Tag Archive: தவில்

நாதஸ்வரம் தவில்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நானும் என்னுடைய நண்பர் நாகசுர வித்வான் இஞ்சிக்குடி சுப்ரமணியமும் இரண்டு நாள்களுக்கு முன்னால் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். நகைக் கடன் வேண்டுமா என்று கேட்டு ஒரு தனியார் வங்கியின் இளம் முகவர் அவரை அணுகியிருக்கிறார். சற்றுநேரத்தில் இருவரும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொண்டனர். அந்த இளைஞரின் சகோதரி இஞ்சிக்குடி சுப்பிரமணியத்திடம் திருவாரூர் இசைப் பள்ளியில் நாகசுரம் பயின்றவர். அந்த இளைஞரும் அதே பள்ளியில் தவில் கற்றிருக்கிறார். பூம் பூம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23077

மேளம்-கடிதங்கள்

ஜெ, இந்தப் பதிவு(மேளம்)வண்ணதாசன் அவர்களின் ஒரு சிறுகதையை சட்டென்று நினைவிற்கு கொண்டுவந்ததில் ஆச்சரியமில்லை. ஒரு டவுண் பஸ் பிரயாணத்தில் பல வருடங்களுக்கு முன் தனது திருமணத்திற்கு நாதஸ்வரம் வாசித்தவரை அடையாளம் கண்டு கொண்டு நினைவுகள் அங்கே போய்விடும்… ” எங்களுடைய கல்யாணத்துக்கு நாதஸ்வரம் வாசித்தவரைப்பார்த்த மாத்திரத்திலேயே அடையாளம் தெரிந்துவிட்டது. ரெண்டு தவில், ரெண்டு நாதஸ்வரம், ஒரு சுருதிப்பெட்டி, ஐந்தாறு பேர் என்று டவுண் பஸ் நெரிசலுக்குள் ஏறுவது என்பது சிரமமானதுதான். “மனுஷன் நிற்கிறதுக்கே இடத்தைக் காணோம். பிசுங்கிக்கிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22899

மேளம்

நாகசுரம், தவில் பற்றிய இசை ரசிகர்கள் பலரின் ஆதங்கத்தையும் பிரதிபலித்திருக்கிறார் கோலப்பன்-(தமிழர் மேளம்).கர்நாடக இசையின் “ராஜ வாத்தியம்” என்றால் அது நாகசுரம் தான். அதன் ஒலியின் வசீகரம் கேட்பவர் எவரையும் முதல் தீண்டலிலேயே அசைத்து உலுக்கி அடிமையாக்கும் தன்மை கொண்டது. தி ஜானகிராமன் ஒரு கதை எழுதியிருக்கிறார். அதற்கு முன் நாகசுரத்தையே கேட்டிராத ஒரு வெள்ளைக்காரர் முன் ஒரு தேர்ந்த நாகசுர வித்வான் சாந்தமு லேகா வாசிக்க அவர் திரும்பத் திரும்ப அதையே இசைக்க சொல்லிக் கேட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22793

தமிழர்மேளம்

அன்புள்ள ஜெயமோகன், தவில் குறித்த என்னுடைய கட்டுரையை உங்கள் இணையதளத்தில் வெளியிட்டதற்கு நன்றி. இதில் நான் எழுதாத ஒரு விசயம் என்னவென்றால் நாகசுரத்தையும் தவிலையும் தமிழர்கள் கைகழுவி விட்டதைத்தான். தமிழர்களின் பெயராலும், மொழியாலும் உரத்த குரலில், பொருளற்ற வாதங்களைப் பேசி அதிகாரத்தைக் கைபிடித்தவர்கள் இக் கலைகளின் புனரமைப்புக்கு உருப்படியான எந்தக் காரியத்தையும் செய்யவில்லை. கோயில்களிலும் அரசவைகளிலும் இருந்து இருந்து சபாக்களுக்குக் குடியேறிய கலைகள் பாட்டும் நாட்டியமும். நாட்டியம் ஒரு காலகட்டத்தில் தேவதாசிகளால் ஆடப்பட்டது. ஆனால் அதைப் பிராமணர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22686

தவில்

நாஞ்சில்நாடன் வீட்டுத் திருமணத்தில் தவில் பேரொலி எழுப்பியதைப்பற்றி கொஞ்சம் மனக்குறையுடன் எழுதியிருந்தேன். அதற்கு விரிவான விளக்கமாக நண்பர் கோலப்பன் சொல்வனத்தில் நல்ல ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அரிய விவரங்கள் கொண்ட கட்டுரை கோலப்பன் இதழாளர். இலக்கிய-இசை ரசிகர். குறிப்பாக தவுல்-நாதஸ்வரம் மீது அபாரமான பிரியம் கொண்டவர். அவரது சொந்த ஊர் பறக்கை. பறவைக்கரசனூர் அல்லது பக்ஷிராஜபுரம் என்று புகழ்பெற்ற பறக்கை மதுசூதனப்பெருமாள் கோயிலில் ஐந்தாம்நாள் நாதஸ்வரக்கச்சேரி பலவருடங்களாக கோலப்பனின் முயற்சியில், செலவில் நடந்துகொண்டிருக்கிறது. மிக நுட்பமாகத் தேர்வு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22634