Tag Archive: திரைப்படம்

‘வசவு’ம் பாபநாசமும்

தமிழில் சிறந்த நகைச்சுவைப் புனைவெழுத்துக்கள் குறைவு என்ற பேச்சு அடிக்கடி விவாதங்களில் வரும்போதெல்லாம் நான் சுட்டிக்காட்டுவது வசவு தளத்தைத்தான். அரசியல்கட்டுரை, கவிதை, கதை, இலக்கியவிசாரம் என்ற பெயர்களில் அவர்கள் வெளியிடும் கட்டுரைகள் தமிழின் சிறந்த நகைச்சுவைப்புனைவுகள் என்பதில் நல்ல வாசகர்களுக்கு ஐயமிருக்கமுடியாது. கேலிச்சித்திரங்கள் மட்டும் நகைச்சுவை இல்லாமல் சோகத்துடன் போடுவார்கள். பாபனாசம் பற்றிய இக்கட்டுரையை வாசகர்கள் தவறவிடக்கூடாதென்பதற்காகவே இங்கே சுட்டி அளிக்கிறேன். எழுதியவர் பெயர் முதற்கொண்டு தகவல்பயனாளி வரை எல்லா தளங்களிலும் கற்பனை சொட்டும் இந்தக்கட்டுரைக்கு நிகரான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64643

கலைஞனின் உடல்

ஜெ நான் முதன் முதலாக ஒரு தரமான பாடகரை நேரில் பாடக் கேட்டது ஊட்டியில் யுவன் பாடிய போதுதான். பின்னணி இசை இல்லை , முழுமையாக்கப் பட்ட கச்சிதம் இல்லை , பதிவு செய்யப் பட்ட நுணுக்கம் இல்லை , இருந்தும் அது நேரில் ஜீவனுடன் இருந்தது , இத்தனைக்கும் யுவன் முறையாக பயின்றவரும் அல்ல . இந்த மின் சாதனங்களற்ற கடத்திகளற்ற இசை அனுபவமே அதை இன்னமும் உயிர்ப்புடன் நிகழ்த்தியது , பெரும் பாடகர்களின் பதிவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64298

பாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்

பாபனாசம் படப்பிடிப்பு நேற்று [26-10-2014] முடிந்தது. தொடுபுழாவிலிருந்து நானும் சுகாவும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் திரும்பினோம். காலையில் வீடுவந்து சேர்ந்து தூங்கி எழுந்து உடனே அடுத்த வேலைக்குச் செல்லமுடியவில்லை. ஒரு சினிமாப்படப்பிடிப்பு முடிவது நிறைவும் துயரமும் கலந்த அனுபவம். சினிமாப்படப்பிடிப்பில் உள்ள கொண்டாட்டத்தை சினிமாவுக்கு வெளியே உள்ளவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. ஓர் அரசு அலுவலகத்துடனோ வணிகநிறுவனத்துடனோ அதை ஒப்பிட்டால் அந்த வேறுபாடு திகைக்கவைக்கும். சினிமாவில் டீ பரிமாறுபவர் முதல் அனைவருமே சினிமா மேல் பெருங்காதலுடன் இருப்பவர்கள். சினிமாவை கவனித்துக்கொண்டே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64127

மலைச்சாரலில்…

இருபத்துநான்கு முதல் குற்றாலத்தில் இருந்தேன். பழையகுற்றாலம் அருகே எசக்கி விடுதியில். பாபநாசம் படப்பிடிப்பு. கருமேகம் மூடிய மலையடுக்குகள். ஒருநாளில் ஐம்பதுமழை. வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. மொத்தப்படப்பிடிப்பையும் ஜித்துவுக்கும் மழைக்குமான போராட்டம் என்று சொல்லவேண்டும். கமலுடனும் அவருக்கு நெல்லை வட்டார வழக்கு சொல்லிக்கொடுக்க வந்திருந்த நண்பர் சுகாவுடனும் பேசி அவர்களுடைய அற்புதமானநகைச்சுவைக்காகச் சிரித்து கண்ணீர்மல்கிக் கொண்டிருந்தேன். நடுவே மதன் கார்க்கி சுகாவை கூப்பிட்டு ஒரு பாடலுக்காக நெல்லையின் சிறப்புச் சொற்களைக் கேட்டார். அவற்றை பாட்டில் சேர்க்கமுடியாது என்பதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61084

