Tag Archive: தான்சானியா

ஆப்ரிக்கர் மீதான வன்முறை

http://www.msn.com/en-in/video/news/tanzanian-woman-thrashed-stripped-paraded-india-a-racist-nation/vi-BBp5h2s?ocid=SK2MDHP   http://www.msn.com/en-in/news/newsindia/beaten-bruised-and-stripped-sushma-swaraj-deeply-pained-by-tanzanian-girls-agony-in-bengaluru/ar-BBp5gHP?li=AAggbRN&ocid=SK2MDHP ஜெ, தான்சானிய இளம்பெண் பெங்களூரில் சாலையில் இழுத்துப்போடப்பட்டு தாக்கப்பட்டதை ஒட்டி இந்தியா ஒரு இனவாதநாடு என்று சிஎன்என் ஒரு விவாதத்தை நடத்தியிருக்கிறது. இந்தவிவாதமே இந்தியாமீதான தாக்குதல் என்று ஒருபக்கம் தோன்றுகிறது. இதை ஊடகங்கள் கொண்டாடுகின்றன. இத்தகைய நிகழ்வுகள் எங்கும் உள்ளன. அதைவைத்து ஒருநாட்டை இனவாதநாடு என சொல்லமுடியுமா என்ன? சிவசங்கர் அன்புள்ள சிவசங்கர், இவ்விவாதம் இந்தியா மீதான தாக்குதல் என நான் நினைக்கவில்லை. ஊடகங்கள் இதை வெளிச்சமிட்டதும் உலக அளவில் இதை விவாதிப்பதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84342

தான்சானியாவில் தேர்தல்- அருண் மதுரா

  ஒரு நாள் எனது நிறுவனத்தின் தலைவர் அழைத்தார். அவர் தான்ஸானியாவில் வாழும் மூன்றாம் தலைமுறை குஜராத்தி. என்றால் கோபித்துக் கொள்வார். சௌராஷ்ட்ரர். தேர்தல் நிகழ்வுகள் கவலையூட்டுகின்றன. எனவே, மனிதவள மேம்பாட்டுத் துறையை அழைத்து, அனவருக்கும் சம்பளத்தை 20 தேதியே கொடுத்து விடு என்று சொன்னார். அதை நீயே அவர்களை அழைத்துச் சொல்லிவிடு என்றார்   அருண் மதுரா தான்சானியா பற்றி எழுதிய கட்டுரை  

Permanent link to this article: https://www.jeyamohan.in/83211

கீதை,தான்சானியா- கடிதங்கள்

ஜெ தான்சானியா கடிதம் படித்தேன்.நீங்கள் கூறுவது முற்றிலும் சரி.இன்று ஆப்பிரிக்காவின் முகம் வேறு. உகாண்டா, தான்சானியா, மடகாஸ்கர், காங்கோ, அங்கோலா போன்ற நாடுகள், அனைத்துத் துறைகளிலும், புதிய மற்றும் பெரிய முதலீடுகளின் சொர்க்கம்.இவ்வனைத்துமே வெளிநாட்டவர்களுடையது, இந்தியர்கள் உட்பட.அவர்களாலேயே இயலும். உங்கள் பாராட்டினைப் பெற்ற “ஏர்டெல்”, காங்கோ மக்களுக்கு தொலைத்தொடர்பு வசதியினை முழுவீச்சில் வழங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான   உள்ளுர்வாசிகள் செயலூக்கம் அற்றவர்கள்.உடலுழைப்பு மட்டுமே அவர்களிடம் உள்ளது.பழகுவதற்கு இனியவர்கள்…எளிதாக நட்பு பாராட்டுபவர்கள்.இங்கு கொடுக்கப்படும்  கல்வி, அவர்களை எங்கும் இட்டுச் செல்வதில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81982