Tag Archive: திலகன்

மெல்லிய பூங்காற்று

இரு தருணங்களிலாக நான் ஒரு திரைப்படத்தைப்பார்த்தேன். கே.பாலசந்தர் இயக்கிய ‘தண்ணீர் தண்ணீர்’. முதல்முறை பார்க்கும்போது எனக்கு 19 வயது. கல்லூரி இறுதி வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பை வெட்டிவிட்டுக் கையில் புத்தகங்களுடன் நாகர்கோயில் பயோனியர் முத்து திரையரங்குக்குச் சென்று சொட்டிக்கொண்டிருந்த மழையில் நனைந்துகொண்டு வரிசையில் நின்று ஈரஉடலில் மின்விசிறிக்காற்று குளிரக்குளிர, அரங்கெங்கும் ஈர உடைகள் நீராவியை உமிழ,  தென்தமிழ்நாட்டின் கடும் வறட்சியைப்பற்றிய அந்தப்படத்தைப்பார்த்தேன். ஆரம்பித்த சில கணங்களுக்குள் paலைநிலம் வழியாக வெக்கையில் உடல் எரியச் சென்றுகொண்டிருந்தேன். தலையில் தண்ணீர்க் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21126/

திலகன் ஒரு கடிதம்

எனக்குத் திலகனைப் “பெருந்தச்சனாகத்” தான் அறிமுகம். 89 அல்லது 90 என்று நினைக்கிறேன். அந்த உருவமும் குரலும் மிகையில்லாத நடிப்பும் என்னவோ செய்தது. “கிரீடம்” தான் என்னைத் திலகனின் தீவிர ரசிகனாக மாற்றியது. (தமிழில் அஜித்தை வைத்து அக்கிரமம் செய்தார்களே அந்தப் படம் தான். அசலுக்கும் போலிக்கும் என்ன வித்தியாசம் என்று இன்று வரை உங்களுக்கு வாழ்வில் விளங்கவில்லை எனில் இது இரண்டையும் அடுத்தடுத்துப் பார்த்து விடுங்கள்.) மலையாள சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31514/

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, திலகனின் சில படங்களைத் தமிழில் பார்த்திருக்கிறேன். கிளிப்பேச்சு கேட்கவா, ஆயுதபூஜை போன்றபடங்களில் அவரது நடிப்பு அசாத்தியமானது. கிளிப்பேச்சு கேட்கவா படத்தில் வெறுப்படைந்த அப்பாவாக நடிக்கும் இடங்களும், ஆயுதபூஜையில் ஒருகை இழந்த வில்லனாக அவர் செய்யும் வில்லத்தனங்களும் மறக்கவே முடியவில்லை. இதையும் தாண்டி ஒரு முறை டிவி சானல்களை வேகமாகத் தாவிச் செல்கையில் ஒரு மலையாள சானலில் பூஜை ஒன்று நடந்துகொண்டிருக்கும் அதை கவனித்துக் கொண்டிருக்கும் திலகன். இதுதான் காட்சி, அதில் நெஞ்சைத் தடவியபடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30949/

திலகன்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் எனக்கு மலையாளப் படங்கள் அறிமுகமானதே யவனிகா வழியாகத்தான். நினைவு தெரிந்து நான் முதன் முதலாகப் பார்த்த மலையாளப் படமும் அதுவே. இன்று வரை இந்தியப் படங்களில் மட்டும் அல்ல உலக அளவில் கூட அது குறிப்பிடத்தக்க படமாகவே இருந்து வருகிறது. அதன் உத்தி குரசேவாவின் உத்தியாக இருந்தாலும் கூட அதன் யதார்த்தமும், நடிகர்களின் இயல்பும் அசாத்தியமான நம்பகத்தன்மையையும் நிஜத்தையும் அதற்கு அளித்தது. அதில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் அடுத்த முப்பது வருடங்களில் தொடர்ந்து மலையாள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30626/

அஞ்சலி-திலகன்

நான் லோகியுடன் எர்ணாகுளத்தில் ஓர் ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது திலகன் உள்ளே வந்தார். உடன் வேறு சிலரும். லோகி பவ்யமாக எழுந்து சென்று அருகே நின்றார். மலையாளிகள் சாதாரணமாக உரக்க வந்தனங்கள் சொல்வதில்லை. முகபாவனையுடன் சரி. திலகன் லோகியைப்பார்த்தது ‘அ’ என்ற ஒரு ஒலியை மட்டும் எழுப்பி லேசாக முதுகில் தட்டினார். அதன் பின் ’சிந்து எப்படி இருக்கிறாள்? குஞ்ஞன்?’ என்று லோகியின் மனைவியையும் மகனையும் பற்றிக் கேட்டார். லோகி என்னை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது ’கஸ்தூரிமான் வெளிவந்துவிட்டிருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30603/