Tag Archive: தினமலர்-36

தினமலர் – 36, நிபுணர்கள் வருக!

எப்போதும் இல்லாதபடி இந்த தேர்தலில் வசந்திதேவி, சிவகாமி ஐ.ஏ.எஸ் போன்ற படித்தவர்கள் சற்று அதிகமாக போட்டியிடுகிறார்கள். வழக்கமாக தேர்தல்களில் படித்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஒரு தொகுதியை கட்சியரசியல் மூலம் தன் கட்டுப்பாட்டில் முன்னரே வைத்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதே அரசியல் கட்சிகளுக்கு வசதியானது என்று கருதப்படுகிறது. அவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் அப்படி கட்சி அரசியலில் ஈடுபட்டு ஒரு தொகுதியை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் தொழில்முறை அரசியல்வாதியாக இருப்பார். மிக இளம் வயதிலேயே ஏதேனும் கட்சிக்குள் நுழைந்து, ஒரு முன்னோடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87301

தினமலர்-36, துலாக்கோலின் முள்

மகாபாரதத்தை வைத்து அடிப்படையாகக் கொண்டு நான் எழுதும் வெண்முரசு என்னும் தொடர்நாவலில் எனக்குப்பிடித்த ஒரு வரி வரும்.  ‘அத்தனை போர்வீரரும் பூமித்தாயுடன் தான் போர்புரிகிறார்கள்’. ஏனென்றால் தொடுக்கப்படும் அம்புகளில் நூற்றில் ஒன்றுதான் எதிரியைக் கொல்கிறது. பிற அனைத்தும் குறிபிழைத்து மண்ணில்தான் வந்து தைக்கின்றன. ஆகவே போரிடும் இருதரப்புமே பூமாதேவியைத்தான் அம்பால் துளைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரங்களையும் விவாதங்களையும் பார்க்கையில் அதேபோல் ஒரு வரி தோன்றுகிறது, ‘அத்தனை அரசியல்கட்சியினரும் நடுநிலையாளர்களிடம்தான் போரிட்டுக்கொண்டிருக்கிறார்கள்’. ஃபேஸ்புக் விவாதங்களைச் சென்று பாருங்கள். மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87293