Tag Archive: திருவண்ணாமலை- நாஞ்சில் நாடன் -சந்திப்பு- பாலா

திருவண்ணாமலை

இரண்டாயிரத்துப்பத்தின் கடைசிநாள் நான் பேருந்தில் கோவைக்குக் கிளம்பினேன். காலையில் கோவையில் அரங்கசாமி வந்து என்னை வரவேற்பதாக ஏற்பாடு. துணைக்கு ராமச்சந்திர ஷர்மாவும் வருவதாக. நான் ஏழு மணி சுமாருக்கு பேருந்து வந்துசேரும் என்று தகவல் சொல்லியிருந்தேன். அதிகாலை நாலரை மணிக்கு இறக்கி விட்டு விட்டார்கள்.கோவைக்குளிரில் போர்வை போர்த்து முண்டாசு கட்டி நின்றேன். நாஞ்சில்நாடனை செல்பேசியில் எழுப்பலாமா என்று எண்ணம் வந்தது. எடுப்பாரா? ஆனால் வந்துகுவியும் வாழ்த்துக்களை ஏற்க கும்பமுனி விடிகாலையிலும் சித்தமாகவே இருப்பார் என்று ஒரு ஊகம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11285

அண்ணாமலை-பாலா

10:30 மணி ராகுகாலம் முடிந்ததா என்று கவனமாகப் பார்த்து விட்டு, எங்கள் வழக்கமான வழிநடைப் பாடலை (அச்சம் என்பது மடமையடா..) மனதில் நிறுத்தி, நானும், விஜியும், எங்கள் தத்துப் பிள்ளை அரவிந்தனும் (குரங்குத் தவம் ப்ளாக்கர்) கிளம்பினோம். கிளம்புவதற்கு முன்னால், அண்ணன் அரங்கசாமிக்குப் போன் செய்து, “தல, அஞ்சு மணிக்குள்ளார அண்ணாமலை வந்துடுமா?” என்று கேட்டேன். “ஹ ஹ ஹ” என்று சிரித்தார்.. ஹேமநாத பாகவதரின் மகத்துவம் அறியாமல் பேசுகிறாய் நீ என்பது போன்ற சிரிப்பு அது.. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11289