Tag Archive: திருவையாறு

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு அக்னிப்ரவேசம் M,S.சுப்பலக்ஷ்மி கட்டுரை மிகைப்படுத்தப்படாத அருமையான கட்டுரை. அதில் பெங்களுரு நாகரத்தினம்மா பற்றி அதிக விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. பெங்களுரு நாகரத்தினம்மா அவர்கள் திருவையாறு தியாகராஜர் கிருதிகளை ஆத்மார்த்தமாக நேசித்தார். இன்றைக்கு தியாகராஜர் ஆராதனை இவ்வளவு சிறப்பாக நடைபெறுவதற்கு ஆரம்பகாலத்தில் மிக பெரிய அளவில் பொருளுதவி செயதார். பிராமணர்கள் தியாகராஜர் ஆராதனையை மிக சிரமபட்டு செய்துவந்தபோது பெங்களுரு நாகரத்தினம்மா பெருமுயற்சியால் சிறப்பாக இன்று வரை கொண்டாடப்படுகிறது. பிராமணர்கள் காட்டாத ஆர்வத்தை விட பிராமணர் அல்லாத நாகரத்தினம்மா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76135/

ஐயாறப்பனை அழிப்பது – கடிதம்

அன்புள்ள நண்பர் ஜெயமோஹன் அவர்களுக்கு, வணக்கம். திரு. ஏ.வி.மணிகண்டன் தங்களது வலைத்தளத்தில் ஐயாறப்பன் கோவில் புனரமைப்பைப் பற்றிய ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து எத்தனையோ அந்தக் கோவில் ஆதீனத்திடம் கூறியும் அவர் தொடர்ந்து புராதனத் தன்மையைக் குழிதோண்டிப் புதைத்து வருகிறார். இது குறித்த என் கட்டுரை வல்லமை.காமில் இதோ: http://www.vallamai.com/literature/articles/14714/ அதிலேயே flickr link படங்களும் உள்ளது. நல்ல பணம் மட்டும் சம்பாதிப்பதில் குறியாக இல்லாமல், நம் கலாச்சாரத்தில் அக்கறையுள்ளவராய் வக்கீல் எவரேனும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் கூறுங்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25704/

ஐயாறப்பன் ஆலய ஓவியங்கள் அழிப்பு

திருவையாறின் ஐயாறப்பர் கோவிலின் சுவரோவியங்கள், உட்கருவறையை ஒட்டியுள்ள குறுகலான இரண்டாம் திருச்சுற்றின் சுவரில் காணப்படுகின்றன. இங்கு ஓவியங்கள் இரண்டு அடுக்குகளாக வரையப்பட்டுள்ளன. அவை 17 அல்லது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால ஓவியங்கள். இருநூறு அடி தொடராக அமைந்த இந்த ஓவியங்கள் தலவரலாற்றினை விவரிப்பவை. நம்முடைய வரலாறு அதிகமும் பதிவு செய்யப்பட்டது இது போன்ற ஓவியங்களிலும் புடைப்புச் சிற்பங்களிலுமே. ஏற்கனவே பட்டீஸ்வரத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன் வரை இருந்த ஓவியங்களை இன்று அதன் கும்பாபிஷேகத்திற்காக நடந்த புதுப்பித்தலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25623/

திருவையாறு கடிதங்கள்

இன்று காலை திருவையாறு/தஞ்சாவூரிலிருந்து பெங்களூர் திரும்பினோம்.திருவையாறுபற்றிய உங்களின் பதிவையும் படித்தேன். எங்களுக்கு இந்த ஆராதனைஅனுபவம் முதல்முறையானதால் நிறை/குறைகள் தெரியவில்லை !. ஆனாலும் உங்களின் பதிவைப் படிக்கும்போது, நீங்கள் எழுதியது உண்மை என்றே உணர்ந்தேன் !! (ஆராதனைக்கு முன்னால் 30 நிமிடம் என்று நிகழ்ச்சிநிரலில்போட்டிருந்த்த மங்கல இசை (தவில், நாதஸ்வரம்) 1 மணி நேரம் நீண்டது !!இரண்டு பெயரைத்தவிர, உச்ச நிலை பாடகர்களை ஆராதனையின் நிகழ்ச்சியில் காணவில்லை ! பஞ்சரத்தின கீர்த்தனைகளை நூற்றுக்கனக்கானவர்கள் பாடும்போது, பந்தலில்நேரடியாகக் பாடகர்களின் குரல்களில் கேட்கலாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11904/

திருவையாறு இம்முறை

இருபத்தொன்றாம் தேதி கிளம்பி அதிகாலை நான்குமணிக்கு தஞ்சை சென்று சேர்ந்தேன். ரயில்நிலையம் அருகே அரங்கசாமியின் ஊழியர் நிற்பதாகச் சொன்னார். குளிரில் காத்து நின்றேன். அருகே கனராவங்கியின் ஏ.டி.எம். உள்ளே நுழைந்து ஆயிரம் ரூபாய் எடுத்தேன். பணத்தை எடுப்பதற்குள் கார்டை எடுப்பது என் வழக்கம், பணத்தை எடுத்தால் கார்டை கைவிட்டு கிளம்பிவிடுவேன் என்பதனால் அருண்மொழி இதை வலியுறுத்தி பயிற்றுவித்திருக்கிறாள். கார்டை எடுத்தபோது கைதவறி கீழே விழுந்தது .எடுத்து கவருக்குள் வைப்பதற்குள் பணம் திரும்ப சென்றுவிட்டது. மீண்டும் கார்டை போட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11878/

