Tag Archive: திருமுகப்பில்…..

முகப்பின் திரு

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். என் பெயர் இளங்கோவன். இது உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். இன்று தங்களுடைய திருமுகப்பில் கதையை மீண்டும் வாசித்தேன். நாகர்கோயிலில் நான் வசித்த இரண்டு வருடங்களில் சிலமுறை ஆதி கேசவரின் கோயிலைக் கடந்து செய்திருக்கிறேன். உள்ளே செல்ல வேண்டுமெனத் தோன்றியதில்லை. மதுரைக்குத் திரும்பிய பிறகு மீண்டும் அங்கு செல்ல வாய்க்கவில்லை. காளிச்சரன் ஆதி கேசவரின் முன் நிற்கும் தருணத்தை மீண்டும் மீண்டும் வாசித்து விட்டேன். அன்று அவர் என்ன கண்டார் என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71339

திருமுகப்பில்-கடிதம்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு “ திருமுகப்பில்” வாசித்தேன். ஆதிகேசவனை சேவித்தேன். நன்றி. ப்ரம்மாண்டத்தை சேவித்து ப்ரமித்துப் போனேன். இப்படியும் ஆதிகேசவனை உணர வைத்ததற்கு நமஸ்காரம் கோடி. அந்தக் கைகளாலும், ஒடியும் கேசவனின் நீளத்தைப் புரிய வைக்க முயன்றதைப் படித்து ஆதிகேசவனும் சிரித்திருப்பார் என்றே நினைக்கிறேன். அளக்க முடியுமா அவனை? முடியாது என்பதை காளிசரன் புரிந்து கொண்டு விட்டாரே உங்கள் மொழி பெயர்ப்பில்!! உங்கள் விளக்கமும் காளிசரனின் புரிதலும் ஆதிகேசவனின் ஆளுமையும் என் மனதில் இன்னும் கொஞ்ச …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34941

திருமுகப்பில்…..

திருவட்டார் ஆதிகேசவன் கோயிலருகே அன்று ஒரு நல்ல நூலகம் இருந்தது. ஸ்ரீ சித்ரா நூலகம். சித்திரைத்திருநாள் மகாராஜா சொந்தப் பணத்திலிருந்து கொடுக்கும் நிதியுதவி இருந்தமையால் அங்கே நல்ல நூல்கள் நிறையவே வாங்குவார்கள். நாங்கள் திருவட்டாரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி திருவரம்பில் குடியிருந்தோம். அப்பாவின் அம்மாவும் தங்கையும் திருவட்டாரிலேயே கோயில் அரசமரத்தருகே மூதாதையர் வீட்டிலேயே இருந்தனர். நாங்கள் பரம்பரையாக திருவட்டார் கேசவப்பெருமாள் கோயில் ஊழியர்கள். அந்தக்காலத்தில் யானைக்கொட்டில் பொறுப்பில் இருந்ததாகச் சொல்வார்கள். விடுமுறை நாட்களில் அனேகமாக வாரம் மூன்றுமுறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47