Tag Archive: திரு.வி.க

ஓர் அமரகாதல்

சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றிய ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் திரு.வி.கல்யாணசுந்தரனாரின் நண்பர். அவரைக்காண பல்வேறுவகை மக்கள் தினமும் வந்துகூடுவார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் விதவைகள். அவர்களுக்கு என்று ஏதேனும் ஓர் அமைப்பு இருந்தால் அது நிலையான உதவிகளை அளிக்க முடியும் என்று சதாசிவ அய்யர் கருதினார். அதற்கு முன்கையெடுத்த திரு.வி.க 1920 ல் சென்னை சௌந்தரியமகாலில் விதவைநலம் காக்கும் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.ஸர்.வேங்கடரத்தினம் என்ற பிரமுகர் அதற்கு தலைமை தாங்கினார். சதாசிவ அய்யரின் மனைவி அதில்பேசினார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/733

திருவிக,சிங்காரவேலு முதலியார்:கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன், “அபிதான சிந்தாமணி” பற்றிய உங்கள் எழுத்தை  [அபிதான சிந்தாமணி: கடல் நிறைந்த கமண்டலம். ]படித்தேன் !! பிரமிப்பும், சோகமும் ஒருசேர அடைந்தேன் !! மிக்க நன்றி. உ.வெ.சாமிநாத்ய்யரின் பணிக்கு நிகரான தேடுதல் பிரமிப்பூட்டுகிறது !! இந்த படைப்பின் இன்றைய நிலை கவலையளிக்கிறது !! தமிழின் பழைய பொக்கிஷங்களை மீட்டு பாதுகாக்க, அரசுசாரா, பொது நல அமைப்புகள் ஏதேனும் உள்ளனவா ? நம்மால் முடியக்கூடியது ஏதேனும் உளதா ?  தனியார் பல்கலைகழகங்களை இதற்காக முயலவைக்க உங்களைப்போன்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/751

அமரகாதல்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமொகன், தங்களது திரு வி க பதிவினை[ஓர் அமரகாதல் ] படித்து நெகிழ்ந்தேன். திரு வி க வாழ்க்கை குறிப்புகள் என்னை மிகவும் பாதித்த ஒன்று. நீங்கள் அதை படித்திருப்பீர்களா, அதை பற்றிய உங்கள் சிந்தனைகள் என்னவாக இருக்கும் என்று பலமுறை என்னியதுன்டு. எதையும் கோர்வையாக எழுத வரவில்லை.இணையத்தில் தமிழில் எழுத இதுவே எனது முதல் முயற்சி. பிழை இருந்தால் மன்னிகவும். அன்புடன் கெ அன்புள்ள குமாரகுரு அவர்களுக்கு தமிழின் மிகச்சிறந்த சுயசரிதைகளில் ஒன்று திருவிகவுடையது. சுயசரிதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/750