Tag Archive: தாயார் பாதம்

கடிதங்கள்

அன்புள்ள அய்யா ! நான் தங்களின் வாசகனாவேன், தற்பொழுது பணி நிமித்தமாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறேன். தங்களின் சமீபத்திய வருகையின் போது தங்களை சந்திக்க வாய்ப்பு அமையாமல் போய்விட்டது  பணிச்சூழலின் காரணமாக. தங்களிடம் நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் அதீதமாக உள்ளது. ஆனால் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மை அதனை ஒத்திப் போட்டே வந்திருக்கின்றது. இருப்பினும் கடந்த 8 வருடங்களாக எழுத நினைத்த ஒரு அறிமுகக் கடிதத்தை எழுதிவிட்ட ஒரு திருப்தி உண்டாகிறது.  இது ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81975/

வாசிப்பு – இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், நீண்ட நாள்களுக்கு பின் எழுதுகிறேன், கடந்த 3-4 மாதங்களில் 3 புத்தகம் படித்துவிட்டேன், ஆனால் எது பற்றியும், கட்டுரை வடிவில் எழுதி தொகுத்துக்கொள்ள என்னால் இந்த நாட்களில் முடியவில்லை. பின் தொடரும் நிழலின் குரல் என்னை வெகுவாக பாதித்து மனதளைவில் ஒரு பெரிய சலனத்தையும், தீவிர அமைதியையும் ஒரு சேர அமைத்து விட்டது. என்னால் அதிலிருந்து உண்மையில் மீள முடியவில்லை. உங்களுக்கு ஒரு வாசிப்பனுபவ கடிதம் எழுதி அதையும் நிறுத்தி விட்டேன். ‘படிச்சாச்சு’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77875/

தாயார்பாதம், அறம்- அஸ்வத்

அன்பு ஜெயமோகன், நலமா? அறம் தாயார் பாதம் மற்றும் யானை டாக்டர் கதைகளைப் படித்தேன். நல்ல கதைகள். தத்ரூபமாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தங்களுடைய எழுத்து வேலைச் சுமையிலும் குவியும் பாராட்டுகளிலும் என் போன்ற ஒரு வாசகனின் மடலைத் தாங்கள் பொருட்படுத்தக் கூடும் என்றால் ஆச்சர்யமே. தவிரவும் ஒரு நாளைக்கு ஆயிரம் மடல்கள் மின்னஞ்சல் பெட்டியில் வருவதென்றால் அதை நினைத்தாலே எனக்கு ஆற்றுப் போகிறது. இதில் எல்லாவற்றையும் படிப்பதற்கே பெரிய பிரயாசை தேவைப் படுகிறது. இதை உள்வாங்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76756/

ஒற்றைக்கால் தவம்

இனிய ஜெயம், இப்போது யோசித்துப் பார்த்தால், மயில் கழுத்து சிறுகதையும், தாயார் பாதம் சிறுகதையும் எதோ ஒரு புள்ளியில் பிரிக்க இயலாதபடி பின்னிப் பிணைந்திருப்பதாகப் படுகிறது. தாயார் பாதம் சிறுகதையில் பிறிதொரு சமயம் ராமனும்,பாலுவும் கழுகுமலை செல்லப்போவதற்கான லீட் வந்துவிடுகிறது. அனைத்துக்கும் மேல் மயில் கழுத்து கதையில் ராமன் எழுத்து மற்றும் சங்கீதத்தை ஒப்பிட்டு சங்கீதத்துக்கு கொடுக்கும் இடம்.இலக்கியத்தில் உள்ளது போல தீமையும் குப்பையும் இல்லாத அதி தூயது சங்கீதம் என்றே சொல்கிறார். அவரது இலக்கும் கூட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70472/

