Tag Archive: தாராசுரம்

ஒரு தொல்நகரின் கதை

தமிழில் ஆண்டுதோறும் வரும் வரலாற்று நூல்கள் இரண்டுவகை. ஒன்று, வரலாறு என்றபேரில் நினைத்ததை எல்லாம் எந்தத் தர்க்க ஒழுங்குமில்லாமல் எழுதிக்குவிக்கும் எழுத்துக்கள். அவை மூன்று வகை.  திராவிட, தமிழ்த்தேசியப் பெருமிதங்களை அடிப்படையாகக் கொண்டு கொரியமொழி தமிழ்மொழியே, எகிப்தும் தமிழ்நாடே என்றவகையில் எழுதப்படுபவை ஒருபக்கம். இன்னொருபக்கம் இணையான அசட்டுத்தனத்துடன் அனைத்தையுமே சம்ஸ்கிருத, பிராமணியப் பெருமிதவரலாற்றுடன் திரித்து இணைத்துக்கொள்ளும் வரலாறுகள். முந்தைய வரலாற்றுக்கு நவீனவரலாற்றாய்வு என்னும்பாவனை உண்டு. இரண்டாவது வரலாற்றுக்கு தொன்மச்சார்பும் அதிலிருந்து கிளைத்த தொகுப்புமுறையும் உண்டு. மூன்றாவதாக இன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117123

தஞ்சை தரிசனம் – 4

அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி காலை ஓய்விடத்தில் இருந்து தாராசுரத்துக்கு கிளம்பினோம். தாராசுரத்துக்கு நான் முதன்முதலாக 1986ல் வந்தேன். அப்போது குடந்தையில் இருந்து அங்கே செல்ல ஒழுங்கான பாதையே கிடையாது. புதர்கள் அடர்ந்த மண்சாலை வழியாக ஆட்டோவில்செல்லவேண்டும். இப்போது நல்ல தார்ச்சாலை வந்துவிட்டது. ஆனாலும் அது சிற்றூர்தான் பழங்காலத்தில் குடந்தை நகரின் ஒருபகுதியும் தாரசுரமும் பட்டீஸ்வரமும் இன்னும் சில கிராமங்களும் இணைந்து பழையாறை என்று அழைக்கப்பட்டன. நீண்ட வரலாறு கொண்ட ஒரு நகரம் அது. சோழர்காலத்திலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8927