Tag Archive: தஸ்தயேவ்ஸ்கி

தஸ்தயேவ்ஸ்கி:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், குற்றமும் தண்டனையும் படித்தேன். இரு சிறு திருத்தங்கள் 1. மகாத்மா காந்தி தேசத்துரோக  (Treason) குற்றத்துக்காக விசாரிக்கப்படவில்லை ராஜதுரோகக் (Sedition) குற்றத்துக்காகவே விசாரிக்கப்பட்டார். ராஜதுரோகம் என்பது அரசை நிந்தனைசெய்வது, அதன் அடிப்படைகளை எதிர்ப்பது. தேசத்துரோகம் என்பது தேசத்துக்கு எதிராக போர் செய்வது. தேசத்துரோகம் சிலநாடுகளில் குற்றமாகக் கருதப்படுகிறது. உதாரணமாக மாதாஹாரி ·ப்ரான்ஸில் முதல் உலகப்போர் நாட்களில் ராஜத்துரோக வழக்குக்காக மரணதண்டனைக்கு ஆளானார். ஆனால் அது பிரிட்டிஷ் சட்டப்படி பெரும்குற்றம் அல்ல. அரசுக்கு எதிராக போர் செய்தல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/563

குற்றமும் தண்டனையும்

‘குற்றம்’ என்ற ஒன்றைப்பற்றி மட்டும் விவாதிக்க ஆரம்பித்தால்போதும் மனிதகுலத்தின் பரிணாமத்தைப்பற்றி முழுமையாக விவாதித்து விடலாம் என்று தோன்றுகிறது. ராஜத்துரோக குற்றத்துக்காக காந்தி கூண்டிலேற்றப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார். அவரது சத்தியாக்ரகச் சிறையேகல் மனித நாகரீகத்தின் ஒரு பெரும் காலடியாக இன்று கருதப்படுகிறது. பகத்சிங் செய்த கொலையை காந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. அதை குற்றம் என்றே எண்ணினார். அதை புரட்சி என்று எண்ணுபவர்கள் இன்று உண்டு. கோணங்கள் மாறுபடுகின்றன. ஆனால் அன்று நிகழ்ந்த ஒரு கற்பழிப்பு இன்று எந்த தரப்பாலும் நியாயம் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/559

» Newer posts