Tag Archive: திரைப்பாடல்கள்

புறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்

சிறுவயதில், விடுமுறை நாட்களில், தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் போது, மனமெல்லாம் ஒரே நினைவுதான். தூரத்தில், ரப்பர் காற்று ஒலிப்பான் (அதற்கு எங்களூரில் – “பூவாத்” என்று பெயர்) ஒலிக்கக் கேட்டதும், வரப்புகளூடே தலைதெறிக்க ஓடி, வீட்டிற்குள் சென்று, டப்பாவைத் திறந்து, ஐந்து பைசா எடுத்துக் கொண்டு, தார் சாலையில் காத்து நிற்பேன். மரப்பெட்டியில், பவானியில் இருந்து குச்சி ஐஸ் எடுத்து விற்றுவரும் நபருக்காக. அந்தக் காலகட்டத்தில், எப்படியோ, ஒரு நாள் இமய மலை முழுவதும் பனி என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45524

திரைப்பாடல்கள் எழுபதுகள்….

அன்பின் ஜெ , நலந்தானே? 70களின் தமிழ்த்திரைபாடல்களுக்கு ஒரு அஞ்சலி போல் அமைந்த உப்புநீரின் வடிவிலே படித்தேன். எவ்வளவுதான் தமிழ்த்திரைப்படங்களை, அதில் பாடல்கள் இடம் பெறும் அபத்தத்தை கிண்டல் செய்தாலும், தமிழ் திரையிசைப்பாடல்களை விட்டு விலகவே முடிவதில்லை இல்லையா? எப்போதோ யாருக்காகவோ எழுதப்பட்டு பாடப்பட்டு இருந்தபோதிலும் அந்தப் பாடல்கள் அவற்றைக் கேட்ட ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அவரவர்க்கான ஒரு பிரத்யேக அர்த்தத்தையும் கனவினையும் ஏற்படுத்தி அவரவர்க்கே ஆன சொந்த பாடல்களாக மாறியிருப்பதை நான் கவனித்து வருகிறேன். சமீபத்தில் நம் ஏற்காடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40250

கேள்வி பதில் – 69

கண்ணதாசனும், அதைவிட வைரமுத்துவும் சிறந்த திரைஇசைப்பாடலாசிரியர்கள் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதில் பாரதி எங்கே வந்தார்? பாரதியின் காலமும் கண்ணதாசன், மற்றும் அவரைத்தொடர்ந்த வைரமுத்து காலமும், இசையும் திரைப்பாடலும் ஒன்றா? பாரதி திரைஇசைக்கென்று ஏதாவது அப்படி எழுதியிருக்கிறாரா? நீங்கள் ஒப்பிட்டுச் சொன்னது ஏன்? என்றாலும் இப்பொழுதும் திரைப்பாடல்களில் பாரதியின் பாடல்கள் எந்த இசையமைப்பாளருக்கும் பொருத்தமாகத்தானே அமர்கின்றன? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நான் பாரதியை திரைப்பாடலாசிரியனாக வைரமுத்துவிடம் ஒப்பிடவில்லை, இசைப்பாடலாசிரியனாகத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123

கேள்வி பதில் – 19

இசை, சூழல், சந்தர்ப்பம் கலந்து உருவாகும் திரைப்பாடல்களும் நல்ல கவிதைகள்தானே? — பாஸ்டன் பாலாஜி. இலக்கியத்தை அதன் அடிப்படை இயல்பு சார்ந்து வகைப்படுத்திக் கொள்வது அனுபவங்களைத் தெளிவாக உள்வாங்க உதவும். இலக்கியத்தின் அடிப்படைக் குணங்கள் மூன்று. அ] வாழ்க்கையையும் மனதையும் ஆழ்ந்தறிய முயலல். ஆ] மொழியில் வாழ்க்கையைச் சித்தரிப்பதை அறிதல்முறையாகக் கையாளுதல் இ] அச்சித்தரிப்பை ஆழ்மனம் தன்னிச்சையாக வெளிப்படும்விதமாக அமைத்துக் கொள்ளல். இலக்கியம் ஒரு கனவு. கனவு அதைக் காண்பவனை மீறியது, அவனுக்கே அவனைக் காட்டுவது, கற்பிப்பது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69