Tag Archive: திருவரம்பு

காலமின்மையின் கரையில்…

  1986 நவம்பருக்குப்பின் நான் கிட்டத்தட்ட இருபத்தெட்டாண்டுக்காலம் என் சொந்த ஊருக்குப்போனதில்லை. திருவரம்பைச்சுற்றியிருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறேன். திற்பரப்பு அருவிக்கு பலமுறை. அருவியிலிருந்து நான்கு கி.மீ தொலைவில்தான் என்னுடைய ஊர். ஆனால் ஊரைச்சுற்றிச் சென்றுவிடுவேன். என் ஊர்க்காரர்களைச் சந்திப்பதும் மிகக்குறைவு, அதற்கான வாய்ப்புக்களை தவிர்த்துவிடுவேன் இருஆண்டுகளுக்கு முன்பு அரங்கசாமி திருவரம்புக்குச் சென்றே ஆகவேண்டும் என்று சொன்னதனால் ‘சரிதான் இனிமேல் என்ன?” என்று துணிந்து திருவரம்புக்குச் சென்றோம். ஈரோடு கிருஷ்ணன் உடனிருந்தார். சைதன்யாவும் வந்தாள். அது ஒரு கொந்தளிப்பான பயணம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83930

புறப்பாடு II – 18, கூடுதிர்வு

என் அப்பா வீட்டைவிட்டு முதல்முறையாக கிளம்பிச் சென்றபோது அவருக்கு ஒன்பது வயது. பாட்டியை நோக்கி கையை ஓங்கி ‘ச்சீ போடி!’ என்று பல்லைக்கடித்துச் சொல்லிவிட்டு இடுப்பில் ஒற்றைத்துண்டு மட்டும் அணிந்தவராக படியிறங்கி ஓடி ஆற்றுக்குச் செல்லும்பாதையில் கைதைப்புதர்களுக்குள் புகுந்து காணாமலானார். பாட்டி அதை பெரியதாக எடுக்கவில்லை. வந்துவிடுவார் என்றுதான் மாலை வரை நினைத்திருந்தாள். இரவில்தான் கொஞ்சம் கவலை வந்தது. பக்கத்துவீடுகளிலும் கோயில்களிலும் தேடிப்பார்த்தாள். காணவில்லை என்று ஆனபோது திகில் ஏற்பட்டது. ஒருமாதம் கழித்துத்தான் அப்பா கிடைத்தார். அதற்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40369