அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் உரைகளை நான் மிகுந்த ஆர்வத்தோடு பின்தொடர்பவன். உங்களின் எல்லா உரைகளும் செறிவோடும் அடர்த்தியோடும் இருந்தாலும், திருப்பூரில் நீங்கள் ஆற்றிய சுதந்திர தின உரை தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. பொதுவாக, திருப்பூரில் தாங்கள் ஆற்றும் உரைகள் மிகுந்த அழகும், அறிவார்ந்த தகவலும், செறிவும் கொண்டவையாக அமைகின்றன. இதற்கு முன், விஜயதசமியன்று “அணையாவிளக்கு” என்ற தலைப்பில் தாங்கள் ஆற்றிய உரையும் மிகுந்த ஒளி பொருந்திய ஒன்று. ‘சங்குக்குள் கடல்’ உரை என்னை முழுமையாகவே தனக்குள் …
Tag Archive: திருப்பூர் உரை
Permanent link to this article: https://www.jeyamohan.in/38757
சங்குக்குள் கடல்- கடிதங்கள்
அன்புள்ள ஜே எம் இப்போதுதான் உங்கள் உரையையும் அதைத் தொடர்ந்த கடிதங்களையும் வாசித்தேன். மிக அற்புதமாக நம் தொல் மரபையும் அதில் தோன்றிய நம் வரலாற்று உணர்வையும் மிக நன்றாக இணைத்து விளக்கி இருக்கிறீர்கள். உங்கள் கருத்தில் உடன் படுகிறேன். உங்கள் நீலிதான் எங்கள் குல இசக்கி. மேலும் தேசியம், தேசியப்பிரக்ஞை வேறுபாடு பற்றிய கருத்தும் நன்று. சிவா சக்திவேல் அன்புள்ள சிவா நன்றி. ஒரு உள்ளார்ந்த உணர்வுக்கும் அவ்வுணர்வால் உருவாக்கப்படும் அமைப்புக்கும் நிறைய வேறுபாடு உண்டு. …
Permanent link to this article: https://www.jeyamohan.in/38906
திருப்பூர் உரை கடிதங்கள்
அன்புள்ள ஜெ, உங்கள் திருப்பூர் உரை வாசித்தேன். கடைசி வரிகள்என்னை மிகவும் நெகிழச்செய்தன. வெளிப்படையாக தேசப்பற்றும் ஆழ்மனதில் தேச வெறுப்புமாகப்பலர் இன்று வேஷம் போடுகின்றனர். தனிப்பட்ட முறையில் எனக்கு என் தேசம் மீதான அபிமானம் பல வருஷங்களாகவே குறைந்து கொண்டு தான் இருக்கிறது. உங்கள் உரை என் கருத்தையோ நிலைப்பாட்டையோ மாற்றவில்லை என்றாலும் தேசக்கனவு என்ற மானிட உணர்வின் உச்சத்தை சில மணித்துளிகள் தோன்றச்செய்தீர்கள். நன்றி!! உண்மைதான்!பிழைத்தலே பிரம்மப்பிரயத்தனம் என்ற நிலையில் இருந்து இன்று பிழைக்க வந்த …
Permanent link to this article: https://www.jeyamohan.in/38763
திருப்பூர் உரை-கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு, உங்களின் திருப்பூர் உரை “தேசமென்னும் தன்னுணர்’வை வாசித்தேன். இதற்கு முன் இவ்வளவு விஷயங்களை வாசிப்பவர்களுக்கு தரக்கூடிய பேச்சை/உரையை கேட்டதில்லை. ஒரே உரையில் சுதந்திரம், ஜனநாயகம் , பண்பாடு , தொல்பொருள் , வரலாறு, சைவ சித்தாந்தம் , சுயம் அறிதல் , இனகுழுக்கள் , குலதெய்வம் இன்னும் பல… படித்து முடிக்கும் பொழுது, இவ்வளவு விசயங்களையும் ஒவ்வொன்றாக இணைத்து எப்படி ஒருவரால் பேச முடியும் என்ற பிரமிப்பிலிருந்து விடுபட முடியவில்லை. நீலியைப் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/38742
சங்குக்குள் கடல்- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன், உங்களின் திருப்பூர் உரையைப் படித்தவுடன் இதனை எழுதுகிறேன். இதனை நான் நேரில் காணவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. இது போன்றதொரு உரையை தமிழ் நாட்டில் எவரும் இதற்கு முன் கேட்டிருக்கவே முடியாது. ஈரோட்டில் நீங்கள் அவமானப் படுத்தப்பட்டதாக எழுதியதைப் படிக்கையில் என்னுள் எழுந்த வருத்தம் சொல்லில் அடங்காதது. நீங்கள் கண் முன் கிடக்கும் வைரம். ஆனால் கவனிப்பார்தான் இல்லை. தமிழர்கள் பொய்யர்களின் பின்னால், அயோக்கியர்களின் பின்னால் நடந்தே அழிந்து கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு உங்களின் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/38724
திருப்பூர் உரை கடிதங்கள்
நான் அவினாசி சரவணன். உங்கள் சொற்பொழிவைக் கேட்பதற்காக ஈரோட்டுக்கு வந்திருந்தேன். உங்களைச் சந்தித்து கவிதைத்தொகுப்பைக் கொடுக்கவேண்டுமென்று ஆசைப்பட்டேன். உங்கள் சொற்பொழிவைப்பற்றி நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். யாரோ வேண்டுமென்றே எழுதியதை நம்பி நீங்கள் எழுதிவிட்டீர்கள் என்று நினைத்தேன். அந்தச்சொற்பொழிவு அருமையாகவே இருந்தது. ஆனால் பத்து நிமிடம் பேச்சு தொடர்ச்சி இல்லாமல் போவதாகத் தோன்றியது. என்ன சொல்லவருகிறீர்கள் என்று தெரியாமல் குழப்பமாக இருந்தது. அதற்குள் ஒவ்வொருவராக எழுந்து செல்வதைக் கண்டு நீங்கள் குழம்பிவிட்டீர்கள். ஆனால் அதற்கு மழைதான் காரணம். நானே …
Permanent link to this article: https://www.jeyamohan.in/38714