Tag Archive: தளவாய் சுந்தரம்

எழுத்தாளர் படங்கள்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். என் ‘ஃபிலிக்கர் போட்டோஸ்ட்ரீம்’ தொகுப்பு பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருந்ததைப் படித்தேன். இதற்கு முன்பும் இரண்டு முறை என் வலைத்தளம் பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருந்தீர்கள். அப்பொழுது, அதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நன்றி சொல்வது, நான் ஏன் பிளாக் வைத்திருக்கிறேன் என்பதையும் அதைப் பரவலாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் உங்கள் எண்ணத்தையும் ஏதோ ஒருவகையில் கொச்சைப்படுத்துவதாக அமையும் என்று உணர்ந்தேன். எனவே, அதனை கைவிட்டு விட்டேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21463

எழுத்தாளர் முகங்கள்.

நண்பர் தளவாய் சுந்தரத்தின் இணையதளத்தில் நிறைய எழுத்தாளர்களின் புகைப்படங்களைப் பிரசுரித்திருக்கிறார்.தமிழின் எழுத்தாளர்களின் புகைப்படங்கள் எத்தனை அரிதானவை என்பது பலருக்கும் தெரியாது. உதாரணமாக ’இடைவெளி’ சம்பத்தின் ஒரு படத்தைக்கூட நான் பார்த்ததில்லை.ஆதவனின் ஒரேபடம்தான் சுற்றிவரும். எழுத்தாளர்களின் படங்கள் அவர்கள் குடும்பங்களில் இருக்கலாம். ஆனால் அவற்றை சேமித்து வைப்பதற்கு அவர்களின் குடும்பத்தினர் அக்கறை காட்டுவதில்லை, அவர்களின் பார்வையில் அவர் ஒரு முக்கியமானவராக இருப்பதில்லை. அந்தப் புகைப்படங்களை வாங்கிப் பிரசுரிக்க நம் இதழ்களும் முனைவதில்லை. அவர்களுக்கும் அவர்கள் முக்கியமானவர்களல்ல. அதற்குமேல், இலக்கியச்சூழலுக்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21426

ஒரு புகைப்படம்

தளவாய் சுந்தரம் குமுதத்தில் உதவி ஆசிரியர். நாகர்கோயிலைச் சேர்ந்தவர். சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார். தளவாயின் இணையப்பக்கத்தைப் பார்த்தபோது இந்த குறிப்பு கிடைத்தது. சி.எல்.எஸ் நடத்திய ஓர் எழுத்தாளர் மாநாடு புகைப்படம் அபூவமானது. இந்தப்புகைப்படத்தில் தளவாய் அடையாளம் காட்டியிருப்பவர்களை விட்டால் நான் அடையாளம் காணாக்கூடியவராக சி.சு.செல்லப்பா இருக்கிறார். சிவராம காரந்துக்கு நேர் பின்னால். இந்த எழுத்தாளர் மாநாட்டைப்பற்றி சுந்தர ராமசாமி அவரது பல குறிப்புகளில் சொல்லியிருக்கிறார். இத்தகைய புகைப்படங்களை சேகரிக்க ஓர் ஆவண இணையதளத்தை எவரேனும் உருவாக்கி நடத்தினால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6118