Tag Archive: திராவிட இயக்கம்

ஈவேரா பற்றி சில வினாக்கள்…

  ஈவேரா பற்றி நான் எழுதிய கட்டுரைகளை ஒட்டி பல கேள்விகள் கடிதங்களாக வந்தன. அவற்றில் முக்கால்வாசிக் கடிதங்கள் வழக்கம்போல என்னை மலையாளியாக, ஆகவே ஓர் அயோக்கியனாக முன்னரே முடிவுசெய்துவிட்டு விவாதத்துக்கு அழைப்பவை. அவற்றை வழக்கம்போல நானும் முழுமையாகவே ஒதுக்கிவிடுகிறேன். என்னை எவர் வேண்டுமென்றாலும் அயோக்கியன் என்று தாரளமாக எண்ணவோ எழுதவோ செய்யலாம். நான் நம்பும் வாசகன், என் புனைவுகளையும் கட்டுரைகளையும் வாசித்தால் புரிந்துகொள்ளக்கூடியவன், இந்த விவாதங்களை கவனித்துக்கொண்டிருக்கிறான் என்றும் விவாதங்களின் தரப்புகளில் உள்ள தரத்தை மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41726/

தமிழும் திராவிடமும்

திண்ணை இதழில் ஆய்வாளர் அ.கணேசனும் தி.ராமச்சந்திரனும் எழுதியிருக்கும் கட்டுரை தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும் முக்கியமான ஒன்று. ஆ.இரா.வேங்கடாசலபதி காலச்சுவடு இதழில் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றுக்கான பதில் அது. சென்ற பல ஆண்டுகளாகத் தமிழில் முன்வைக்கப்பட்டு வரும் ஒரு கருத்து தமிழகம் மீது பிராமண- வைதீக ஆதிக்கம் மேலோங்கியிருந்தமையால் ‘தன்னியல்பாக’ ‘அடித்தள மக்களால்’ உருவாக்கப்பட்ட ஒர் அரசியலெழுச்சிதான் திராவிட இயக்கம் என்பது. திராவிட இயக்கம் தமிழைக் காக்கவே செயல்பட்டது என்னும் மாயை. இதற்கு மாறானவற்றை எழுதவோ பேசவோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22479/

திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2

திராவிட இயக்கத்தின் அறிவுப்புலத்தில் உருவானவர் நீங்கள்…அந்த தாக்கம் உங்கள் எழுத்தில் எந்தவகையில் நீடிக்கிறது? நான் எழுதும் நடை என்பது முதலில் திராவிட இயக்கத்தில் இருந்து ஊக்கம் பெற்றுக்கொண்டதே. அந்த இயக்கத்தின் மொழிநடையின் சிறந்த அம்சங்களை மட்டுமே நான் எடுத்துக்கொண்டேன். திராவிட இயக்க அழகுத் தமிழ் வீச்சும், லா.ச.ராமமிருதம், தி. ஜானகிராமன், புதுமைப்பித்தன் போன்றவர்களது இலக்கிய நடையழகும்சேர்ந்ததொரு தத்துவமயக்க எழுத்து நடை எனது ஆரம்பகாலக் கதைகளில் பாலில் தண்ணீர் கலப்பு போல வந்தமைந்திருந்தது. உதாரணத்திற்கு, ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9385/

கல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3

நாத்திக இயக்கங்களின் எல்லை என்ன? ஒரு நம்பூதிரி நாவிதரிடம் பந்தயம் கட்டினார். தலையில் மொட்டை அடிக்கும்போது ஒரு கீறலுக்கு பத்துபைசா கழித்துக்கொள்வார். மொட்டைபோட கூலி ஒரு ரூபாய். ஒவ்வொரு கீறலாக விழுந்துகொண்டிருந்தது. நம்பூதிரிக்கு உற்சாகம். ஒன்பது கீறல். பத்து கீறல். காசே கொடுக்கவேண்டாம் என்று நம்பூதிரி நினைத்தார். ஆனால் சட்டென்று தலையில் வலி. ‘ஏன செய்கிறாய்?’ என்றார். ‘எல்லா கீறல்களையும் சேர்த்து ஒரே கீறலாக ஆக்குகிறேன்’ என்றார் நாவிதர். 1988ல் எம் கோவிந்தனை நான் இரண்டாம்முறையாக சந்தித்தபோது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8655/