பட்டாம்பூச்சியின் சிறகுகள்

ஷாரியரின் மிகவிரிவான சுயசரிதையை திரைவடிவமாக்குவது என்பது சாதாரண வேலை அல்ல. நூலை வாசித்தவர்கள் ஏமாற்றம் அடைவதற்கே நியாயம். ஆனால் அற்புதமான திரைக்கதை மூலம் சிறப்பாகத் திருப்பிச் சொல்லப்பட்ட பாப்பிலான் இன்னொரு அனுபவமாகவே இருந்தது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7939

உடலைக் கடந்த இருப்பு

ஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை நோக்கித் திறந்திருக்கும் வாசலா அல்லது புலன்களைச் சார்ந்தே இருப்பதால் உடல் அறிதலின் பரப்பைக் கட்டுப்படுத்தும் வேலியா? உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா? அவ்வாறு முடியுமென்றால் அறிதலுக்கு வாய்ப்பே இல்லையா அல்லது நேரெதிராக அறிதல் எல்லைகளற்று விரிந்துவிடுமா? – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58245

பனிமனிதனும் அவதாரும்

அதுவரை சாதாரணமாகப் படித்துக் கொண்டிருந்த நான் பனிமனிதனை அவர்கள் சந்திக்க ஆரம்பித்த இடத்தில் பனிமனிதர்கள் வாழும் இடம் பற்றிய வர்ணனைகளில் மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானேன். பல இடங்கள் எனக்கு அவதார் திரைப் படத்தை நினைவுபடுத்தின பனிமனிதனும் அவதாரும் +++++++++++++++++++++++++++++++ பனிமனிதன் விவாதக்கட்டுரைகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/57911

புழுக்களும் சினிமாவும்

அன்புள்ள ஜெ புழுக்கள் பற்றிய கட்டுரை வாசித்தேன். வாசகர்களும் சற்றே உணர்ச்சியும் அறிவும் கொண்டவர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கிருக்க வேண்டும் என நினைக்கிறேன். இணையத்தில் வம்பு வளர்ப்பவர்கள் எழுதுவதை நாலைந்து வரி வாசித்ததுமே அவை எந்த தரத்தைச் சேர்ந்தவை என்று வாசகனால் உணர முடியும். ஒருவேளை அப்படி உணராத வாசகன் இருந்தானென்றால் அவனுக்கு ஒருபோதும் உங்கள் எழுத்துக்கள் பிடிபடப்போவதில்லை. அப்படியென்றால் எதற்காக அந்த கடுமையான கடிதம்? இப்படிப்பட்ட கடுமையான கட்டுரைகளால் எவரையாவது திருத்த முடியும் என நினைக்கிறீர்களா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36945

புழுக்கள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ. என் கடிதம் தங்கள் ப்ளாகில் வந்ததில் எனக்கு மிக சந்தோஷம் , பெருமை. இசைஞானிக்கே பிலிம் காட்டி இருக்கிறார்கள் என்று தெரிந்த பொழுது காமெடியாகவும் இருந்தது . செம கடுப்பாகவும் இருந்தது.இப்படியே இந்த அசடுகளிடம் மாரடித்து கொண்டிருப்பது கலைஞர்களுக்கு தேவை இல்லாத நேரம் விரயம் , சக்தி விரயம் இல்லையா ? உங்கள் “புழுக்களின் ரீங்காரம் ” படித்தபோதும் இதுதான் தோன்றியது. ஆயாசமாகவும் இருந்தது ஜெ. இன்னும் இந்த டாபிக் எவ்ளோ நாள் நீளுமோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36935

புழுக்களின் ரீங்காரம்

அன்புள்ள ஜெ திரையுலகில் நுழையும் முயற்சியில் இருப்பவன் நான். உங்களிடமும் உதவி கேட்டிருந்தேன். ஒரு சிறிய விஷயத்துக்காக இக்கடிதத்தை அனுப்புகிறேன். சமீபத்தில் இணையத்தில் வந்த சில எதிர்வினைகளில் நீங்கள் சினிமாவில் சேர்ந்து அங்கே அவமதிப்புகளை தாங்கிக்கொள்வதாகவும், காக்கா பிடிப்பதாகவும் ஃபேஸ் புக்கில் நிறையபேர் எழுதினார்கள். பாலா உங்களையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் பற்றி எழுதியவற்றை மேற்கோள் காட்டினார்கள். உண்மையில் சினிமாவில் அந்த நிலை இருக்கிறதா என்ன? ராம் அன்புள்ள ராம், உண்மையில் அந்நிலை இல்லை என்பது கொஞ்சம் இணையத்தை வாசிப்பவர்களுக்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36869

Older posts «

» Newer posts