Tag Archive: திரைப்படம்

நியோகா

  சுமதி [கருப்பி] என் பதினேழாண்டு கால நண்பர். கனடா [டொரெண்டோ] வில் குடியிருக்கிறார். அவர் இயக்கிய நியோகா என்னும் திரைப்படம் நாளை [13-8-2017] அன்று சென்னை பிரசாத் லேப் அரங்கில் மாலை 6 மணிக்குத் திரையிடப்படுகிறது. [68 அருணாச்சலம் சாலை, சாலிகிராமம் சென்னை]   http://karupu.blogspot.in/

Permanent link to this article: https://www.jeyamohan.in/100391

நாட்டியப்பேர்வழி

  சைதன்யா பாய்ந்துவந்த வழியில் ஒரு செம்பும் இரு டம்ளர்களும் உருண்டன. நான் ”என்ன பாப்பா இது? இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது?” என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ”பின்ன எப்டி வாறது?”என்று வந்து அமர்ந்து நான் ஆய்ந்துகொண்டிருந்த முருங்கைக்கீரையை அள்ளி ஊதிப்பறக்க வைத்தாள். ”வைடி அங்க… எரும மாடு”என்று பின்னணிக் குரல்கேட்க நான் நிதானமாக விளக்கினேன் ”நீ இப்ப பெரிய பொண்ணுல்ல? பெரிய பொண்ணுங்கல்லாம் ஸ்டைலா, ஒருமாதிரி பந்தாவா நடந்துவரணும்.. சினிமால வாறதுமாதிரி…” ”போப்பா. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/176

பாண்ட்

வெண்முரசு காண்டீபம் முடிந்த கையோடு ஒரு மாறுதலுக்காக சினிமா பார்க்கப்போகலாம் என முடிவெடுத்தேன். ஸ்பெக்டெர் படம் வந்திருந்தது, நாகர்கோயில் ராஜா மால் அரங்கில். சைதன்யா வீட்டில் சும்மாதான் இருக்கிறாள். கூப்பிட்டால் ‘போப்பா, ஜேம்ஸ்பாண்டையெல்லாம் எவ பாக்கிறது” என்று சொல்லிவிட்டாள். அருண்மொழிக்கு ஹாலிவுட் படங்களே அலர்ஜி. ஸ்பெக்டர் பார்க்கப்போகிறேன் என்று நண்பர் சுகாவிடம் சொன்னேன். அவரும் ஒருமாதிரி சிரித்து ’போய்ட்டு வாருங்க மோகன்’ என்றர். ஜேம்ஸ்பாண்ட் படம் பார்ப்பது அறிவுஜீவிகளுக்கு உகந்தது அல்ல என்று ஒரு பொதுநம்பிக்கை இருப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81235

டம்மி

இரண்டு வருடத்துக்கு முன்பு நவம்பரில் காசிக்குச் சென்றோம். நான் கடவுள் படப்பிடிப்பின் முதற்கட்டத்துக்காக. அந்நாட்கள் இப்போதும் இனிய நினைவாக உள்ளன. சினிமா வந்து சென்றுவிட்டது. பொதுவாகவே சினிமாக்களுக்கு குறைவான ஆயுள்தான். அபூர்வமாகவே சில படங்கள் காலம் கடந்து நினைக்கப்படுகின்றன. நான் கடவுளில் உள்ள பாடல்கள் என்றும் நீடிக்கும். கூடவே அப்பாடல்கள் நினைவூட்டும் அந்த நாட்கள் எங்கள் மனங்களில். காசி என்பது ஒரு நகரமல்ல, ஒரு படித்துறை. வரணாசி என்று மகாபாரதம் குறிப்பிடும் அந்த புராதன கங்கைக்கரை பிறைவளைவு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4805

அவதார் – ஒரு வாக்குமூலம்

1988ல் மங்களூர் திரையரங்கு ஒன்றில் ராபர்ட் போல்ட் எழுதி ரோலண்ட் ஜோ·ப் இயக்கிய ‘த மிஷன்’ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். என்னுடைய சிந்தனையில் ஆழமான ஒது திருப்புமுனையை உருவாக்கிய திரைப்படம் அது. அதுவரை நான் கிறித்தவ மதத்தையும் ஐரோப்பிய ஆதிக்கத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பார்வையை மிகவும் விரிவாக்கியது. அதன்பின் நான் வாசித்த ஏராளமான நூல்களுக்கான தொடக்கம் அந்த திரைப்படம்தான். 1750களில் தென்னமேரிக்க பழங்குடிகளின் நிலங்களை ஸ்பானிஷ் ஆக்ரமிப்பாளார்கள் கைப்பற்றி அவர்களை அடிமையாக்கி வணிகம் செய்ததின் சித்தரிப்பு இந்த திரைப்படம்.  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6018

