Tag Archive: திலீப்குமார்

சாரல் உரை -கடிதம்

அன்பு ஜெயமோகன், இயக்குனர்கள் ஜேடியும், ஜெர்ரியும் நல்ல இலக்கிய ஆர்வலர்கள். தமிழ் நவீன இலக்கியவாதிகளைத் தொடர்ந்து கொண்டாடுவதற்காக சாரல் விருதை உருவாக்கியவர்கள். ஒரு சடங்காகவோ சம்பிரதாயமாகவோ இல்லாமல் உயிர்ப்போடு அவ்விழாவைத் தொடர்ந்து நட்த்தி வருபவர்கள். திலீப்குமார், அசோகமித்திரன், வண்ணதாசன், வண்ணநிலவன், பிரபஞ்சன், விக்கிரமாதித்யன் என சாரல் விருது பெற்ற படைப்பாளுமைகளைக் கவனித்தாலே அவ்விருதின் நேர்மைத்தன்மை புலப்படும். சமீபமாய் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் விருது வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட ஞானக்கூத்தனை 2010லேயே கொண்டாடியவர்கள் ஜேடியும் ஜெர்ரியும். அச்சகோதரர்களை மனதார வாழ்த்துவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69192

இரண்டு பெண் எழுத்தாளர்கள்

திலீப்குமாரிடம் இன்று பேசிக்கொண்டிருந்தேன். திலீப் தமிழின் முக்கியமான 85 கதைகளைத் திரட்டி ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு தொகுப்பு கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார். அதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும்போது இரு முக்கியமான படைப்பாளிகளை கண்டெடுத்ததாகச் சொன்னார். இருவரும் தமிழ் இலக்கியத்தின் மிகத்தொடக்க காலத்தில் எழுதியவர்கள். முன்னோடிகள். ஆனால் எந்த இலக்கியநூலிலும் அவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அம்மணி அம்மாள் 1913-இல் அக்காலத்து மாதஇதழ் ஒன்றில் சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார். வடிவம் மொழி ஆகியவற்றைக்கொண்டு பார்த்தால் அவர்தான் தமிழின் முதல் சிறுகதையாசிரியர் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56527

திலீப்:கடிதங்கள்

திலீப் குமார் கட்டுரை படித்தேன் – குட்டிக் கிருஷ்ண மாராரிலிருந்து, திலீப் குமாருக்கான பாலம் மிக அழகாகக் கட்டியிருந்தீர்கள். முன்பு யாரோ நீங்கள் ஒரு சுமாரான பேச்சாளர் என்று சொல்லியிருந்ததால், எனது எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருந்தது. ஆனால், உங்கள் உரை எனது எதிர்பார்ப்புகளை மிஞ்சி விட்டது – உங்கள் எழுத்தின் வீச்சு நிச்சயமாக மேடைப் பேச்சில் இல்லை. So what.. the concept was wonderful and very apt. அழகு. திலீப் குமார் கதைகளின் சாரமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1192

திலீப்குமார்

அனைவருக்கும் வணக்கம், மலையாள விமரிசகர் குட்டிகிருஷ்ண மாரார் அவரது புகழ்பெற்ற இலக்கியச் சித்தாந்தம் ஒன்றுக்காக வெகுவாக புகழப்பட்டார்– அதேயளவுக்கு விமரிசிக்கவும்பட்டார். பேரிலக்கியங்களில் நவரசங்கள் அல்லது ஒன்பது மெய்ப்பாடுகள் முயங்கிவரவேண்டும் என்று சொல்வது நம் இலக்கிய மரபு. அச்சுவைகளின் முயங்கலில் ஒட்டுமொத்த விளைவாக சாந்தம் என்ற ஒன்பதாவது சுவை உருவாகி அதுவே விஞ்சி நிற்கவேன்டும். எப்படி என்றால் ஏழு நிறங்கள் முயங்கி வெண்மை உருவாவது போல. ஆனால் குட்டிருகிருஷ்ண மாரார் சாந்தம் அல்ல உயரிய அங்கதச்சுவையே பேரிலக்கியங்களின் சாராம்சமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1173

திலீப்குமாருக்கு விருது

டி.எஸ்.துரைசாமி எழுதிய ஆரம்பகால நாவலான ‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ நாவலின் மறுபிரசுரமும் சாரல் விருது வழங்கும் விழாவும் வருகிற 6௧௨009 அன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது. நான் அதில் பங்கெடுத்து பேசவிருக்கிறேன். உல்லாசம், விசில் போன்ற படங்களின் இயக்குநர்களான ஜேடிஜெர்ரி இப்போது விளம்பரத்துறையில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாலு மகேந்திராவின் மாணவர்கள். நந்தா அப்டத்தில் பாலாவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். ஜேடி முன்பு ஜோசப். டி சாமி என்ற பேரில் கவிதைகளும் கதைகளும் எழுதியிருக்கிறார். கனவுகளைப்பேசவந்தவன் என்ற அவரது கவிதைத்தொகுதி அக்காலகட்டத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1142