Tag Archive: திருவாய்மொழி

ஒக்கலை ஏறிய உலகளந்தோன்

சங்க இலக்கியத்திற்கும் பக்தி காலகட்ட இலக்கியங்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு பின்னதில் பயின்றுவரும் பல அன்றாட வழக்குச் சொற்கள். சங்க இலக்கியச் சொல்லாட்சி நம்மிடமிருந்து விலகி தொலைதூரத்தில் நிற்கும்போது தேவார திருவாசக பிரபந்தப் பாடல்களின் சொல்லாட்சிகள் நமக்கு மிக அண்மையவாய் உள்ளன. நாம் செல்லமாகவும், மழலையாகவும், கடுமையாகவும், நுட்பமான பொருளில் பயன்படுத்தும் வட்டாரச் சொற்களை அப்பாடல்களில் காணும்போது ஒருவகை உவகை ஊற்றெடுக்கிறது. பல தஞ்சை வட்டார வழக்குச் சொற்களைக் கேட்டு நான் உவகை கொண்டதுண்டு. அதில் ஒன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2132

ஆயிரம்கரங்கள்

httpv://www.youtube.com/watch?v=nQX2iqK7O5c அற்புதம்! தாவோயிசத்தின்  Guyan Yin என்ற தேவியை சித்தரிக்கும் நடனம்.. தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்! துணைமலர்க் கண்களாயிரத்தாய்! தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய் தமியேன் பெரிய அப்பனே என்ற நம்மாழ்வார் திருவாய்மொழியும்  நினைவில்  எழுகிறது.. அன்புடன், ஜடாயு — http://www.tamilhindu.com/author/jatayu/

Permanent link to this article: https://www.jeyamohan.in/17704