Tag Archive: தஸ்தயேவ்ஸ்கி

படைப்பாளிகள் மொழியாக்கம் செய்யலாமா?

      ஜெ.. மொழி பெயர்ப்பாளர்களுக்கு தேவையான தகுதிகள் குறித்து சொல்லி இருக்கிறீர்கள்… அன்னியன் நாவலை முவ மொழி பெயர்த்தால் சரிப்படாது என்பது நிஜம். ஆனால் வெண்ணிற இரவுகள் அல்லது போரும் அமைதியை சுந்தர ராமசாமி மொழி பெயர்த்தாலும் சரிப் படாது என்றே தோன்றுகிறது காரணம், அப்படி செய்தால் , அதில் சுரா தான் தெரிவார்… டால்ஸ்டாயோ தாஸ்தயேவ்ஸ்கியோ தெரிய மாட்டார்கள் சோவியத் மொழி பெயர்ப்புகள் அவற்றுக்கே உரிய சில சொற்கள் வாக்கிய அமைப்புகளால் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92436

இருவகை எழுத்து

அன்புள்ள ஜெயமோகன், நான் ஏற்கனவே ஒரு முறை இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியுடன் அனுப்பி இருந்த மின் அஞ்சலுக்கு நீங்கள் பதில் எழுதியது நினைவிருக்கலாம். இந்தக் கடிதம் அது தொடர்பாக. சமீபத்தில் சிங்கப்பூருக்கு மாற்றலாகி இருக்கிறேன். இங்குள்ள நூலகங்கள் எனக்கு வியப்பளிக்கிறது. (சிறு வயதில் சென்னை நூலகத்திற்கு சென்றதோடு சரி..அதற்கு பிறகு சென்றதில்லை..இப்போது செல்ல ஆசை, அங்கு எவ்வாறு இருக்கிறது என்று பார்பதற்கு). இக்கடிதம் அதைப் பற்றி அல்ல. ஒரே நேரத்தில் எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைகளும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20571

இரண்டாயிரத்துக்குப்பின் நாவல்

உலகமெங்கும் நாவல் என்ற வடிவம் சென்றுசேர்ந்த காலம் என 1800 களின் இறுதியைச் சொல்லலாம். அப்போது அவ்வடிவத்தால் பெரிய அதிர்ச்சியை அடைந்தவர்கள் முழுக்க மரபான காவிய வாசகர்கள். உலகமெங்கும் அவர்கள் நாவலை நிராகரித்துப்பேசிய ஏராளமான பதிவுகள் உள்ளன அவர்கள் நாவலுக்குச் சொன்ன குறைகளை இப்படிச் சொல்லலாம் 1. அது தேவையற்ற தகவல்களை சொல்கிறது. அழகுணர்ச்சி அற்ற வெறும் விவரணைகளை அளிக்கிறது. 2 வாழ்க்கையைச் சொல்லவேண்டியதில்லை. வாழ்க்கையின் உச்சங்களையும் அழகுகளையும் சாராம்சத்தையும் சொன்னால் போதும் 3 அது எளிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72404

மேலும் தஸ்தயேவ்ஸ்கி

அன்பின் ஜெயமோகன், என் தஸ்தயெவ்ஸ்கி மொழிபெயர்ப்புக்கள்பற்றித் தங்கள் தளத்தில் குறிப்பிட்டிருப்பதைக்கண்டேன். மிக அண்மையில் அவரது நெடுங்கதைகள் சிலவற்றை மொழிபெயர்ப்பு செய்து முடித்திருக்கிறேன். 1.கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்-CHRISTMAS TREE AND A WEDDING 2.நேர்மையான திருடன்-HONEST THIEF 3.மெல்லிய ஜீவன்-GENTLE CREATURE தற்போது அச்சிலுள்ள இம்மூன்றும் ஒரே தொகுப்பாக மிக விரைவில் வெளிவரவிருக்கின்றன என்னும் நற்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் அன்புடன் எம்.ஏ.சுசீலா www.masusila.com பழைய கட்டுரைகள் தல்ஸ்தோயின் மனைவி தல்ஸ்தோயின் கலைநோக்கு ஓர் எளிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70432

வாழ்க்கையை காட்டுவதும் வாழ்க்கையை ஆராய்வதும்

இந்நாவலைப்படிக்க நான் முன்பு பலமுறை மேற்கொண்ட முயற்சிகள் தோற்றுவிட்டன. எனவே நாவலின் பாதகமான அம்சங்களாக எதையெல்லாம் கருதுகிறோமோ அதையெல்லாம் சாதகமாக எண்ணிக்கொள்ளாமல் இந்நாவலுக்குள் நுழைய முடியாது.முதலில் கதாபாத்திரங்களை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கலைத் தாண்டியதுமே நாம் நாவலுக்குள் அடியெடுத்துவைத்தவர்களாக ஆவோம். தஸ்தயேவ்ஸ்கி வாழ்க்கையைச் சொல்லவில்லை வாழ்க்கையை ஆராய்கிறார் என்று புரிந்துகொண்டால் மட்டுமே அவரை நெருங்கமுடியும் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்களைப் பற்றி கேசவமணி எழுதிய பதிவு.