திருவையாறு

இன்றிரவு திருவையாறு செல்கிறேன். நாளையும் மறுநாளும் அங்கே இருப்பேன். நண்பர்களை சங்கீதம் படாத பாடு படுத்துகிறது. நண்பர்கள் நம்மை. இசையின் நுட்பங்களை அறிந்து கேட்கும் ரசிகன் அல்ல நான். சும்மா கேட்பதோடு சரி.கேட்டுக்கேட்டு பெரும்பாலான தியாகராஜர் பாடல்கள் அறிமுகம். பலவற்றுக்கும் பொருள் தெரியும் என்பதனால் அந்த உணர்ச்சிகள் பிடிக்கும். மரபிசையில் அவரும் புரந்தரதாசரும் எழுதிய பாடல்களே உணர்ச்சிகரமானவை. ஜெயதேவரின் அஷ்டபதி அழகானது. மேலும் காவேரி. நிறைந்தோடும் காவேரிக்கரையில் ஓலைப்பந்தலில் நிகழும் அந்நிகழ்ச்சிக்கு என ஓரு பண்பாட்டு நீட்சி, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11715/

தஞ்சை தரிசனம் – 3

அக்டோபர் 18, காலை தஞ்சை விடுதியில் இருந்து கிளம்பி தஞ்சை பெரியகோயிலைப் பார்க்கச்சென்றோம். இந்தவருடம் ஆயிரமாவது பிறந்தவருடத்தைக் கொண்டாடும் இந்த கலைப்பொக்கிஷம் ஓர் அபூர்வமான பாடலைப்போல மீண்டும் மீண்டும் பார்க்கத்தக்கது. எத்தனை முறைப்பார்த்தாலும் கண்முன் மீண்டும் புதிதாக நிகழ்ந்துகொண்டே இருப்பது. நான் 1981ல் ஊரைவிட்டு ஓடிவந்து முதன்முறையாக இதைப்பார்த்தபோது சொல்லவிந்து அப்படியே நின்றிருக்கிறேன். பிரம்மாண்டமான அமைப்புகளில் பேரழகு கைகூடுவதென்பது மிக அபூர்வமான ஒரு சாத்தியக்கூறு. ஒழுங்கும் முழுமையும் அத்தகைய பெரும் அமைப்புகளில் எளிதில் சாத்தியமாவதில்லை. ஏனென்றால் மனிதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8914/

தஞ்சை தரிசனம் – 2

மதியம் புதுக்கோட்டைக்கு வந்து ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு விடுதி ஒன்றை அமர்த்திக்கொண்டோம். வெயிலில் அலைந்ததற்கு குளிர்சாதனம்செய்த அறை உடனடியாக தூக்கத்தை கொண்டு வந்தது. நான்கு மணிக்கு எழுந்து கொண்டு குளித்துவிட்டு திருமயம் கோட்டையைப்பார்க்கச் சென்றோம். தமிழகத்தில் எஞ்சியிருக்கும் தொன்மையான கோட்டைகளில் ஒன்று இது. சாலையே கோட்டைக்குள் சென்றுதான் மதுரைக்குப்போகிறது. உயரமான கோட்டைமதில் சேதமடைந்து நிற்கிறது. சில இடங்களில் அதில் சுண்ணாம்பு பூசி சரிசெய்திருக்கிறார்கள். பழைய கோட்டைக்கு மேல் மேலும்கட்டி உயரமாக்கப்பட்டு துப்பாக்கிசுடும் புழைகளுடன் செய்யப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் சேதுபதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8907/

திருவையாறு

  திருவையாறுக்கு நான் முதன்முதலகச்சென்றது ஆற்றூர் ரவிவர்மாவின் வழிகாட்டலில். 1992ல். அப்போதுதான் எனக்குத் திருமணமாகியிருந்தது. அருண்மொழியின் தாய்வீடு பட்டுக்கோட்டையில். அங்கிருந்து கிளம்பினால் ஒன்றரைமணிநேரத்தில் திருவையாறு வந்துவிடமுடியும். பொங்கல் சமயத்தில் நாங்கள் பட்டுக்கோட்டையில் இருப்பதும் வழக்கம். ஆற்றூர் பதினைந்துவருடங்களாக வருடம்தோறும் திருவையாறுக்குச் சென்று கொண்டிருந்தார். ஆகவே திருவையாறு வருவதாக அவர் சொன்னதனால் அவருக்காகவே நானும் அங்கே செல்வதாக முடிவெடுத்தேன். அப்போது எனக்கு இசை நாட்டம் இல்லை. இது ஒரு மென்மையான சொற்றொடர். உண்மையில் இசை வெறுப்பு மட்டுமே இருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1229/