Tag Archive: திம்பு

பூட்டான்- கட்டிடங்கள்

  திம்பு கையில் அள்ளிய மணிகள் போல ஒரு காட்சி. ஒரேவகையான கட்டிடக்கலையின் ஒழுங்கால் ஒட்டுமொத்த நகரமே ஒரு கலைப்பொருள்         பிரார்த்தனைச் சக்கரங்கள். பல்லாயிரம் கைகளின் பக்தியால் பயத்தால் ஆசைகளால் வேண்டுதல்களால் ஓயாது சுழன்றுகொண்டிருக்கிறது தர்மம்     திம்பு அருங்காட்சியகம். எங்கும் எதிலும் யாளிநாகம் -டிராகன்.   உணவகத்தின் உள்ளே. திரைச்சீலைகள் இங்கே இத்தனை செல்வாக்குடன் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, தூசியே இல்லை என்பது.   பறக்கும் யாளி. நெருப்புத்தழல்களே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16787

வடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை

திம்புவில் இருந்து காலையில் கிளம்பி பரோ என்ற ஊருக்குச் சென்றோம். கிட்டத்தட்ட அந்திராவின் ராயலசீமாவை நினைவுறுத்தும் நிலம். ஒரு மரம்கூட இல்லாத மலைக்குவியல்கள். உடைந்த கற்களை அள்ளி வானளாவக் கொட்டியவை போல,அவை சாலைநோக்கிச் சரிந்துகொண்டே இருந்தன. சாலையில் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. ஆள் வைத்து ஒவ்வொருநாளும் அள்ளாவிட்டால் சாலை மறிக்கப்பட்டுவிடும்.   சாலையோரமாக ஒரு ஆறு. குளிர்நீலமாகச்சுழித்துக் கொப்பளித்துச் சென்றுகொண்டிருந்தது. காரை நிறுத்தி அந்த ஆற்று மீது கட்டப்பட்ட பாலத்தில் ஏறி நின்றோம். மரப்பாலம். அருகே பழைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16785

வடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்

இந்தப்பயணத்தில் பலவிஷயங்களை அவசரமாகத் திட்டமிட்டுவிட்டோம் என்று மீண்டும் மீண்டும் நினைக்கவேண்டியிருக்கிறது. பூட்டானுக்காக நாங்கள் ஒதுக்கியிருந்த நாட்கள் இரண்டுதான் என்று நினைக்கக் கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. திம்புவில் ஒருநாள் பரோவில் ஒருநாள். ஆனால் பூட்டானுக்குள் குறைந்தது ஒருவாரம் செலவழிக்காமல் இதைப் பார்த்தேன் என்று சொல்லமுடியாது. இந்தவருடமே மீண்டும் இங்கே வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன். நண்பர்களுடன் செல்வதில் உள்ள சிக்கல்,அவர்களுக்கு அதிக நாட்கள் செலவிடமுடியாதென்பதே. பத்து நாட்களே அவர்களுக்கு அதிகம். இங்கே வந்துசேரவே மூன்றுநாட்கள் ஆகிவிட்டன. சிக்கிம்,பூட்டான் என இணைத்துக்கொண்டது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16782

வடகிழக்கு நோக்கி- 6, திம்பு

எங்கள் பயணத்தின் வழிவிவாதங்களில் தமிழக சட்டசபையைப்பற்றி பேச்சு வந்தது. ஜெயலலிதா அந்த சட்டசபையைப் புறக்கணிப்பது சரியா என்று. நான் சரியல்ல என்றே நினைகிறேன் என்றேன். அது மக்கள் பணம். ஆனால் அது தமிழகத்தின் மிக அசிங்கமான கட்டிடங்களில் ஒன்று, தமிழகத்தின் ஆக அசிங்கமான சிலை திருவள்ளுவருக்குக் குமரியில் வைக்கப்பட்டிருப்பது. கருணாநிதி என்ற அரசிகரின் ரசனைக்கு எடுத்துக்காட்டு. விவாதம் ஏன் கட்டிடங்களை ஒரு குறிப்பிட்ட பாணியில் அமைக்கவேண்டும், விதவிதமான சோதனை முயற்சிகள் செய்தால் என்ன என்பதை நோக்கிச் சென்றது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16781