தாயார்பாதம் -கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ, இன்று உங்கள் வலைப்பதிவில் “தாயார் பாதமும் அறமும்” கடிதங்கள் வாசித்தவுடன் எனக்கு இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த ஈமெயில் எழுதுகிறேன். என் தம்பி மனைவி வழி பாட்டி, தினசரி ஹிந்து ஆங்கில நாளிதழ் வாசிக்கக்கூடியவர். இந்த பாட்டி திருமணம் ஆன புதிதில் (மிக சிறு வயதில்) இட்லிக்கு மாவு அரைக்க தெரியாததால் அவரது மாமியாரால் அவமானப்படுத்தப்பட்டதால் (அரைக்க தெரியாது ஆனால் சாப்பிட தெரியுமா?) இன்று வரை இட்லி, தோசை சாப்பிடுவது இல்லை. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66750/

தாயார் பாதமும் அறமும்

அன்புள்ள ஜெயமோகன் சார், சமீபத்தில் தங்கள் அறம் சிறுகதை தொகுப்பு வாசித்தேன். எல்லா கதைகளும் மனதை நெகிழச்செய்தன.அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் படித்தேன். அதில் பலமுறை வாசித்த கதை தாயார் பாதம். அந்த தொகுப்பிலேயே என்னை மிகவும் ஈர்த்த கதை அதுதான் என நினைக்கிறேன். It was not a straightforward story, but how can it be anything else? ராமனின் கதாபாத்திரம் அவ்வளவு gentle, hesitant, அவன் சுமந்த வடுக்கள் அவ்வளவு ஆழமாக பதிந்தவை, வேறெப்படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66539/

தாயார் பாதம்- கேசவமணி

உரையாடல்கள் மூலமாகவே கதையை நகர்த்திச் சென்று, பாட்டியைப் பற்றி அதிகம் விவரிப்புகள் இல்லாமலும், அவரின் மனக் கஷ்டத்தை வெளிப்படையாகக் காட்டாமலும் அவரது வேதனையை, துயரத்தை நாம் முழுமையாக உணரும்படி செய்திருப்பது இந்தக் கதையின் சிறப்பு. http://kesavamanitp.blogspot.in/2014/09/blog-post_8.html#sthash.lCChjMN2.dpuf

Permanent link to this article: https://www.jeyamohan.in/61402/

கலையின் வெற்றி-கடிதம்

அன்புள்ள ஜெ, எனக்கு ஜூன் 2009ல் திருமணமாகி அம்மா, மனைவி, நான் மூவரும் நான் பணிபுரியும் இடத்திற்கே வந்து குடியேறினோம். அம்மா சத்துணவு அமைப்பாளர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவள். கணவனை 23 வருடங்களுக்கு முன்பு இழந்தவள். அம்மா சிறுவயதிலிருந்தே ஓயாது வேலை செய்யக்கூடியவள். அவள் சிறுவயதில் பள்ளி விடுமுறை நாட்களில் கடலைக்காய் தொலிக்கச் செல்வதற்காக விடியற்காலையிலே எழுந்து ஏன் இன்னும் விடியவில்லை என்று காத்திருப்பவள். ஒருமுறை அவ்வாறு சென்றபோது ’ஏ புள்ள! ..இன்னும் விடியல புள்ள’ என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13549/

தாயார் பாதம், இரு கடிதங்கள்

,//அறம், சோற்றுக்கடன், வணங்கான் – போன்ற செறிந்த இலக்கியங்களைச் சரமாரித் தொடுக்கும் உங்களது அபாரப் படைப்பூக்கம், தொடர்ந்து இப்படியே பல்லாண்டு காலம் நீடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற நினைப்பே அலாதியாய் இருக்கிறது.// என்று சண்முகம் என்கிற வாசகர் உங்களுக்கு எழுதிய மனநிலையில் இருந்தேன்… தாயார் பாதம் படிக்கும் வரை. சோற்றுக்கடன் என் சொந்த வாழ்வின் நிகழ்வைக் கொண்டது, என் உறவினர் வீடுகளில் சோற்றில் கை வைக்கும் போது மறக்க முடியாத நிகழ்வுகள் அவை. எனவே அது பிடித்திருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12589/