திற்பரப்பு கவிதைச்சந்திப்புக்காக நண்பர்கள் வர ஆரம்பித்தார்கள். 26 -2-2011 அன்று காலை நான் எழுந்து மின்னஞ்சல் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கீழே சத்தம் கேட்டது. வந்து பார்த்தேன். ஆனந்த் உன்னத் என்ற புனைபெயர் கொண்ட சு மோகன் பெங்களூரில் இருந்து வந்திருந்தார். மொட்டைத்தலை. சிவப்பு உருவம். மென்பொறியாளர். வெள்ளியன்றே வருவதாகச் சொன்ன இன்னொருவர் பிரிட்டனில் வேலைபார்க்கும், விடுமுறைக்கு வந்திருக்கும் பிரபு. அவர் ஏதோ ஓட்டலிலேயே தங்கிவிட்டதாக பின்னர் தொலைபேசியில் சொன்னார். ஓட்டலில் காலையுணவை சாப்பிட்டுவிட்டு சென்று வேனுக்குச் சொன்னோம். ஆயிரத்து …
Tag Archive: திற்பரப்பு
Permanent link to this article: https://www.jeyamohan.in/12982
ஒருநாள்
கல்பற்றா நாராயணன் நாகர்கோயிலுக்கு வந்திருந்தார். அவர் என் வீட்டுக்கு வருவது இதுவே முதல்முறை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஓர் நிகழ்ச்சி. முந்தினநாளே வந்து ஒருநாள் என்னுடன் தங்கி பின்னர் நாங்கள் சேர்ந்து செல்வதாக ஏற்பாடு. அவர் வரும் தகவலைச் சொன்னதும் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணன் அவரும் வருவதாகச் சொன்னார். சென்னையில் இருந்து செந்தில் வருவதாகச் சொல்லி பின்னர் நின்றுவிட்டார். கிருஷ்ணனும் தங்கமணியும் அதிகாலை ஆறுமணிக்கே வந்து விட்டார்கள். நான் இரண்டுமணிக்குத்தான் படுத்தேன். அருணா வந்து என்னை எழுப்பியபோது …
Permanent link to this article: https://www.jeyamohan.in/2093