கல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2

இருவகை பகுத்தறிவு இயக்கங்கள் நாராயணகுரு மரபில் வந்த சுவாமி சிதம்பர தீர்த்தா அவர்கள் அவரது குருவான நடராஜகுருவைப்பற்றி நினைவுகளை எழுதியிருக்கிறார். நடராஜகுருவின் வகுப்புகள், வேடிக்கைக்கதைகள் என மிகச்சுவாரசியமான ஒரு நூல் அது. அதில் சில இடங்கள் எனக்கு விசேஷமான ஆர்வத்தை உருவாக்கின. நாராயணகுருவுக்கும் நடராஜகுருவின் அப்பாவான டாக்டர் பல்புவுக்குமான கருத்துமோதல்கள்தான் அவை. டாக்டர் பல்புவுக்கு நாராயண குருவின் அத்வைதத்தில் ஈடுபாடில்லை. சில தருணங்களில் அவர் அதை ‘அய்யர்களின் சிந்தனை’ என்று இகழ்ந்தும் சொல்கிறார். அதைப்பற்றி நாராயணகுரு சிறிது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8632/

திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்? 2

  அப்படியானால் திராவிட இயக்கத்தை ஓர் எதிர்மறைச் சக்தியாக, அழிவு சக்தியாக கருதுகிறேனா? இல்லை. அது ஒரு வரலாற்று நிகழ்வு அதன் காரணத்தையும் விளைவுகளையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். திராவிட இயக்கம் எனது பார்வையில் ஒரு ‘பரப்பிய’ இயக்கம் (Populist movement) பரப்பியம் என்ற சொல் ஒரு மார்க்சிய கலைச்சொல். அதற்குப் பொருள் ‘ஆழமான கொள்கையும், சமூகத்தைப் புரிந்து கொள்ளும் கோட்பாட்டு முறையும் இல்லாமல் சமூகத்தில் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு அரசியலதிகாரத்தை பிடிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5782/

திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?-1

  தி. பொ. கமலநாதன் எழுதிய ‘தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்’ என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்தேன் (தமிழில் ஆ. சுந்தரம் எழுத்து பிரசுரம்) அதன் துணைத்தலைப்பு வித்தியாசமாக இருந்தது ‘மறைக்கப்படும் உண்மைகளும் கறை படிந்த அத்தியாயங்களும்’. இந்நூலின் வரலாறு ஆர்வத்திற்குரியது 1980 களின் தொடக்கத்தில் பெங்களூரில் இருந்து வெளிவரும் ‘தலித் வாய்ஸ்’ என்ற ஆங்கில இதழ் திராவிட இயக்கம் தற்போது தலித்துக்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி தலையங்கம் ஒன்றை எழுதியது. திராவிட இயக்கம்இன்று தமிழ் நாட்டில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5781/

திராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்

திராவிட இயக்கமும், இந்துத்வா இயக்கமும் இந்த நாட்டின் இயற்கையான வெளிப்பாடுகள். இந்த வரலாற்று சமூக சூழ்நிலையின் வெளிப்பாடுகள். இது போன்றதொரு பண்பாட்டு அடிப்படைவாதம் வேறு நாடுகளில் தோன்றியிருக்க்கலாம், ஆனால், இங்கே தோன்றியதன் காரணமும், அதன் பரிமாணங்களும், அதன் நீட்சிகளும் வேறானவை. அவற்றை ஒற்றை பரிமாணத்தில் அடைக்கவே இப்படிப்பட்ட மேற்கத்திய “காப்பி” என்ற அடைச்சொல் உதவும். துகாராம் கோபால் ராவ் [எழுத்தும் எண்ணமும் இணையக்குழுவில் இருந்து] துகாராம் இலக்கியத்தை அதன் பொதுவான ‘புற’ அடையாளங்களை வைத்தே பகுத்து மதிப்பிட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/253/

அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை

அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ. வே. ரா வின் அணுகுமுறை   இக்கட்டுரை , ஈ.வே.ரா குறித்த எனது முழுமையான மதிப்பீடு அல்ல. அவரது மொத்த எழுத்துக்களையும் ஆனைமுத்து தொகுப்பில் கூர்ந்து படித்ததுண்டு. அவர் மீது விமரிசனங்களை அவ்வடிப்படையில் முழுமையாக ஆதாரங்களுடன் முன் வைக்க என்னால் முடியும். அது இச்சந்தர்ப்பத்தில் எளிதாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல. இக்கட்டுரையை என் மனப் பதிவும், நிலைப்பாடும் என்ன என்பதை இவ்விவாதச் சூழலில் விளக்குவதற்கே எழுதியிருக்கிறேன். பொதுவாக ஈ.வே.ரா குறித்துப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/368/