தலைமறைவு

நகைச்சுவை தமிழ்நாட்டில் அதிகமாகப் புழங்கும் சொல் என்ன என்பதை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. செல் பேசியை எடுத்ததுமே ஹலோ என்பதற்குப்பதிலாக அதைச் சொல்லலாம் என்றும். ஆரம்பத்தில் அதிர்ச்சிதான். ”ஹலோ நான் ஜெயமோகன் பேசுறேன்..” என்ற பவ்யமான குரலுக்குப் பதிலாக ”தாயோளி!” என்று தெளிவாக ஒரு குரல் ”சார்?” ”தாயோளி!” ”யாரு வேணும்?” ”நீதாண்டா வேணும் தாயோளி” ”ஸாரி நீங்க வேற யாரையோ கேக்குகிறீங்க…அது நான் இல்ல…” ” டேய் தாயோளி” ”ஸாரி சார்,நீங்க நம்பர் செக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/574

இண்டர்ஸ்டெல்லார் – கடிதம்

அன்பு ஜெயமோகன், இண்டர்ஸ்டெல்லார் தொடர்பான அலெக்ஸ் கடிதத்தையும், அதற்கான தங்களின் பகிர்வையும் படித்தேன். மானுடகுலம் நிலைத்து வாழத்துவங்கிய பிறகுதான் தத்துவ ஆராய்ச்சி துவங்கியதாக நான் கருதுகிறேன். அதனடிப்படையிலேயே நான் நகரவும் செய்கிறேன். மேலும், தன்னை மேம்பட்ட உயிரியாக மனிதன் கருதிக்கொண்ட இடத்திலிருந்தே அவன் தன் வாழ்வு குறித்த கருத்தியல்களைக் கட்டமைக்க முயன்றிருக்கிறான். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், ஆறாவது அறிவுடையவன் எனும் தனித்தகுதி கொண்டு தன்னால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும் எனும் எண்ணத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறான். முதலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66626

இண்டர்ஸ்டெல்லாரும் இன்றைய தத்துவமும்

அன்புள்ள ஜெ, நேற்று இன்டர்ஸ்டெல்லார் படம் பார்த்தேன். முழுக்க முழுக்க அறிவியல் பின்னணியில் மானுட நாடகம் ஒன்றை மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். கதை விண்ணியற்பியலின் மிகக் குழப்பமான, மிக நுட்பமான கோட்பாடுகளை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதுபோன்ற தளங்களில் கதை சொல்லப்படும்போது ஒட்டு மொத்த மனித சமூகம் ஒரு உயிரினமாக‌ (Species) பொருள்கொள்ளப்படுகிறது. இந்தப் படத்தில் அது மிகத் தெளிவாக சொல்லப்படுகிறது. வேறெந்த அடையாளமும் அர்த்தமிழந்துபோகிறது. படத்தில் மருந்துக்கும் கூட மதம் இல்லை. அதன் தத்துவங்கள் அனைத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66341

கமல்- முடிவிலா முகங்கள்

கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் ஆடிக்கொண்டிருந்தார். உண்ணாயி வாரியர் எழுதிய கதகளி நாடகம், நளதமயந்தி. நளன் தமயந்திக்கு அன்னப்பறவையை தூதனுப்பும் காட்சி. அன்னத்தை மென்மையாக, மிகமிக மென்மையாக தொட்டு எடுக்கிறான். வருடுகிறான். இதயத்தோடு சேர்த்து வைக்கிறான். உருகுகிறான், சிலிர்க்கிறான்,கொஞ்சுகிறான், அழுகிறான். பறவை திரும்பத்திரும்ப அவனிடமே வருகிறது. மூச்சுத்திணற ஓடிப்போய் எடுக்கிறான். ஏன் போகவில்லை என்ற பதற்றம், நல்லவேளை போகவில்லை என்ற ஆறுதல் விழித்துக்கொண்டேன். பதினெட்டு வயதில் நான் திருவட்டாறு ஆலயத்தின் களியரங்கில் பார்த்த கதகளி துல்லியமாக நினைவுக்கு வந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65684

அன்னை

 நகைச்சுவை ”ஏம்பா பாட்டிய கூட்டிட்டுவந்தாச்சா?” என்றார் இயக்குநர். ஏழெட்டு உதவி இயக்குநர்கள் ஒரே சமயம் அப்போது அவர்களுக்கு தோன்றிய திசைகளில் பாய்ந்தார்கள். ஒருவர் மட்டும் ”வந்தாச்சு சார்…டிபன் சாப்பிட்டுட்டு இருக்காங்க” என்றார். ஒருவர் பணிவுடன் ”சார், பாட்டிக்கு என்ன காஸ்டியூம்?”என்றார். ”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். அவங்களே எல்லாம் போட்டுட்டுதான் வருவாங்க… ” குறு ஏப்பம் விட்டபடி ஓங்குதாங்கான பாட்டி கரைவைத்த கண்டாங்கியை பின்கொசுவமாகக் கட்டி, இரட்டைவடச்சங்கிலி தோடு இரட்டைமூக்குத்தி அணிந்து கால்களை திடமாக ஊன்றி வைத்து வந்தாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/625

Older posts «