Permanent link to this article: https://www.jeyamohan.in/63290

இலக்கியமும் நோபலும்

ஜெ சார் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற மோதியானோ பற்றி உங்கள் எண்ணம் என்ன? கருத்துக்களை எதிர்பார்த்தேன் சாமி அன்புள்ள சாமி நான் அவரை நோபல் பரிசுக்குப்பிறகுதான் கேள்விப்படுகிறேன். உடனே பாய்ந்து போய் படித்துப்பார்க்கவும் போவதில்லை. ஏனென்றால் அப்படிப் படித்த ஆசிரியர்களெல்லாம் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். இலக்கியப்பித்து ஓங்கியிருந்த காலகட்டத்தில் நோபல் ஆசிரியர்களை அப்போதே வாசித்துவிடுவேன். 1983ல் நோபல் பரிசுபெற்ற வில்லியம் கோல்டிங் என் முதல் ஏமாற்றம். அடுத்து பரிசு பெற்ற கிளாட் சீமோங் அடுத்த ஏமாற்றம். அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63684

இரண்டு வானோக்கிய சாளரங்கள்

மகாபாரதம் ராமாயணம் இரண்டையும் கொஞ்சம் நுட்பமாகவே ஒப்பிட வேண்டும். அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு என்பது புனைகதை இலக்கியத்தில் எப்போதுமே இருக்கும் அடிப்படையான ஒரு வேறுபாடாகும்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6982

ஆழமும் அலைகளும்

அன்புள்ள ஜெயமோகன், வலசைப்பறவை 6 , பகற்கனவின் பாதையில் என்று தலைப்பில் எழுதப்பட்டிருந்த கருத்துக்கள் உள்ளதை உள்ளபடி விளக்கிக் கூறுகின்றன. கு.ப.ரா. பற்றி பத்து வருடங்களுக்கு முன்பு திண்ணையில் இதே கருத்துக்களை மிதமான வார்த்தைகளில் கூறியிருக்கிறீர்கள். நாற்பது வருடங்களாக தமிழ், இந்திய, ரஷ்ய இலக்கிய நூல்களை வாசித்து வருகிறேன்.தி,ஜா.வின் சிறுகதைகள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். கடன் தீர்ந்தது, பாயசம், கொட்டு மேளம் போன்ற சிலவற்றை விரும்பி இருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு மோகமுள் வாசிக்க ஆரம்பித்து பின் முடியாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/48285

மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை…

அன்புள்ள ஜெமோ, நான் இலக்கியத்தில் ஒரு ஆரம்பவாசகன். எனக்கு இலக்கியங்களை அறிமுகம் செய்தவர் ஒரு மூத்த நண்பர். அவருக்கும் எனக்கும் இலக்கியத்தைப்பற்றி ஒரு தொடர்ச்சியான விவாதம். அவர் கதைகளில் கொஞ்சம் உணர்ச்சி இருந்தாலும் அதை ‘sentimental’ என்று சொல்லிவிடுவார். ஒரு படைப்பை வாசித்துவிட்டு நாம் மனம் கலங்கும்படி இருந்தால் அதை ‘melodrama’ என்று சொல்வார். அதேபோல அவரை நான் கூர்ந்து பார்க்கிறேன். அவர் இருபதாண்டுகாலமாக வாசிக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு கதையில் உள்ள earthly யான விசயங்கள்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47588

ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 3

தஸ்தயேவ்ஸ்கி ஓஷோவுக்குப் பிரியமானவர். தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் உள்ள மையக்கதாபாத்திரங்களில் ஒன்றான மர்மல்டோஃப் பற்றி ஓஷோ பேசியிருக்கிறார். [ஓஷோ மேலை இலக்கியத்தில் யாரையெல்லாம் கவனித்திருக்கிறார், அவர்களுடன் அவர் எந்த கீழைச்சிந்தனையாளரை இணைத்திருக்கிறார் என்பது மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது] தன்னை ஒரு கீழ்த்தரமான குடிகாரனாக, மோசடிக்காரனாக, பொறுப்பற்ற தந்தையாக, முற்றிலும் கீழ்மகனாக உணரும் மார்மல்டோஃப் தன் மீட்பர் தன்னிடம் ஒரு புனிதராக வந்தால் அவர் முகத்தில் காறி உமிழ்வேன் என்கிறான். அவரும் தன்னைப்போன்ற ஒரு பொறுக்கியாக, கையாலாகாதவராகத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27166

Older posts «