்கக்கூடும்.     அது லிங்கம் என்று நான் சொல்லவில்லை அது லிங்கத்துடனான இணைதல் என்று நான் சொல்லவில்லை அது ஒற்றுமை என்று சொல்லவில்லை அது இசைவு என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109475

அம்மா வந்தாள் -கேசவமணி

அன்புள்ள ஜெயமோகன், தங்களின் அம்மா வந்தாள் மூன்றாவது முறை வாசித்தேன். அம்மா வந்தாள் படிக்க ஆரம்பித்ததும் ஆரம்பத்தில் அலங்காரத்தம்மாள் மீது சொல்லமுடியாத கோபம் நமக்கும் வருகிறது. ஆனால் போகப்போக அவள் மீது நமக்கு அனுதாபம் பிறக்கிறது. அவளும் மனுஷிதானே என்று தோன்றிவிடுகிறது. இது ஜானகிராமன் எழுத்தின் மாயாஜாலம். ஒரு படைப்பாளியின் படைப்பின் வெற்றி என்பது இதுதான். நம் முடிவுகளை நிர்மூலமாக்கி தன் முடிவை நிலைநிறுத்துவது. அதில் தி.ஜா. சிகரத்தைத் தொட்டிருக்கிறார். அன்புடன், கேசவமணி அம்மா வந்தாள் மூன்றாவது முறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80482

நோயல் நடேசன்

ஜானகிராமனின் கதைகளை படித்துவிட்டு சரஸ்வதி தேவிக்கு காதல் கடிதம் எழுதக்கூடிய விடலைப்பையன் என்ற தீர்மானத்துக்கு வந்த அந்த அம்மாவுக்கு மகனாகப் பிறந்தவருக்கோ, ஜானகிராமனின் புத்திசாலித்தனமான பெண்பாத்திரங்களில் வரும் ஒருத்தியைப்போல ஒரு பெண் மனைவியாகக் கிடைக்கவேண்டியிருந்தது தவம். நோயல் நடேசன் கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/77204

அம்மா வந்தாள்: மூன்றாவது முறை…

அம்மா வந்தாள் நாவலை மீண்டும் படிக்க நேர்ந்தது, பதினைந்து வருடம் கழித்து. இது மூன்றாவது முறை. இம்முறை தி.ஜானகிராமனின் எண்ண ஓட்டச் சித்தரிப்புகள் சற்று சலிப்பூட்டின. உரையாடல்களில் ஒரே பாணியை பல இடங்களில் பல கதாபாத்திரங்களில் கடைப்பிடிக்கிறாரோ என்ற எண்ணம் ஏற்பட்டது. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரத்தின் ஒரேயொரு அம்சத்தை மட்டுமே அவர் கவனிக்கிறார் என்ற எண்ணமும் வலுவாக உருவாகியது. ஆனாலும் இப்போதும் அது சுவை குன்றாத முக்கியமான ஆக்கமாகவே தோன்றியது, அப்படி தொடர்வாசிப்புக்கு ஈடுகொடுக்கும் தமிழ்ப் படைப்புகள் உண்மையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/481

சல்லாபமும் இலக்கியமும்

அன்புள்ள ஜெ , உங்கள் பகற்கனவின் பாதையில் கட்டுரைக்கு ஜடாயு ஒருவரைத் தவிர வேறு எவரும் எதிர்வினை ஆற்றாதது வியப்பை அளித்தது. ஜடாயுவும் ஜானகிராமனை defend செய்த ஒரு கருத்துடன் நிறுத்திக்கொண்டுவிட்டார். நம் நண்பர்கள் இவ்வளவு எளிதாக ஜானகிராமனையும், வண்ணநிலவனையும் விட்டுக்கொடுத்துவிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.வேறு யாராவது அந்தக் கட்டுரை குறித்து ஒரு நல்ல விவாதத்தை துவக்குவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்துவிட்டு,அப்படி எதுவும் இதுவரை வராததால் நான் முயன்று பார்க்கலாம் என்றுதான் இந்தக்கடிதம். (உண்மையில் அந்தக் கட்டுரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48783

வலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்

கு.ப.ராஜகோபாலனின் ஒரு பழைய கதையில் [கனகாம்பரம்- தொகுப்பு] ஒருவன் கும்பகோணத்தில் தன் நண்பனை தேடிச்செல்கிறான். நண்பனுக்கு அப்போதுதான் திருமணமாகியிருக்கிறது. இவன் அங்கே செல்லும்போது நண்பன் இல்லை. அவனுடைய இளம் மனைவி மட்டும் தனியாக இருக்கிறாள். பெரிய அழகி அவள். அவள் இவனை வரவேற்று காபி போட்டுக் கொடுக்கிறாள். கணவன் நாளைதான் வருவான் என்கிறாள். இவனுக்கு கும்பகோணத்தில் செல்வதற்கு ஓர் இடமில்லை. என்னசெய்வதென்று தெரியாமல் இருக்கையில் அவளே மாடியில் தங்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறாள். அவள் சமைத்துப்போட்டதைச் சாப்பிட்டுவிட்டு இவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47508

புறப்பாடு II – 11, தோன்றல்

சிறுவயதில் நான் ஒரு கனவுகண்டேன். களமெழுத்துப்பாட்டில் கரிமணல் செம்மணல் நீலமணல் சேர்த்து மண்ணில் கோலமாகப்போட்டு வரையப்படும் நாககாளி வடிவம் புள்ளுவர்கள் குடம்தட்டிப்பாட்டு பாடி முடித்து முடியவிழ்த்து ஆட ஆரம்பித்ததும் கலைய ஆரம்பிக்கும். புள்ளுவத்தி தன் கூந்தலாலேயே வண்ணக்கோலத்தை கலைப்பாள். புள்ளுவர் கமுகுப்பூக்குலையால் கலைப்பார். சிலசமயம் பெரும் காற்றுவந்து அப்படியே ஓவியத்தை சுருட்டி அகற்றிச்செல்லும். அப்படி கண்முன் வண்ணமணல்துகள்களாக மாறி மறைந்த ஓர் நாககாளி நீலமும் சிவப்பும் கறுப்பும் வெளுப்புமாக மணல்துளிகள் காற்றிலேறி ஒன்றாகி இணைந்து கண்களில் உயிர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40117

ஊட்டி முகாம் 2012 – பகுதி 3

மாலையில் ஜடாயு லா.ச.ராமாமிருதம் பற்றிப் பேசினார். லா.ச.ரா.வின் சிறப்பியல்பு என்பது அவர் உருவாக்கும் அகவயமான நடை. அது பலகாலமாக தமிழ்வாசகர்களை போதையாக கட்டிப்போட்டிருக்கிறது. அந்த நடை நனவோடைமுறை என்று திறனாய்வாளர்கள் சிலரால் சொல்லப்பட்டிருந்தாலும் அதை லா.ச.ரா.வுக்கே உரிய அந்தரங்கமான ஒரு மொழி என்று சொல்வதே சரியாக இருக்கும் என்றார் ஜடாயு. அவரது மந்திர உச்சாடனம் போன்றது என்றார். லா.ச.ரா.வின் சிறப்பியல்பாக ஜடாயு சுட்டிக்காட்டியது அவரது எழுத்துக்களில் உள்ள தீவிரமான ஆன்மீகத்தேடலை. பெண்ணை அழகாகவும் அழகை அம்பாளாகவும் உருவகித்துக்கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27678

Older posts «