Tag Archive: திருவனந்தபுரம்

ஆதியும் அனந்தமும்

  பத்மநாபசாமிக்கும் எங்களுக்கும் நெடுந்தொலைவு இருந்தது, அவர் இருந்தது திருவனந்தபுரத்தில். அக்காலத்தில் எங்களுக்கு அது ஒரு முழுநாள் பயணத்தொலைவு. பல ஆறுகள். பல ஊர்கள். ஆனால் அவர்தான் எங்கள் முழுமுதற்பெருந்தெய்வம். அவர் திருவனந்தபுரம் ஆண்ட மகாராஜாவின் குடும்பதெய்வம். நாங்கள் மகாராஜாவின் பிரஜைகள். நாங்கள் வாங்கி கண்ணிலொற்றி இடுப்பில் கோத்து செத்துவிழுந்தாலும் செலவழிக்காமல் புதைத்து வைத்தது அனந்தபத்மநாப சாமியின் சக்கரம். எங்கள் நிலங்களில் இருந்தது அனந்தபத்மநாபசாமியின் சங்கு முத்திரை பொறிக்கப்பட்ட அளவுக்கற்கள். ஆனால் எங்கள்குடும்பம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாளுக்கு வழிவழியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84097

புறப்பாடு II – 4, இரும்பின்வழி

என்னை ஜோலார்ப்பேட்டையில் ரயிலில் இருந்து இறக்கிவிட்டார்கள். டிக்கெட் எடுக்கவில்லை. டிக்கெட் எடுக்கக் கூடாதென்று நினைக்கவில்லை. எங்கே செல்வது என்ற திட்டமில்லாமல் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் நின்றேன். மூன்றுநாள் திருவனந்தபுரத்தில் அலைந்தபின் ரயில் நிலையம் என்னுடைய இடமாக ஆகியது. நிறுத்திவைக்கப்பட்ட ரயில்களில் ரகசியமாக இரவு தூங்கமுடியுமென்பதை கற்றுக்கொண்டேன் ரயிலில் எனக்கு ஓர் ஆறுதல் இருந்தது. தண்டவாளத்திலும் இரும்புச்சக்கரங்களிலும் இரும்பாலான கனத்த பெட்டிகளிலும் எல்லாம் ஓர் உறுதி இருந்ததை உணர்ந்தேன். ரயிலின் விசில், அதன் நெற்றியில் சுடரும் வெளிச்சம், அதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39863

புறப்பாடு II – 3, பாம்பணை

வட இந்தியாவில் ரயில்நிலையங்களை விட்டால் தூங்குவதற்கு இடமே இல்லை. அங்கே உள்ள கோயில்கள் சற்றுப்பெரிய டீக்கடை பாய்லர்கள் என்றுதான் எனக்குத்தோன்றும். உட்கார்ந்து கால்நீட்ட முடியும் என்றால் அங்கே ஒருவர் கடைபோட்டிருப்பார். சைக்கிள்ரிக்ஷாக்காரர்கள் அதன் பின்னிருக்கை முதல் கைப்பிடிக்கம்பி வரை ஒரு பலகையைப்போட்டு அதில் படுத்திருப்பார்கள். லாரிகளில் இருந்து பெற்ற பழைய தார்ப்பாயை வெட்டி சிறிய போர்வைகளாக ஆக்கி அதைக்கொண்டு போர்த்தியிருக்க வெளியே கடும் பனியும் மழையும் எல்லாம் கொட்டிக்கொண்டிருக்கும். அந்தச்சிறிய பலகைகளில் தூங்க அவர்களுக்கு தூக்கத்திற்குள்ளும் பெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39799

காந்தளூர்ச்சாலையின் கலைஞன்

ராஜராஜசோழனின் மெய்கீர்த்திகளில் முக்கியமானது ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தளி’ என்ற புகழ்மொழி. ராஜராஜன் பதவி ஏற்ற நான்காவது ஆட்சி ஆண்டிலிருந்து (கி.பி. 988) இந்த அடைமொழி இராஜராஜனின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ’காந்தளூர்சாலை கலமறுத்தளிய கோராஜகேசரி வன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவன்” “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்று அவர் குறிப்பிடப்படுகிறார். இந்த காந்தளூர்ச்சாலை என்பது என்ன என்பதைப்பற்றி சோழவரலாற்றாசிரியர்கள் நடுவே தொடர்ச்சியான விவாதம் நடந்து வந்துள்ளது. அத்தனை முக்கியமான ஒரு வெற்றியாக அது குறிப்பிடப்படுவதனால் அது சேரநாட்டில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9174