Tag Archive: திருவட்டாறு

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

  நமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல் கட்டுமானமும், சமூக அடுக்குமுறையும் உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாலயங்களில் பல்லாயிரம் கல்வெட்டுகளும் பிற ஆவணப்பதிவுகளும் உள்ளன. ஒரு நவீன வரலாற்றாசிரியனுக்கு ஒவ்வொரு ஆலயமும் ஒரு மாபெரும் வரலாற்று நூல்போல. பொதுவாக வரலாற்றாய்வின் இன்றைய காலகட்டத்தை நுண்வரலாற்றெழுத்தின் காலம் எனலாம். பொதுவாகவும் ஒட்டுமொத்தமாகவும் தமிழக வரலாறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/263

ஆதியும் அனந்தமும்

  பத்மநாபசாமிக்கும் எங்களுக்கும் நெடுந்தொலைவு இருந்தது, அவர் இருந்தது திருவனந்தபுரத்தில். அக்காலத்தில் எங்களுக்கு அது ஒரு முழுநாள் பயணத்தொலைவு. பல ஆறுகள். பல ஊர்கள். ஆனால் அவர்தான் எங்கள் முழுமுதற்பெருந்தெய்வம். அவர் திருவனந்தபுரம் ஆண்ட மகாராஜாவின் குடும்பதெய்வம். நாங்கள் மகாராஜாவின் பிரஜைகள். நாங்கள் வாங்கி கண்ணிலொற்றி இடுப்பில் கோத்து செத்துவிழுந்தாலும் செலவழிக்காமல் புதைத்து வைத்தது அனந்தபத்மநாப சாமியின் சக்கரம். எங்கள் நிலங்களில் இருந்தது அனந்தபத்மநாபசாமியின் சங்கு முத்திரை பொறிக்கப்பட்ட அளவுக்கற்கள். ஆனால் எங்கள்குடும்பம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாளுக்கு வழிவழியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84097

புறப்பாடு II – 17, பின்நின்றவர்

மதுரையை ரயில் தாண்டியபிறகுதான் நான் விழித்துக்கொண்டேன். அதுவரை எந்த சுயபோதமும் இல்லாமல் தூங்கியிருக்கிறேன் என்பது அப்போதுதான் தெரிந்தது. எச்சில் என் தோளிலும் மடியிலுமாக வழிந்திருந்தது. சன்னலோர இருக்கை என்பதனால் நன்றாகவே சாய்ந்துகொள்ள முடிந்தது. கால்களை நீட்டி சோம்பல் முறித்தேன். எதிரே இருந்த தெற்றுப்பல்காரர் ‘நல்ல தூக்கம் என்ன தம்பி?’ என்றார். ‘ஆமா…’ என்றேன்.  ‘பாத்துக்கங்க’ என்று சொல்லிவிட்டு சென்று முகம் கழுவி கழிப்பறை சென்றுவந்தேன். ‘இப்ப இனிமே டீக்காரன் எவனும் வரமாட்டான். சிலசமயம் கோயில்பட்டீல ஏறுவான்’ ‘கோயில்பட்டியா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40343

புறப்பாடு II – 3, பாம்பணை

வட இந்தியாவில் ரயில்நிலையங்களை விட்டால் தூங்குவதற்கு இடமே இல்லை. அங்கே உள்ள கோயில்கள் சற்றுப்பெரிய டீக்கடை பாய்லர்கள் என்றுதான் எனக்குத்தோன்றும். உட்கார்ந்து கால்நீட்ட முடியும் என்றால் அங்கே ஒருவர் கடைபோட்டிருப்பார். சைக்கிள்ரிக்ஷாக்காரர்கள் அதன் பின்னிருக்கை முதல் கைப்பிடிக்கம்பி வரை ஒரு பலகையைப்போட்டு அதில் படுத்திருப்பார்கள். லாரிகளில் இருந்து பெற்ற பழைய தார்ப்பாயை வெட்டி சிறிய போர்வைகளாக ஆக்கி அதைக்கொண்டு போர்த்தியிருக்க வெளியே கடும் பனியும் மழையும் எல்லாம் கொட்டிக்கொண்டிருக்கும். அந்தச்சிறிய பலகைகளில் தூங்க அவர்களுக்கு தூக்கத்திற்குள்ளும் பெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39799

ஒருநாள்

கல்பற்றா நாராயணன் நாகர்கோயிலுக்கு வந்திருந்தார். அவர் என் வீட்டுக்கு வருவது இதுவே முதல்முறை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஓர் நிகழ்ச்சி. முந்தினநாளே வந்து ஒருநாள் என்னுடன் தங்கி பின்னர் நாங்கள் சேர்ந்து செல்வதாக ஏற்பாடு. அவர் வரும் தகவலைச் சொன்னதும் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணன் அவரும் வருவதாகச் சொன்னார். சென்னையில் இருந்து செந்தில் வருவதாகச் சொல்லி பின்னர் நின்றுவிட்டார். கிருஷ்ணனும் தங்கமணியும் அதிகாலை ஆறுமணிக்கே வந்து விட்டார்கள். நான் இரண்டுமணிக்குத்தான் படுத்தேன். அருணா வந்து என்னை எழுப்பியபோது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2093